‘ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

  ‘ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில்தான் உலகமே இயங்கிக்கொண்டுள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்த, மின்சாதன அமைப்புகளை பொருத்தும்போது, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கவனித்து செயல்படுவது அவசியம். வீடுகள் கட்டமைக்கும்போது அல்லது அதற்கு பிறகு மின்சாதனங்களை பொருத்தும்போது கவனிக்க வேண்டிய அமைப்புகள் பற்றி மின்சார பொறியியல் வல்லுனர்கள் தரக்கூடிய ‘டிப்ஸ்கள்’ பற்றி பார்க்கலாம். 1) அல்டர்னேட்டிங் கரண்ட் (ஏ.சி) மற்றும் டைரக்ட் கரண்ட் (டி.சி) சர்க்யூட்கள் தனித்தனி ‘ஒயரிங்’ அமைப்பாக இருக்க வேண்டும். ‘டி.சி’ சர்க்யூட்டில் ‘பாசிட்டிவ்’ மின்னோட்டத்தை குறிக்க சிவப்பு நிறத்திலும், ‘நெகட்டிவ்’ மின்மோட்டத்தை குறிக்க ‘கருப்பு’ நிறத்திலும் குறிப்பிட வேண்டும். 2) ‘ஏ.சி’ மின் இணைப்பில் மூன்று பேஸ்களையும் முறையே, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய கலர்கள் கொண்டு குறிப்பிடுவது…

Read More

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு

  சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு சுற்றுப்புற வெப்ப நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொளுத்தும் வெப்பத்தால் வீடுகள் பாதிக்கப்படாமல், ‘குளுகுளுவென்று’ இருக்க பல்வேறு கட்டுமான யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அத்தகைய முறைகள் பற்றியும், வெயிலின் பாதிப்பை தவிர்க்க உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கும் வழிகள் பற்றியும் கவனிப்போம். உயரமான மேற்கூரை பொதுவாக, வீடுகளின் மேல் தளங்களில் உள்ள அறைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல் தளம் ஆகியவற்றில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக பகல் நேரம் மட்டுமல்லாமல், இரவிலும் அறை வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அதை தவிர்க்க நமது தாத்தா, பாட்டி காலங்களில் ‘சீலிங்’ எனப்படும் கட்டிட மேல் கூரையை வழக்கத்தை விடவும் உயரமாக கட்டியிருப்பார்கள். அந்த…

Read More

சொந்த வீடு வாங்கிய பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

சொந்த வீடு வாங்கிய பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்  பல்வேறு சிரமங்களுக்கு பிறகு சொந்தமாக ஒரு தனி வீடு அல்லது அடுக்குமாடி வீட்டை வாங்கியதோடு வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்தது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகும் முக்கியமாக கவனிக்க வேண்டிய பல நடைமுறைகள் இருப்பதை ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். அவர்கள் தரக்கூடிய பல்வேறு தகவல்களில் சில முக்கியமான குறிப்புகளை இங்கே பார்க்கலாம். அவற்றை நடைமுறையில் செயல்படுத்துவது நமது சொத்துக்களுக்கான பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும். பெயர் மாற்றம்   வீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியவுடன் உடனடியாக சொத்து சம்பந்தப்பட்ட பெயர் மாற்றங்களை செய்து கொள்ளவேண்டும். மின்சார இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் செய்வது பற்றியும் கச்சிதமாக செயல்பட வேண்டும். மேற்கண்ட வேலைகளை செய்து தருவதற்கு…

Read More

வீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம்

 வீட்டு கடன் சுலப வட்டியில் பெறலாம்  இன்றைய சூழலில் வங்கிகள் வீட்டு கடன் உள்ளிட்ட மற்ற கடன்களை குறைவான வட்டி விகிதத்தில், எளிதாக வழங்குவதற்கான சூழல்கள் ஏற்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் சமீபத்தில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பழைய உயர் மதிப்புள்ள நோட்டுக்களை பொதுமக்கள் வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருகின்றனர். அதன் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் வங்கிகளில் குறுகிய காலத்தில் ‘டெபாசிட்’ ஆக செலுத்தப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக வங்கிகளின் பண இருப்பானது அதிகரித்திருக்கிறது. ரொக்க இருப்பு விகிதம் எல்லா வங்கிகளும் சி.ஆர்.ஆர் எனப்படும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகித அளவை ரிசர்வ் வங்கியில் பராமரித்து வரவேண்டும் என்பது நடைமுறையாகும். அந்த ரொக்க இருப்பு விகித அளவுக்கு மேல் கையிருப்பாக உள்ள பணத்தை வைத்துத்தான் வங்கிகள் கடன்…

Read More
கட்டுமானப் பொருள் தமிழக ரியல் எஸ்டேட் 

சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி

சென்னை மாநகரில் அனுமதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள் போன்ற நில உபயோக விவரங்கள் அனைத்தும் சி.எம்.டி.ஏ அமைப்பின் இணைய தளத்தில் (http://www.cmdachennai.gov.in) நில அமைவு தகவல் முறையின் (ஜியாகிரபிகல் இன்பர்மேஷன் சிஸ்டம்) அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகிய தகவல்களையும் இந்த இணைய தளத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம்.சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி குறிப்பிட்ட பகுதிகளில் எந்த வகையான கட்டுமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்ற விவரத்தையும் இணைய தளத்தின் உதவியோடு தெளிவாக தெரிந்துகொள்ளலாம். எனவே குடியிருப்புக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் வீட்டு மனை விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருநகர பகுதிகள் சி.எம்.டி.ஏ அமைப்பானது சென்னை பெருநகரப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதியை வழங்கிவருகிறது. சென்னை பெருநகரப் பகுதி என்பது சென்னை…

Read More

வைக்கோலில் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்

கட்டுமானத் துறையில் பல்வேறு விதமான புதிய பொருள்கள் அறிமுகமாகி வருகின்றன. உதாரணமாகக் கட்டுமானக் கல்லாகப் பெரும்பாலும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அவற்றுக்கு மாற்றாகச் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுக் கற்கள் பயன்படத் தொடங்கியிருக்கின்றன. உதாரணமாகப் பறக்கும் சாம்பலில் தயாரிக்கப்படும் ப்ளாக் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இப்படியான புதிய மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் இன்று நடைபெற்றுவருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டைல் தயாரித்தல், கூரைகள் தயாரித்தல் ஆகிய முறைகள் இன்றைக்குக் கண்டுபிடிக்கப்பட்டு, புழக்கத்துக்கும் வந்துள்ளன. அப்படியான கட்டுமானப் பொருள்களுள் ஒன்றுதான் ‘கிரீன் வுட்’. இதைக் கண்டுபிடித்தவர் 18 வயதான பிஸ்மன் என்னும் பள்ளி மாணவி. பிஸ்மன் குடும்பத்துக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு அருகில் விவசாய நிலங்கள் இருந்தன. அவர்கள் கோதுமையும் நெல்லும் பயிரிட்டுவந்தார்கள். ஐந்து டன் நெல்லுக்கு ஒரு டன் வைக்கோல் கிடைக்கிறது.…

Read More

வீட்டின் மாடிப்படி அமைக்கும் விதம்

வீட்டு மாடி படிக்கட்டுகளுக்கிடையில் உள்ள இடைவெளி சமமாக இருக்க
வேண்டும். படிக்கட்டுகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கக்
கூடாது.

Read More

எளிமையாக வீட்டை வடிவமைப்பதில் புது டிரெண்ட்

சாப்பிடும் அறை

Read More