1-800-999-9999 — hi@loremipsum.com

காமராஜர் நாடார்  காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்!

காமராஜர் நாடார்  காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்!

காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என மட்டும் சொல்லிகொண்டிருக்கும் கூட்டமும் சேர்ந்து ஒரு பெரும் புரளியினை கிளப்புகின்றன‌  இந்த மாலை நேர கொசுகூட்டம் போல அவைகளின் ரீங்காரம் பல இடங்களில் கேட்கின்றன‌

அவை என்ன சொல்கின்றன? காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார், அவர் ஒரு தமிழன் துரோகி, தேசிய துரோகி, வஞ்சகன், சூதன் என ஒரே குற்றசாட்டுகள்

உண்மையில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என்ன?

காமராஜரை விட பெரும் பாரம்பரியங்கள் இருந்தன  காந்தி, ராஜாஜி , நேரு, கிருபாளினி, சாஸ்திரி என ஏகபட்ட பேர் உண்டு

இவர்களில் யாருக்காவது சமாதி என நீங்கள் கேட்டதுண்டா?

தேசப்பிதா உடலே எரியூட்டபட்டது, நேருவின் உடல் எரிக்கபட்டு இந்தியா எங்கும் சாம்பல் தூவபட்டது

சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என யார் உடலும் தப்பவில்லை, எல்லாமே தீக்கு இரையாக்கபட்டது

அந்த இடத்தில் வருடாவருடம் வணங்குவார்களே தவிர அங்கு கல்லறை என்று ஏதுமில்லை

அந்த பாரம்பரியபடி காமராஜர் உடலும் எரிக்கபட்டதே அன்றி வேறு ஒன்றுமல்ல‌

அதுவும் கலைஞர் அன்று செய்த காரியங்கள் அவர் மேல் எதிரிக்கும் மரியாதை வரும் விஷயங்கள்

கலைஞரிடம் ஒரு சுபாவம் உண்டு, கருத்து ரீதியாக ஒருவரை எதிர்பாரே அன்றி, அந்த நபரை வெறுக்கமாட்டார். அபிப்பிராய பேதங்களை தாண்டி அவர் விட்டு நல்லது கெட்டதற்கு முதல் ஆளாக வருவார்

காமராஜர் இறந்தவுடன் முதல் அஞ்சலி அவர்தான் செலுத்தினார், அந்த இரவில் அஞ்சலிக்கான இடத்தில் மண்டியிருந்த முட்களை அகற்றும்பொழுது அங்கேதான் இருந்தார்

அந்த இரவு அவர் தூங்கவில்லை, நாட்டின் தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்தார்

இந்திரா வந்து அஞ்சலி செலுத்தும்பொழுது காமராஜர் உடலை வணங்கி நின்ற கலைஞரை மறக்க முடியாது

கலைஞர் மேல் காமராஜரை எதிர்த்த சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவரின் உடலுக்கு கலைஞர் செய்த அஞ்சலியும் அந்த தகணத்தில் அவர் காட்டிய மரியாதையும் காங்கிரசாருக்கே அவர் மேல் பெரும் மரியாதை வர காரணமாயிற்று

அதை கலைஞரின் பரம்பரை பகைவர்கள் கூட மறுக்க முடியாது

கட்சி பாரம்பரியபடி , குடும்ப பாரம்பரியபடி காமராஜரின் உடல் எரியூட்டபட்டதே அன்றி வேறல்ல‌

பெரியாருக்கே கல்லறை இல்லை என்பது எல்லோருக்கும் மறந்துவிடுகின்றது

ஆனால் அண்ணா விஷயம் வேறு

அவருக்கு ஏகபட்ட தொண்டர்கள் இருந்தார்கள், இன்றும் இந்தியாவில் ஒரு தலைவனின் இறுதி ஊர்வலத்தில் பெரும் திரள் மக்கள் திரண்டார்கள் எனும் பெருமை அண்ணாவிற்கே

சென்னை கடற்கரையும் அண்ணாவும் பிரிக்கமுடியாதவை, அங்கேதான் அண்ணா முழங்குவார், ஆலோசனை கூட்டம் நடத்துவார், கூட்டம் முடிந்தபின்னும் கடலருகே அமர்ந்திருப்பார்

அவர் எந்த இடத்தில் முழங்கினாரோ அங்கே புதைக்கபடலாம் என கட்சியினர் முடிவெடுத்தபின்பே அங்கு
புதைக்கபட்டார் அண்ணா

ஆயினும் அண்ணாவின் மனைவியோ அவரின் பிள்ளைகளோ அப்பக்கம் புதைக்கபடவில்லை என்பதும் கவனிக்கதக்கது

அண்ணா அவர்களின் பிதாமகன், காங்கிரஸில் காந்திக்கே
சமாதி இல்லை எனும்பொழுது காமராஜருக்கு யாரும் கோரவில்லை

காங்கிரஸ் ஒருமாதிரி கட்சி, ஏன் திருப்பெரும்புதுர் ராஜிவ் நினைவிடத்திற்கு கூட காங்கிரசார் அதிகம் செல்லமாட்டார்கள்

ஏன் என்றால் அதுதான் தமிழக காங்கிரஸ்.

ஆனால் அண்ணாவிற்கு கட்சி அபிமானம் அப்படி இருந்தது, கூடவே மாற்றுகட்சியினரும் அவர்மேல் மரியாதை கொண்டிருந்தனர்

மிகபெரும் நினைவாலயம் அவர் சாம்பலை பாதுகாக்கும் இடமாக அமைக்கபடவேண்டும் எனும் கோரிக்கை அவர் உடலை புதைத்து முடிந்தது

காமராஜருக்கு அப்படி கோரிக்கை வைக்கவும் கட்சியில் யாருமிலை, அப்படி பட்ட விஷயங்கள் அவர்கள் சிந்தையிலுமில்லை

ஆனால் பின்னாளில் காமராஜர் வாழ்ந்த வீட்டை வாங்கி அதை நினைவாலயமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை கலைஞரால் முதலில் வைக்கபட்டது

ஆனால் மிசாவில் அவர் அரசு டிஸ்மிஸ் ஆக, பின்னர் வந்த ராமசந்திரன் அதை செய்தார்

கலைஞர் அரசு நீடித்திருந்தால் கலைஞரே அதனை செய்திருப்பார், வள்ளுவர் கோட்டம் திறக்கவே வாய்ப்பில்லாத கலைஞருக்கு இதுவும் வாய்க்கவில்லை

இந்த சமாதி விஷயங்களிலே சோகத்திலும் காமெடி செய்தது அதிமுக‌

அந்த ராமசந்திரன் இறந்ததும் அடிமை கூட்டம் திகைத்தது, அவருக்கு சாவே இல்லை என எண்ணிகொண்டிருந்த கூட்டம் அழுதது அதைவிட அவர் முகம் இல்லாமல் எப்படி வோட்டு
வாங்குவோம் என கதறிற்று

அன்று அவைகளுக்கு ஜெயா, சசிகலா, எடப்பாடி, பன்னீர் என பலர் வருவார் என அசரீரி ஒலிக்கவில்லை என்பதால் அவர்கள் அழுதனர்

இதில் ஒரு அடிமைக்கு விபரீத ஐடியா வந்தது, சக அடிமைகளிடம் ஓடியது

தலைவர் யார் புரட்சி தலைவர், புரட்சியாளர்கள் எல்லாம் புதைக்கபட்டார்களா, ரஷ்ய லெனின், மாவோ, ஹோசிமின் போல தலைவர் உடலையும் பதபடுத்தி மசோலினியம் கட்டலாம் என சொன்னது

இதை மற்ற அடிமைகளும் உற்சாகமாய் வரவேற்றன, தேர்தலில் அந்த உடலை இழுத்துகொண்டு போகும் ஐடியாவும் பளிச்சிட்டது

உடனே ரஷ்யாவில் சீனாவில் எல்லாம் எவ்வளவு செலவாகும் என விசாரிக்க தொடங்கினார்கள், விஷயம் டெல்லிக்கு சென்றது

டெல்லி மகா சீரியசானது, இந்த கேவலமான திட்டத்தை கைவிட்டு அவரை புதைக்க பாருங்கள், இதெல்லாம் இந்திய யதார்த்ததிற்கு சரி இல்லை என மிரட்ட உடனே அடக்கம் செய்தார்கள்

டெல்லி மிரட்டல் இல்லை என்றால் இந்நேரம் ராமசந்திரனின் அழியா உடலருகே ஜெயா உடலும் அழியாமல் இருந்திருக்கும்

டெல்லி தமிழகத்திற்கு உருப்படியாக செய்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று

ஆக காந்திக்கும் நேருவிற்கும் கல்லறை இல்லா தேசத்தில் காமராஜருக்கு கல்லறை இல்லை அதை கலைஞர் கெடுத்தார் என சொல்வது ஒன்று தும்பியாக ஒருக்க வேண்டும் இல்லை அடிமை கூட்டத்தில் ஒருவராகவே இருக்க வேண்டும்

கொஞ்சமேனும் வரலாறு தெரிந்தவன் அப்படி பேசமாட்டான்

இது ஒருமாதிரி தமிழ்நாடு

மெதுவாக எவன் காதிலாவது சில்க் ஸ்மிதாவிற்கு பாரத ரத்னா கிடைக்க இருந்தது கலைஞர் கையெழுத்திடவில்லை என சொன்னால் போதும்

சில்க் எதிரி கலைஞர் ஒழிக என கண்ணில் பொறிபறக்க கிளம்புவார்கள், அவர்கள் அப்படித்தான்

 

காமராசர் உடல் அவர் குடும்ப வழக்கப்படி, விருப்பப்படி எரியூட்டப்பட்டது. தகன மேடை அமைக்கும் பணியை கூட இரவு/பகல் பாராமல் கண்விழித்து பார்த்தவர் தலைவர் கலைஞர். ஆதாரம் காமராசரின் இறுதி மரியாதை நிகழ்ச்சிகள் You tubeல் காணக்கிடைக்கிறது.
அப்படியிருக்கையில் எப்படி மெரினாவில் புதைக்க முடியும்? மேலும், அப்போது அனைத்து தலைவர்களையும் மெரினாவில் அடக்கம் செய்யும் நடைமுறை அல்ல. பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒருவருடைய உடல் மட்டுமே மெரினாவில் புதைக்கப்பட்டிருந்தது. மெரினா வழக்கத்தை தொடங்கியதே அதிமுகதான்!
ஆக, காமராசர் உடல் அவர் குடும்ப வழக்கபடி எரியூட்டபட்டபோது, மெரினாவில் புதைக்க அவசியமேயில்லை. கலைஞர் பற்றி பொய்யான தகவல்களை வாட்ஸ் அப் வதந்திகளாக பரப்பும் போதே தெரிகிறது இது பிஜேபியின் இழி அரசியலென்று. பிஜேபியின் முடிவுரையை எழுத தமிழர்கள் ஆயத்தமாகிவிட்டனர்

 

தமிழக அணைகளின் நாயகன் கருணாநிதி
——————————————————
👉🏿 தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த, 21 ஆண்டுகளில், 36 அணைகளை கட்டி மக்களின் குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்தார்.

👉🏿கருணாநிதி முதல்வராக இருந்தபோது விவசாயத்தின் மீதும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டினார். தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள், 115. அதில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின், கட்டப்பட்டவை 90.

👉🏿 சுதந்திரத்திற்கு பின், ஐந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே தான், காங்., ஆட்சியில், 19 ஆண்டு களில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, ஓராண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

👉🏿 முதல்வராக இருந்த கருணாநிதியின் விடாமுயற்சியால், அவர் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், உப்பாறு, மேல் ஆழியாறு, சோலையாறு, மணிமுக்தா நதி, சிற்றாறு, கீழ்கொடையாறு, மேல்கொடையாறு , கடனா, பரப்பலாறு, ஹைவேவிஸ், மணலாறு, பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, ஆனைக்குட்டம், அடவிநயினார் கோவில், செண்பகத்தோப்பு, இருக்கன்குடி உள்ளிட்ட, 36 அணைகள் கட்டப்பட்டு அவற்றை பாசனம், குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

👉🏿 தேனி மாவட்டத்தில், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகளை பார்வையிட்டும், திறந்தும் வைத்தார்.

கருணாநிதி ஆட்சியில் அணைகளே கட்டப்பட்டவில்லை ‘ என்று வதந்தியை பரப்பியவர்களே இன்று பட்டமளிக்கிறார்கள் – “தமிழக அணைகளின் நாயகன் கருணாநிதி” .

Dinamalar

திமுக – அதிமுக ஆட்சியில் கட்டபட்ட அணைகள் :

http://www.india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Dams_in_Tamil_Nadu

கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டங்கள்:
https://goo.gl/xwscdm

%d bloggers like this: