நில உரிமை சட்டம்

சில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்

பட்டா வாங்குவது மிக அவசியம்

சில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்

1)

சில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள், பிரிவு – 21 – எந்தவொரு ஆவணமும் தமிழ்நாட்டிற்கு வெளியே பதிவு செய்யப்படும்போது அவை பதிவுச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரண்பாடாக இருந்தால் அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது.

Panchavarnam Vs The District Registrar
2016-3-CTC-61

சட்ட பிரிவுகள்
சட்ட பிரிவுகள்

பதிவுச் சட்டம் பிரிவு

2) பிரிவு – 47 – பதிவுச் சட்டம் பிரிவு 47 ன்படி கிரைய ஆவணமானது அது நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து தான் செயல்பாட்டிற்கு வரும். பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து வராது.

Chakrapani Vs Adimoolam
2015-1-CTC-359

3) பிரிவு – 49 – இந்தப் பிரிவு துணை நோக்கங்களுக்காகப் பதிவு செய்யப்படாத சில ஆவணங்களை சான்றாவணமாகக் குறியீடு செய்வதற்கு அனுமதிக்கிறது.

Muniappa Gounder Vs P. Dhanasekaran
2015-1-CTC-363

4) பிரிவுகள் – 17&49 – இந்தப் பிரிவுகளின் படியான ஒரு ஆவணத்தைக் குறியீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது என்பதற்காகவே அந்த ஆவணத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகக் கருதக்கூடாது. வழக்கின் தரப்பினர்கள் அந்த ஆவணத்தின் உண்மைத் தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

Solai Vs Periyakaruppan and Others
2015-1-LW-134

5) பிரிவு – 49 – பதிவு செய்யப்படாத ஆவணங்களைத் துணை நோக்கங்களுக்காக நீதிமன்றத்தில் குறியீடு செய்ய முடியும்.

Ramalingam and Others Vs Ramachandran
2015-1-LW-137

6) பிரிவு – 47 – பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை ஆவணத்தைக் குறியீடு செய்ய முடியாது.

Ramalingam Vs Ramachandran
2015-1-MWN-CIVIL-480

7) குடும்ப ஏற்பாடு அல்லது பாகப்பிரிவினை ஆவணமானது நிறைவேற்றப்படும் காலத்தில் தரப்பினர்களுக்கு ஏதேனும் உரிமையை ஏற்படுத்தினால், அந்த ஆவணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் தரப்பினர்களுக்கிடையே ஏற்கனவே இருக்கும் உரிமையைப் பொறுத்து அந்த ஆவணங்கள் ஏற்பட்டால் பதிவு செய்யத் தேவையில்லை.

M. Basker Vs Sub Registrar, Padappai
2015-2-MLJ-408

8) பிரிவு – 34(B) – 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் பிரிவு 34(B) ன்படி பொது அதிகார ஆவணத்தில் முகவர் மற்றும் முதல்வர் இருவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரிவு 34(B) ஆனது முன்னோக்கி செயல்படக்கூடியது. பின்னோக்கி செயல்படக்கூடியதல்ல. எனவே இந்தத் திருத்தத்திற்கு முன்பு உள்ள பொது அதிகார பத்திரம்குறித்த செயல்பாட்டை இது பாதிக்காது.

Ashokan Vs State reb by the Commissioner of police, Chennai
2015-3-CTC-807

Comments

0 comments

Related posts

வாடகை ஒப்பந்தம்  பொதுவான நடைமுறைகள்

admin

கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

இப்போது வீட்டுக் கடன் எப்படி வழங்கப்படுகின்றன

%d bloggers like this: