இளையராஜா Tamil Cinema News 

இசை பழமையும் புதுமையும்

  இசை பழமையும் புதுமையும் இளையராஜா

நாளை தினமணியில் வரப்போகும் கட்டுரை ஒரு பழம்பெரும் இசையமைப்பாளர் பற்றியது. அதை எழுதும்போது ஒரு கேள்வி தோன்றியது

 

இளையராஜா  ஹிந்தியில் பழைய இசையமைப்பாளர்களுக்கு இன்றும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. எஸ்.டி பர்மன், ஆர்.டி. பர்மனெல்லாம் அங்கே கடவுள்கள். நேற்று கல்லூரியில் சேர்ந்த இளைஞன் கூட அவர்களின் பாடல்களைக் கேட்டிருப்பான். ஆனால் நம்மூரில் மட்டும் ஏன் இன்றைய இளைஞர்கள் பழையவை எவற்றையுமே கவனிக்காத தலைமுறையாக இருக்கிறார்கள்? மணி ரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் முதலிய எந்தப் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் அவர்களின் பல படங்களை நாம் பார்ப்பதில்லை. எதுவாக இருந்தாலும் புதிதுதான் பிடிக்கிறது. MSV என்றால் யார் என்று கேட்கிறோம். கே.வி. மகாதேவன் தெரியாது.. ஜி.ராமநாதன் தெரியாது.. ஸ்ரீதர் தெரியாது.. ஏன்? இயக்குநர் மகேந்திரன் யார் என்று என்னிடம் பலர் கேட்டுள்ளனர் (நான் அவரது படங்களின் உதாரணங்கள் கொடுக்கும்போது).. இளையராஜா பாடலெல்லாம் கேட்பதே இல்லை.. அவர் பழைய இசையமைப்பாளர் ஆயிற்றே என்று என்னிடம் சொல்லிய மாணவர்கள் உண்டு இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும்

     இளையராஜா பாடலெல்லாம் கேட்பதே இல்லை இது ஏன்?

இது ஒரு ரசிகனுக்கு இருந்தால்கூடப் பயவாயில்லை. ஆனால் சினிமாவுக்குள் வர விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். நான் அவர்களில் பலநூறு பேருடன் எனது திரைக்கதை வகுப்புகளில் interact செய்திருக்கிறேன். அவர்களில் 90% இளைஞர்களுக்குத் தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாது.. பழைய படங்கள் தெரியாது.. பழைய இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் ஆகிய எதுவும் தெரியாது. அவர்களின் உலகமே 2000 – 2005ல் இருந்துதான் துவங்குகிறது (சிம்பிள் கணக்கு – திரைக்கல்லூரி சேரும் வருடத்துக்கு முந்தைய பத்து வருடங்களில் இருந்து). அப்படி இருக்கலாம்தான். ஆனால் விட்டுப்போன எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டாமா? பழையது தெரியாமல், ஹிஸ்டரி தெரியாமல் எப்படி ஒரு துறைக்குள் வர இயலும்?

update செய்துகொள்ளும் விருப்பம் இன்றைய உலகில் இல்லவே இல்லை என்பதே என் முடிவு. அப்படி அப்டேட் செய்துகொள்ளாமல் ரசனையை வளர்த்திக்கொள்ளவும் முடியாது என்றே கருதுகிறேன். ஒன்றிரண்டு படங்கள் ரசனையை வளர்த்தாமல் தாக்குப்பிடிக்கலாம். அதன்பின் மிகக்கடினம் என்பது என் கருத்து.

Just wanted to express this. . . as an observation.

#Screenwritingtips_Karundhel

 

Related posts

%d bloggers like this: