இடிதாங்கி செயல்படும் விதம்கட்டுமான தொழில் 

இடிதாங்கி செயல்படும் விதம்

இடிதாங்கி செயல்படும் விதம்
இடிதாங்கி 

இடிதாங்கி செயல்படும் விதம்

 இடிதாங்கி செயல்படும் விதம்! யரமான கட்டிட அமைப்புகளின் உச்சியில் ஒரு உலோகத்தாலான கம்பி பொருத்தப்பட்டிருப்பதை கவனித்திருப்போம். அந்த கம்பியின் மேல்முனையில் கம்பி மூன்று கிளைகளாக இருப்பது, வெறும் கம்பியாகவே இருப்பது, உலோகக் குமிழ் அமைப்பு அல்லது முக்கோணம் போன்ற அமைப்பு வடிவங்களில் இடம் பெற்றிருப்பதை பார்த்திருப்போம். அந்தக் கம்பி போன்ற அமைப்பான இடிதாங்கி கட்டிடத்தின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானதாகும்.

இடி தாக்குதல் என்பது மின்சாரத்தால் தாக்கப்படுவது போன்றதாகும். சாதாரணமாக நமது வீடுகளில் பயன்பாட்டில் உள்ள மின்சாரமானது 220 முதல் 240 வோல்ட் அளவில் இருக்கும். அந்த அளவு மின்சார அதிர்ச்சியே நம்மை செயலிழக்க வைக்கக்கூடியது. மின்னலின் மூலமாக பூமிக்கு கடத்தப்படும் மின்சார அளவானது பல்லாயிரக்கணக்கான வோல்ட் என்ற நிலையில் அதன் தாக்கம் நிச்சயம் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
குறைந்த விலையில் வங்கி அடமான சொத்துக்கள் வாங்க வேண்டுமா
இடிதாங்கி செயல்படும் விதம்

மின்னல் தாக்குதல்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள 18–ம் நூற்றாண்டிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. மின்சாரத்தை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்கிளின் என்ற அறிஞர்தான் இடி தாங்கியையும் கண்டுபிடித்தவர் ஆவார் தற்போது உபயோகத்தில் உள்ள இடிதாங்கி அமைப்புகள் அவரது கண்டுபிடிப்புதான்.இடிதாங்கி செயல்படும் விதம்

கட்டிடங்களின் உச்சியில் பொருத்தப்படும் உலோகத்தாலான இடிதாங்கி, செம்புக்கம்பிகள் கொண்ட ஒயர்களால் இணைக்கப்பட்டு, தக்க பாதுகாப்பு அமைப்புடன் கீழே பூமிக்குக் கொண்டு வரப்படுகிறது. அவை பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள பெரிய செப்புத் தகட்டோடு இணைக்கப்படும். இந்த அமைப்பின் மூலமாக கட்டிடத்தை மின்னல் தாக்கும்போது உச்சியிலுள்ள உலோகக் கம்பியானது மின்கடத்தியாக செயல்பட்டு அந்த மின்சாரத்தை பூமிக்குள் அனுப்பிவிடும். அதனால்  கட்டிடம் மின்னலால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது  குறைந்த விலையில் வங்கி அடமான சொத்துக்கள் வாங்க வேண்டுமா

Related posts

Leave a Comment

%d bloggers like this: