இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்  உயிர் எடுக்கும் பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது. மனிதனாயப் பிறப்பெடுத்தவன் மட்டுமே இறைவனை அடையக் கூடிய வாய்ப்பினைப் பெறுகிறான்.,

வாழ்க்கை ஒரு வாய்ப்பு என்று உணராதவர்கள் மனிதர்கள். அற்ப சுகத்துக்காக தேடியலைந்து தனது தெய்வாம்சத்தை தொலைத்துவிட்டவர்கள். ஸ்தூல உடலைப் பயன்படுத்தி நீ என்னென்ன காரியங்களைச் செய்தாய் என அல்லா பார்க்கிறான். பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமாவது உனக்கு ஏற்பட்டு இருக்கிறதா என்பது மிக முக்கியம்

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்

மரணம் பல்வேறு வழிகளில் நம்மை வந்தடைகிறது. நோயை அனுப்புகிற அல்லா கருணை மனதோடு அதை குணப்படுத்தவும் செய்கிறான். அல்லா மனிதர்களுக்கு ஏதோவொரு வழியில் மரணத்தை உணர்த்திக் கொண்டே இருக்கிறான். வாழ்க்கையின் நிலையாமையை ஏதோ ஒருவர் தான் உணருகின்றனர். அல்லா செம்படவனாக இருக்கிறான் வலையில் சிக்கிக் கொண்ட மனிதக்கூட்டம் தான் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது

மனிதன் தோன்றி மறையும் நீர்க்குமிழி போன்றவன். அல்லா ஒருவனே மதங்களுக்கப்பாற்பட்ட கடவுளாக இருக்கிறான். நாளை என்ன நடைபெறும் என்பதை அவன் ஒருவனே அறிந்திருக்கிறான். இருக்கும் இடத்தைவிட்டு எங்கெங்கோ தேடியலைபவர்கள் இறுதியில் அல்லா தான் கடவுள் என்று கண்டுகொள்வார்கள். அல்லாவை ஏற்றுக் கொண்டவர்கள் தான் வானில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருப்பது. மறுமை நாளில் நீ யாருடைய துணையுமின்றி தான் அல்லாவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இறையச்சம் கொண்டவர்களை மட்டுமே அல்லா சுவனத்தில் இடமளிக்கிறான்

மரணத்திற்கு பிறகான நிலையை மனிதனால் ஊகிக்க முடிந்தது, கற்பனை செய்து பார்க்க முடிந்தது, தோராயமாக இப்படித்தான் என கற்பிதம் செய்ய முடிந்தது. வானை முட்டும் ஆலயங்கள் கட்டியதற்கு மரணத்தின் மீதுள்ள அச்சமே காரணமாக அமைந்தது. உண்டியலில் காசுபோட்டால், ஹோமம் வளர்த்தால், பரிகாரம் செய்தால் மரணத்திலிருந்து தப்பிவிடலாமா என்று தான் மனிதன் முயன்று பார்க்கிறான். மரணத்தை நிகழ்த்துபவர்கள் நீ எப்படி பூவுலகில் வாழ்ந்தாய் என்ற கோப்பை படித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு நீ பேரரசனா அல்லது பிச்சைக்காரனா என்பது முக்கியமில்லை.

மரணத்தின் போது மட்டுமே அல்லா கைவைத்துப் பார்க்கிறான். பாவத்தை சம்பாதித்த ஜீவன் தான் அப்படி வாழ்ந்ததற்காக தன்னையே நொந்து கொள்ளுகிறான். பூவுலகில் உனக்கு பெண் மீது மோகமிருந்தால், உன்னிடம் யுவதியைக் கொடுத்துவிட்டு உன் நிம்மதியை பிடுங்கிக் கொள்கிறான். நீ ஏமாற்றி சம்பாதித்த பணம் எல்லாம் நீ மரணிக்கும் போது உனக்குத் துணைவருமா? அழகான மனைவியால் மயானம் வரைக்காவது வர முடியுமா? புத்தகத்தில் வியாக்கியானத்தை நீ எழுதலாம், உன்னுடைய வாழ்க்கைப் புத்தகத்தின் முன்னுரையையும் முடிவுரையையும் அல்லா தான் எழுதுகிறான்

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்  10 written By ப.மதியழகன்

 

Chennai Property Ads 

Related posts

%d bloggers like this: