மீண்டும் ஒரு அதி பயங்கர சதுரங்க வேட்டை மோசடி

 மீண்டும் ஒரு அதி பயங்கர சதுரங்க வேட்டை மோசடி

மீண்டும் ஒரு அதி பயங்கர சதுரங்க வேட்டை மோசடி நம்புங்கள் இதை செய்வது ஒரு மாற்று திறனாளி முழுவதும் படிக்கவும் : “ஒருத்தனை ஏமாத்தணும்னா அவங்கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது. அவனோட ஆசையை தூண்டனும்.” சதுரங்க வேட்டை சினிமாவில் வந்த உண்மையான வரிகள்.

அதனைபோன்றே சத்தமே இல்லாமல் ஒரு மோசடியை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். கும்பகோணத்தைச் சேர்ந்த ALC Naturals என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் தான் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுவருகிறது. இதனுடைய MD பழனி. இவருடைய மூலதனமே இவருடைய ஊனம்தான். எதிரே பேசும் எவறையும் தன்வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவரான இவருக்கு அனைத்து மோசடி நிறுவனங்களின் இயக்குனர்களை போல ஒரு சோக கதை உண்டு. அது நமக்கு தேவையில்லை.

இவர்கள் நிறுவனம் எவ்வாறு மோசடி செய்கிறார்கள் என்று காண்போம்.

முதலில் இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்தில் கூட்டம் நடைபெறும். அங்கே நீங்கள் இண்டர்வியூவில் கலந்து கொள்ள ₹50/- கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன் பிறகு அச்சு பிசகாமல் என்ன நடக்கும் என்பதை கீழ்கண்ட வீடியோவில் காணலாம்.

சுருக்கமாக கூறினால் இவர்களுடைய நிறுவனத்தில் இணையும் நபர்கள் முதலில் ₹2000/- செலுத்த வேண்டும். பின்பு மேலும் இருவரை அறிமுகப்படுத்த வேண்டும். இது போல் நீண்ட சங்கிலி பயணத்தில் உங்களுக்கு மாத வருமானமாக ₹127500/- கிடைக்கும் என்பதே இவர்களுடைய ஏமாற்று தந்திரம்.

மீட்டிங்கில் பலவித ஆதாரங்களாக காட்டும் இவர்கள் அவையனைத்தும் எந்த வித பேங்க் ஸ்டேட்மென்டோ அல்லது வேறு ஏதெனும் அரசு ஆவணங்களோ கிடையாது. அனைத்தும் இவர்களால் தயாரிக்கப்பட்ட நகல்கள். இந்த மீட்டிங்கில் இவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளில் ஒன்று எனது கார் வெளியில் நிற்க்கிறது. சேர்ந்த 10 மாதத்தில் நான் கார் வாங்கிவிட்டேன். என்னால் முடிந்தது உங்களால் முடியாதா? இது போன்ற வார்த்தைகள்தான்.

இவர்கள் குறி வைப்பது முழுக்க முழுக்க நடுத்தர வர்க்க இல்லத்தரசிகளும், அப்பாவி மாணவச்செல்வங்களும்தான்.

குறிப்பாக கும்பகோணம், திருவாரூர், தஞ்சை, நாகைப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம் நபர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனென்றால் ஏமாற்றப்பட்ட பின் காவல்துறையை நாடினால் உங்களுக்கு எந்த பயணம் இல்லை. அதுமட்டுமில்லாமல் நீங்கள் செலுத்தும் தொகை ₹2000/- என்பதால் அதற்க்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்று தூக்கி போட்டுவிடுவீர்கள்.

நம்முடைய பணம் பல ஆயிரம் கோடி இந்த மோசடிக்காரனிடம் உள்ளதால் ஆளும் அரசும் காவலர்களும் இவர் ஏவும் வேலையை மட்டுமே பார்ப்பார்கள்.

எனவே உடனடியாக இதனை படிக்கும் நண்பர்கள் இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிர வேண்டும்.

 Thanks for Social Writter மீண்டும் ஒரு அதி பயங்கர சதுரங்க வேட்டை மோசடி

மறுமொழி இடவும்