என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாது கையாலாகாத நிலையில் உள்ள நானும் இந்த தேசத்தில் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகின்றேன்.

முதன் முதலாக கொஞ்சம் கடுமையான சொற்களோடு கூடிய பதிவை இங்கே இடுவதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன்! மிகுந்த மனவேதனையோடு, கண்களில் கண்ணீர் நிறைந்த நிலையில் இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன் 

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாது கையாலாகாத நிலையில் உள்ள நானும் இந்த தேசத்தில் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகின்றேன்

மகளே ஆஷீபா!

மகளே ஆஷீபா! குழந்தையும் தெய்வமும் ஒன்று என கூறுவார்கள்.
இனிமேல் இந்த வார்த்தைக்கே மதிப்பு இல்லையடா என் செல்லமே! எதனாலும் மறக்க முடியாத கடும் துயரமாக போய் விட்டாயடி. குழந்தைகள் கூட வாழத் தகுதியற்ற மண்ணாக போனதடி என் தேசம். குருதி குடிக்கும் ஓநாய்களும், காம வெறிகொண்டு அலையும் சாத்தான்களும் வாழும் தேசத்தில் வந்து ஏனடி பிறந்தாய்! தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளே! பிஞ்சென்றும் பாராமல் உன் கண் முன்னே வைத்து அயோக்கிய கொடிய மிருகங்களால் இந்த பிஞ்சை வேட்டையாடும் போது நீ எங்கே இருந்தாய்?

மகளே ஆஷீபா! உன்னிடம் மன்னிப்புக் கேட்க கூட மனம் கூசுகிறது. எதற்கெடுத்தாலும் சாதி, மதம், கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் இந்த தேசத்தில் தான் இன்று நீ வேட்டையாட பட்டிருக்கிறாய். என் மகளை கொன்ற மிருகங்களே! உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்வதற்கு பால் மனம் மாறாத இந்த எட்டு வயது தேவதை என்ன பாவம் செய்தாலடா? மிருகங்களே இனி நீங்கள் பெற்ற பிள்ளைகளின் அருகில் போக கூட அருகதை இல்லையடா உங்களுக்கு. மனிதம் கொன்று மதம் வளர்த்து என்ன பயன் முட்டாள்களே! சாதி மதம் என்று நீங்கள் சாதித்தது என்ன? எட்டு வயது தேவதையை நாசம் செய்வது தான் உங்கள் வேலை என்றால் உங்கள் தலையை அறுத்து எறிந்தால் கூட தப்பில்லையடா. என் செல்ல மகள் ஆஷிபாவை கொன்று இன்று என் இந்திய தேசத்தை கலங்கப்படுத்திவிட்டீர்களடா! இதற்கு பரிகாரமாய்
உங்களின் குருதிகள் இந்த இந்திய தேசம் முழுவதும் ஓடப்பட வேண்டுமடா! இந்திய தேசமே! இந்திய தேசமே! அயோக்கிய மிருகங்களால் சிதைக்கப்பட்ட என் மகள் ஆஷிபாவற்கு என்ன நீதி கொடுக்க முடியும் உங்களால்?

எங்கே நீதி! எங்கே மனிதம்!! மனிதம் மறித்த காட்டுமிராண்டிகளின் தேசமாக மாறிவருகிறதோ என் தேசம்? நீதிக்காக முறையிடும் வாசல்கள் அனைத்திலும் ஓநாய்கள் காவல் நிற்கும் சூழலில் அநீதிகள் அகங்காரம் கொண்டு இப்படி தான் சிரிக்கும். 8 வயது சிறுமியை 7 நாள்கள் தொடர் கற்பழிப்பு செய்து தலையில் கல்லை போட்டு கொள்ளும் கொடூர அரக்கர்களின் மத்தியில் தான் நாம் வாழ்கின்றோமா என்று நினைக்கும் போது உடம்பெல்லாம் கூசுகிறது. பச்சிளம் குழந்தையின் உயிரும், உடலும் துடிதுடித்து, கதறி, கண்ணீர்விட்டு, கேட்பாரற்று தெருவில் வீசியெறியப்பட்டதை பார்த்தும். வாய்மூடி, செவிதாழ்த்தி நகர முற்படும் சாதாரன மானுட பிறவியாக நாங்கள் இருப்பதை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன்.

அந்த கொடிய மிருகங்கள் இத்தகைய குற்றத்தை செய்து விட்டு கூறிய பதில் தான் வியப்பாக உள்ளது. எங்கள் மதத்தின் மீது பயம் வரவே இத்தகைய செயலை செய்தோம் என்று. மிருகங்களே! கடவுளின் பெயரை சொல்வதற்கு கூட உங்களுக்கு அருகதை இல்லை. மதத்தின் பெயரால் நீங்கள் செய்த இது போன்ற கொடூரங்கள் உண்மையிலேயே வெறுக்கத்தக்க ஒன்று. மிருகங்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடும். மற்ற மிருகங்களை புணர்ததாகவோ அல்லது இதுபோல் குழந்தைகளை புணர்ததாகவோ அவைகள் நடந்துகொண்டதிற்கு உதாரணம் காட்டமுடியுமா? அப்படியென்றால் நீங்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். தெய்வம் குடியிருக்கும் கோயிலின் கருவறைக்குள் வைத்து நீங்கள் செய்த இத்தகைய கொடூரத்தை 8நாளாக சாட்சியாக நின்ற உன் நம்பிக்கையை எப்படி பார்ப்பது..? உங்களை போன்ற ஓநாய்கள் செய்யும் இழி செயலுக்கு கடவுள் பெயரை சொல்வதே பாவமடா! இனி நீங்கள் மனித இனம் அல்ல. உணவு உண்பதற்கு கூட தகுதியற்றவர்களடா நீங்கள்!

ஊடகங்களே ! எதற்காக இந்த மௌனம்? நிர்பயாவுக்காக எழுந்த குரல்கள் ஏன் என் மகள்ஆஷிஃபாவிற்காக எழ வில்லை. ? ஒவியாவிற்காக கூவிய நீங்கள் ஏன் என் மகள் ஆஷிபாவிற்காக வாய் திறக்க தயங்குகிறார்கள்? நாட்டை ஆளும் ஆட்சியாளர்களே! உங்களின் பெண் அமைச்சர்களாவது இந்த நிகழ்வை பற்றி வாய் திறக்க வில்லையே ஏன்? தப்பு செய்தவர் உங்கள் கட்சிகாரர் என்பதாலா? மாதர் சங்கங்களே! பீப் பாடலுக்காக போராடிய நீங்கள் ஏன் என் மகள் ஆஷிபாவிற்காக போராட முன்வரவில்லை? ஏன் வன்புணர்வு செய்யப்பட்டது முஸ்லிம் சிறுமி என்பதனாலா! மதங்களையும் , அரசியலையும் விடுத்துப் பார்த்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும் இந்த செயல். இத்தகைய கொடிய செயலுக்கு பிறகும் மௌனம் காக்கும் உங்களை போன்றவர்களின் இத்தகைய இழிவான கொடிய அரசியல் நஞ்சை விட கொடியது.

களே ஆஷிபா! உன்னை காப்பாற்ற துப்பில்லாத கோடி அண்ணன்களில் ஒருவனாக உன் நிலை கண்டு தமிழ் மண்ணில் இருந்து சிந்துகிறது என் கண்ணீர். என்னை மன்னித்து விடு.

எனது வரிகள் வலித்திருந்தால் மன்னித்து விடுங்கள்!

கண்ணீர் விழிகளோடும் , தீராத கோவத்தோடும்….

#justceForAsifa

முகம்மது ரிபாய்தீன் சேக் 

மறுமொழி இடவும்