மேலை நாட்டு முறை உள் அலங்காரத்தில் மாற்றம்

மேலை நாட்டு முறை உள் அலங்காரத்தில் மாற்றம்
மேலை நாட்டு முறை உள் அலங்காரத்தில் மாற்றம்

வீட்டிற்கு வருகிற விருந்தினர்களை காபியோ, டீயோ கொடுத்துத்தான் பெரும்பாலும் வரவேற்கிறோம். ஜப்பான் போன்று நாடுகளை போன்று நம் நாட்டில் தேநீர் அறையென்று தனியாக எதுவுமில்லை. வரவேற்பு அறையைத்தான் தேநீர் அமர்ந்து பருகும் அறையாக பயன்படுத்துகிறோம். வரவேற்பறையை ஏகப்பட்ட உள் அலங்காரங்களால் அழகுபடுத்தி வைக்கிறோம்.

தேனீர் அறை அலங்காரம்

ஆனால் தேநீர் அறை அமைப்பதற்கு அவ்வளவு மெனக்கெட தேவையில்லை. எளிமையாக அதை வடிவமைக்கலாம்.

ஜப்பானிய தேநீர் அறையின் எளிமையும், தூய்மையும் ஜென் மடங்களை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. தேநீர் விருந்தை போலவே தேநீர் அறையின் அமைப்பும் முக்கியமானது. ‘தி புக் ஆப் டீ’ என்று ஆங்கிலத்தில் தேநீரின் புத்தகத்தை எழுதிய ஒக்ககூரா காக்குஜோ என்ற அறிஞர் தேநீர் அறையை அலங்கரிப்பதைப் பற்றி தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார்.

தேநீர் அறையைக் குறிக்கும் சுக்கியா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு கற்பனையின் உறைவிடம் என்று அர்த்தம். தேநீர் குடிக்கிற இடத்தில் கற்பனைக்கு என்ன வேலை என்கிறார்களா? அறைக்குள் இடம்பெற்றிருக்கும் அலங்காரங்களில் சில அரைகுறையாய் காட்சியளிக்கும். விடுபட்ட அலங்காரங்களைக் கற்பனையால்தான் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

அலங்கார பொருட்களில் கவனம்

உதாரணத்திற்கு, அறையில் கலைப் பொருட்களை ஒரு பக்கத்தில் வைப்பது போல எதிர் பக்கத்தில் வைக்கக்கூடாது. மேலும் அறையில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருட்கள் ஒரே வர்ணத்தை கொண்டவையாகவோ ஒரே வடிவத்தை உடையவையாகவோஇருக்கக் கூடாது. உண்மையான மலர் ஒன்று வைக்கப்பட்டால் மலரின் படம் வைக்கக்கூடாது.

சமையலறையிலும் மற்ற இடங்களிலும் ஒன்றுபோல பொருட்களை அடுக்குவது மேலை நாட்டினர் கடைபிடிக்கும் முறை. இது மீண்டும், மீண்டும் ஒரேமாதிரி பார்க்கிற அலுப்பைக் கொடுப்பதால் ஜப்பானியர்கள் இந்த முறையை விரும்புவதே இல்லை.

உள் அலங்காரத்தில் மாற்றம்

வீட்டு வரவேற்பறைகளை பொருட்காட்சி சாலை போல அலங்கரிப்பதும் மேலை நாட்டு முறைதான். ஜப்பானிய உள் அலங்கார முறை இதற்கு முற்றிலும் மாறானது. அதன்படி தேநீர் அறை பார்ப்பதற்கு கவர்ச்சியாய் இருக்காது. அதன் அமைதியைக் கெடுக்கும் விதமாக பகட்டான வண்ணம் இருக்காது.

கலை ரசனையைத் திருப்தி செய்யும் விதத்தில் ஏதாவது ஒரு அலங்காரப் பொருள் மட்டுமே அங்கு முதன்மையாக வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பொருளைத் தவிர அங்கு வேறெந்த அலங்காரமும் இருக்காது. அப்படி கூடுதலாக ஏதேனும் பொருட்கள் இருந்தால் அது கவனத்தை சிதறடிக்காத வகையிலேயே இருக்கும்.

அறையின் மேன்மை மேலை நாட்டு முறை உள் அலங்காரத்தில் மாற்றம்

மொத்தத்தில், ஜப்பானியர் வீடுகளில் தேநீர் அறை மிகவும் எளிமையாகவும் அலங்காரத்தில் அடக்கமாகவும் இருப்பதால் அது அந்நியர்கள் கண்ணுக்கு வெறும் அறையாகத்தான் தோன்றும். ஒரு அறையின் மேன்மையை அதன் காலி இடங்களில்தான் காணமுடியும் என்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கிற தத்துவம்.

தேநீர் அறையில் ஒவ்வொரு விருந்தினரும் தங்களது கற்பனைக்கு ஏற்றவகையில் மொத்த தோற்றத்தையும் மனதிலேயே உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதான். சுக்கியா என்ற வார்த்தை ஐந்து பேர் அமர்ந்து தேநீர் அருந்தும் அறையைக் குறிக்கிறது.

அலங்காரத்தில் வித்தியாசம்  மேலை நாட்டு முறை உள் அலங்காரத்தில் மாற்றம்

அப்படி தனியறை அமைக்க வாய்ப்பு இல்லாத ஜப்பானியர்கள் வீட்டின் வரவேற்பு அறையிலேயே ஒரு பகுதியை ஓவியம் வரைந்த மறைப்புத் தட்டியால் தடுத்து தேநீர் அறையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது கக்கோஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஜப்பானிய மொழியில் அடைப்பு என்று அர்த்தம். சுக்கியாவுக்கும் கக்கோஸுக்கும் இடையே உயர்வு தாழ்வுகள் இல்லை. வரவேற்பறை அலங்காரத்தில் வித்தியாசம் காட்ட விரும்புபவர்கள் ஜப்பானிய தேநீர் அறையின் அமைப்பை முயற்சித்துப் பார்க்கலாம்   Get High Price On Your Property To Sell

மறுமொழி இடவும்