1-800-999-9999 — hi@loremipsum.com

திரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார்?

திரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார்? மகா கேவலம்!

திரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம்! அதுசரி கேவலமானவர்களின் வழிதோன்றலாய் நிற்கும் போது சுயமரியாதையற்று சொரணையற்று திரியும் போது தாம் வகிக்கிற பதவியின் பெருமை தெரியாமல் தரைடிக்கட் லெவலுக்கு பேசுகிறார்.. அதுவும்,ஸ்டாலின் திரு.குமாரசாமியிடம் பேசவேண்டுமாம்.. கூடவே தமிழுக்குதான் ஏதுமே செய்யவில்லையென்று சொல்லி அரிப்பை சொரிந்துக்கொள்கிறார்

திமுக தமிழுக்கு செய்ததென்ன என்போரே

திமுக தமிழுக்கு செய்ததென்ன என்போரே எம் மொழிக்கு பாஜக அரசால் மறுக்கபட்ட செம்மொழி தகுதியை பெற்று தந்ததே திமுக தான்.. அதைப்பற்றியெல்லாம் அரைடவுசர் போட்டுக்கொண்டு சொரிந்து கொண்டு நிற்கும் பொன்னருக்கு தெரியாமல் இல்லை.. சரி.. ஏன் ரஜினி படத்திற்கு வக்காலத்து வாங்க வேண்டும்.. தனி மனிதரின் வியாபாரத்திற்காக மத்திய அமைச்சர் ஏன் (புரோக்கர்) தரகு வேலை பார்க்கவேண்டும்.. மத்திய அமைச்சராக வேறு ஏதும் பணி இல்லையென்றால் ராஜினாமா செய்யவேண்டியது தானே.. ஏற்கனவே மக்கள் செல்வாக்கில்லாத பாப்பாத்திக்கு காபினெட் பதவி தந்துவிட்டு .. பார்த்தாலே தீட்டென்று ஒதுக்கிவைத்த சமூகத்தவரென்பதால் ..
ஒன்றுக்கும் உதவாத இ.அமைச்சராக்கியது மானமுள்ளவராக இருந்தால் வெளியேறி இருக்கவேண்டும்
..
அது ரஞ்சித் படம் எனவே ஏன் எதிர்க்கிறீர் என கேட்டு பார்த்து .. அதற்கு தக்கபதிலை .. ரஞ்சித் எனும் கலைஞனின் திறமை வேறு படங்களில் வெளிபடுத்தலாம் அவரின் படமாக இது இருக்காது ரஜினியை முன்னெடுக்கும் படமென்பதும்.. திடீரென புறப்பட்டு பாஜகவின் குரலாய் ஒலித்தவரின் திமிருக்கு திருப்பி அடி கொடுக்கவேண்டுமென்பதற்காக காலாவை தோல்வியுற செய்வது அவசியமாகிறது.. என்றவுடன் .கர்நாடகாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் திரையிட மறுப்பதும், மிக பெரிய பின்னடைவை தரும் அதனால் தான் .. ரஜினியின் பழைய இயக்குனர்கள் இப்போது களம் இறங்கி அவர் போராட்டமே வேண்டாமென சொல்லவில்லை என சப்பை கட்டுகிறார்கள்..
எதுவாகினும் அதற்கான விளக்கத்தை ரஜினி தரவேண்டுமே,தவிர மற்றவர்கள் அல்ல.. எம் மக்களை பார்த்து சமூகவிரோதி என்று சொன்ன பரதேசி (பரதேசி என்றால் பிழைக்க வந்தவன் என பொருள்) பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

ரஜினிபட விநியோகஸ்தர்

குமரி மக்கள் குறிப்பாக நாடார் சமுகம் பொன்னரை வெற்றிப் பெற வைத்தது அவரோடிருந்த மரியாதை காரணமாகவே தவிர வேறில்லை அதை அவரே கெடுத்துக் கொள்கிறார்.. தன் சமூக மக்களின் உயிருக்கு உலையாக வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட அவரே முன்னின்று போராடி இருக்க வேண்டும் அதைவிடுத்து போராடிய மக்களை சமூகவிரோதியென்ற சாக்கடைக்கு வக்காலத்து வாங்குவது கேடுகெட்ட நெறிகெட்ட செயல் .. பாஜகவில் இருப்போரிடம் சுயமரியாதையை மனித தன்மையை எதிர்பார்க்க முடியாது கொஞ்சமேனும் ஈரமிருந்திருந்தால் ரஜினிக்கு பரிந்து பேச வந்திருக்கமாட்டார்..
இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது .. ரஜினிக்காக பேசிகிற எல்லோருமே பாஜகவினராக பார்பனனாக .. அல்லது சுயமரியாதை இழந்தவராக இருக்கிறார்கள்..
ஸ்டாலினை பார்த்து .. ஒரு சினிமாவிற்காக பேச சொல்லும் இவர் .. 13 பேர் சுட்டுக் கொல்லபட்டார்களே அதற்காக .. ஏன் இரங்கலை தெரிவிக்கவில்லையென பிரதமர் மோடி பார்த்து கேட்க துப்பில்லை .. ஜனநாயக கடமையை திமுக ஆற்றவேண்டுமாம்.. இந்தியாவிலேயே மிக சிறந்த ஜனநாயகத்தை கொண்ட இயக்கம் திமுக தான் .. அதிகபட்ச ஜனநாயக நெறிமுறைகளை கொண்ட கட்சி.. திமுக குறைகூற இங்கே பொன்னருக்கென்றில்லை எவனுக்குமே அருகதை இல்லை..
..
கலைஞர் எனும் மிகச் சிறந்த ஜனநாயகவாதி .. தலைமைக்கே தனித்துவம் சொல்லும் பேராற்றல் அரசியலுக்கே இலக்கணத்தை கற்பிற்கும் ஆசான் தலைமைப் பண்பின் இலக்கணமாய் திகழும் ஒப்பாரற்ற தலைவர் கலைஞரின் தலைமையில் தொடர்ந்து இயங்கும் .. ஜனநாயக பேரியக்கம் திமுக.. அதை குறைச்சொல்ல கூட ஒரு தகுதி வேண்டும் அது சொரணையற்ற பொன்னருக்கு இல்லை
..
ஆலஞ்சியார்

%d bloggers like this: