நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்ற புத்தகம்Tamil Political news 

ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி !

ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி !

ஒரு பக்கம் ரஜினி போட்டோ இன்னொரு பக்கம் நரேந்திர மோடி போட்டோ என்றால் நாம் தமிழ்நாட்டின் முடிவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது” என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.குருமூர்த்தி.

தமிழ்நாட்டின் ‘முடிவு’ என்று எதை இவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து, விழிப்படைந்து விட்டதால், “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கக்கோரிய போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி உள்ளது.
இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணராது தமிழகத்திற்கு வந்த மோடிக்கு காட்டப்பட்ட கருப்பு கொடியும் ரஜினியின் அரசியல் வரவை தள்ளிப் போட்டு வைத்திருக்கிறது. 

“ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?” என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்ட ஒரு காலம் முடிந்துவிட்டது.

“ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதை தள்ளிப் போட்டுள்ளார்” என்ற செய்தி பரபரப்பாக விவாதிக்கப்படாமல்,

“நீ வந்தால் என்ன? வராவிட்டால் எனக்கென்ன?” என்று தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது.

சமீப கால நிகழ்வுகளை கவனிக்கும் பொழுது, மாற்று அரசியலை நோக்கி தமிழ் மக்களே நகர ஆரம்பித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இதில் ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி நேரடியாக மக்கள் களத்தில் நின்றால் அம்மணமாக்கப்படுவார்கள் என்பதே இன்றைய தமிழக அரசியலுக்கு கிடைத்துள்ள வெற்றி!

©Yuma JAHARO [தமிழச்சி]
14/04/2018

#அரசியல் | #ரஜினி | #மோடி | #ஆர்எஸ்எஸ் | #குருமூர்த்தி | #காவிரி_மேலாண்மை_வாரியம் |

Related posts

Leave a Comment

%d bloggers like this: