பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லைTamil Political news 

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லைபாஜக அடுத்த ஜனநாயக படுகொலையை நிகழ்த்த தயாராகிவிட்டது! நிகழப்போகும் இடம் கர்நாடகா  பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. 104 இடங்கள் தான் கிடைக்கும் போல தெரிகிறது. பெரும்பான்மை பெற 111 இடங்களில் வெற்றி பெற வேண்டும்

 காங்கிரஸ் கட்சி  தயாராக உள்ளது

காங்கிரஸ் கட்சி ஜனதா தளத்தை ஆதரிக்க தயாராக உள்ளது, கூட்டணி பேசி முடித்து விட்டார்கள், அவர்களின் தற்போதைய எண்ணிக்கை 114. ஆனால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா, என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொம்மை வழக்கில் அதிக எண்ணிக்கையுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் அளிக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள்

அதே உச்ச நீதி மன்றம் கோவா சட்டபேரவை தேர்தல் வழக்கில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அறுதிப்பெரும்பான்மை வைத்திருக்குமேயானால், அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்று சொல்கிறது. இங்கே பிரச்னை என்னவென்றால் என்ன உருண்டு புரண்டாலும் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை 

எதாவது கட்சியை உடைத்தால் தான் உறுப்பினர்கள் தேறுவார்கள். என்ன செய்யப்போகிறார் கவர்னர் என்பது அனைவரும் அறிந்ததே! பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து விட்டு, எம்ல்ஏக்கள் விலை பேசப்படுவார்கள்! வோட்டு எண்ணிக்கை இன்னும் முடிவடையாதலால், பாஜக இன்னும் கீழே சென்றால் இந்த கூத்துக்கள் நடக்க வாய்ப்பிருக்காது! பொறுத்திருந்து பார்ப்போம் 

Saravanan Anna Durai

Related posts

Leave a Comment

%d bloggers like this: