ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் கட்டுமான தொழில் 

ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்

ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் தேவை என்ற நிலையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆற்று மணலை விடவும் பல மடங்கு சிக்கன செலவில் கிடைக்கும் புதிய மணல் ‘பெரோ சேண்ட்’ (Ferro Sand) அல்லது காப்பர் ஸ்லாக் (Copper Slag) எனப்படுகிறது. காப்பர் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து தினமும் பல ஆயிரம் டன் காப்பர் பார்கள் தயாரிக்கப்படும்போது, அதன் துணைப்பொருளாக கிடைக்கும் உலோக மணல் ‘பெரோ சேண்ட்’ ஆகும். பல்வேறு பயன்பாடுகளை கொண்ட அந்த மணலை கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்த இயலும் என்று அறியப்பட்டுள்ளது. மணலுடன் கலக்கலாம் ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்  பெரோ சாண்ட் 25 சதவிகிதம் மணலுடன் கலந்து சுவர் கட்டுமானத்திற்கும், கான்கிரீட் அமைக்க மணலுடன் 50 சதவிகிதம் கலந்தும், சாலைகள் அமைக்க மணலுடன்…

Read More

கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் அம்சங்கள்

கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் அம்சங்கள் 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு கட்டுமானத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக பல்வேறு முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ரியல் எஸ்டேட் வல்லுனர்களும் இனிமேல் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். பில்டர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆகிய இரண்டு தரப்பிலும் பல நன்மைகளை தரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அந்த சலுகைகள் பற்றி இங்கே காணலாம். *அரசின் நிதிநிலை அறிக்கையில், முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தின்கீழ் மலிவு விலை வீடுகளுக்கான மானியம் மற்றும் வீடுகளுக்கான பரப்பளவு கணக்கீடுகளை உயர்த்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *கட்டுனர்கள் தங்களது ‘புராஜெக்டுகளின்’ கட்டுமான பணிகளை முடித்து ஒரு வருடம் கழித்து அவற்றிற்கான வாடகை வரியை செலுத்தினால் போதுமானது என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

Read More
கட்டுமான தொழில் 

ஆற்று மணல் சூறையாடப்படுகிறது / Read M Sand News in Tamil

ஆற்று மணல் இந்த விவகாரத்தை இப்போதுதான் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. ஆற்று மணல் சூறையாடப்படுகிறது என்றெல்லாம் உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (Manufactured sand  Or Artificial sand Manufacturing) பயன்படுத்தச் சொல்லி உத்தரவு போட வேண்டும் என்பது அந்த வழக்கின் சாரம். மிக முக்கியமான முன்னெடுப்பு இது. இது ஏதோ இன்றைக்கு எடுக்கப்படுகிற முன்னெடுப்பு போலச் சொல்லப்படுகிறது. உண்மையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இதுகுறித்த விவாதங்கள் கட்டுமானத் துறையில் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு லோடு மணல் 25000 ரூபாய் அளவில் 2012 இல் விற்கப்பட்டபோது இந்தத் துறையில் இருப்பவர்கள் எம் சாண்ட் குறித்து…

Read More

கட்டுமான தொழில் செய்ய விருப்பமாக இருக்கின்றீர்களா

நீங்கள் கட்டுமான துறையில் கட்டுமான தொழில் செய்ய விருப்பமாக இருக்கின்றீர்களா நீங்கள் கட்டுமான துறையில் ஒரு வணிகத்தை தொடங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றீர்களா? ஆம் என்றால், இங்கே சில எளிய கட்டுமானம்பற்றிய உதாரணங்கள் உள்ளன,  நீங்கள் கொஞ்சம் ஆர்வமும் முதலீடும் செய்தலே போதும் தொழில் தொடங்க முடியும் ஒரு கட்டுமான தொழில் தேர்வு செய்யும் முன் பணம் மட்டும் இருந்தால் மட்டும் போதாது ஆர்வமும் கொஞ்சம்மும் அசராத உழைப்பும் தேவை படும், இன்று அசுர வளர்சீ அடைத்துக்கொண்டு இருக்கும் தொழில்களில் கட்டுமான தொழிலும் ஒன்று அதற்க்கு என்றுமே தொய்வு இருக்க போவது இல்லை , அதில் பல்வேறு வாய்ப்புகள் எப்பதுமே இத்தொழில் செய்வோருக்கு எதிர் நோக்கி இருக்கிறது , நீங்கள் ஆரம்பிக்க போகும் தொழிலில் நிபுணத்துவம் உள்ளவராக இருக்கவேண்டும் மற்றும் நன்கு திறன் உள்ள வேலை ஆட்களை நியமிக்க…

Read More

வீட்டின் பாதுகாப்பு அழகிய தடுப்பு வேலிகள்

பொதுவாக வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு அழகான ‘காம்பவுண்டு கேட்’ அமைக்கப்படும். அதற்கு அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு கண்கவரும் தோற்றத்துடன் பராமரிக்கப்படுவது வழக்கம். ‘காம்பவுண்ட் கேட்’ வீட்டின் தலைவாசலுக்கு நேராக இருப்பதால் அதன் அமைப்பு மற்றும் ‘டிசைன்’ ஆகியவற்றோடு வீட்டு உரிமையாளர்கள் சுற்றுப்புறத்தில் அமைக்கப்படும் வேலி பற்றியும் கவனம் கொள்கிறார்கள். தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அமைக்கப்படும் வேலிகள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம். சுற்று சுவர் அவசியம் தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய எதுவாக இருந்தாலும் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்று சுவர் அமைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல இடங்களில் வீட்டின் கட்டுமான பணிகளோடு சேர்த்து செங்கலால் சுற்று சுவரை அமைப்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ‘பட்ஜெட்’ உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேவ்வேறு வகையான கட்டுமான பொருட்கள் கொண்டும்…

Read More

வீடுகளுக்கு அவசியமான மின் அதிர்ச்சி தடுப்பு

  மின் அதிர்ச்சி தடுப்பு  மின்சாரம் இல்லாத உலகத்தை கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு நமது இன்றைய வாழ்க்கை முறைகள் அதனோடு ஒன்றிவிட்டன. மின்சாரம் ஒரு ஆபத்தான சக்தி என்ற நிலையை தாண்டி அதை அன்றாட உபயோகங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் பெரும் நன்மைகளை மனித சமூகம் பெற்று வருகிறது. தவிர்க்க இயலாத சக்தியாக மாறிவிட்ட மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டிய அவசியமான சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் நவீன முறைகள் பற்றி தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். மின் பாதிப்பை தடுப்போம் எதிர்பாராத மின்சார தாக்குதல் காரணமாக உடலின் மத்திய நரம்பு மண்டலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதன் காரணமாக தசைகள் சுருங்கி, எதிர்ச்செயல் காரணமாக சம்பந்தப்பட்டவர் தூக்கி எறியப்படவும் வாய்ப்புள்ளது. அத்தகைய மின்சார பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க கருவியாக இருக்கும் ‘ஆர்.சி.டி’…

Read More

மழைக்கால பராமரிப்பிற்கான டிப்ஸ்

கட்டமைப்புகளுக்கு வெயில் கால பராமரிப்புகள் ஒரு விதமாக இருக்கிறது என்றால், குளிர் காலத்திற்கான பராமரிப்புகள் வேறு விதமாக இருக்கிறது. பெரும்பாலானோர் வீடுகளுக்கு ஏதாவது சிக்கல்கள் வந்தால் மட்டுமே பராமரிப்புகளை செய்ய வேண்டும் என்ற மன நிலையில் இருப்பதை கட்டிட பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது சிக்கலின் தன்மையை அதிகப்படுத்துவதோடு, பராமரிப்புக்கான செலவுகளும் அதிகமாகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரணமாக உண்டாகும் சிறு விரிசல்கள், ஓதம், மழை நீர் தேங்குவது போன்ற பாதிப்புகளாலும் கட்டிடங்கள் பாதிப்படைகின்றன. உடல் நலம் கருதி நாம் ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ செய்து கொள்வது போன்று வீடுகளுக்கும் சரியான கால அளவுகளில் பராமரிப்புகளும், பரிசோதனைகளும் முக்கியம். அதன் மூலமாக செலவுகளின் அளவு குறைகிறது என்று கட்டிட பொறியாளர்கள் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும். பராமரிப்பிற்கான ‘டிப்ஸ்’  மழைக்கால பராமரிப்பிற்கான டிப்ஸ் 1.…

Read More

சொந்த வீடு கட்டுவோருக்கு ஐம்பது குறிப்புக்கள்

  சொந்த வீடு கட்டுவோருக்கு 50-ஐம்பது  குறிப்புக்கள் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..சொந்த அனுபவம் அல்லது படிப்பினை! 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால்…

Read More

சிக்கன செலவில் நிலத்தடி நீர்த்தொட்டி

வெயில் தகிக்கும் கடும் கோடையாக இருந்தாலும், குளிர் வாட்டும் பனிக்காலமாக இருந்தாலும் வீடுகளில் தண்ணீர் பயன்பாடு கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான் இருக்கிறது. வீட்டு உபயோகத்துக்காக தண்ணீரை சேமிப்பது பழைய காலம் முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. பெரிய அளவில் மண் பாத்திரங்கள் அல்லது உலோக அண்டாக்கள் வீடுகளில் வைக்கப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் உள்ள குளங்களில் இருந்து தண்ணீரை எடுத்தும் நீருக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது. ‘பிளாஸ்டிக் தொட்டிகள்’ நாகரிகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் தண்ணீரை சேமிக்க பல வழிகள் கையாளப்பட்டு வருகின்றன. ‘ஓவர்ட் ஹெட் டேங்க்’ எனப்படும் மேல்நிலை நீர்த்தொட்டி, தரை மட்ட அளவில் அமைக்கப்படும் நீர்த்தொட்டிகள் மற்றும் நிலத்தடி நீர்த்தொட்டிகள் ஆகிய மூன்று விதங்களில் நீரை சேமிப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. ‘கான்கிரீட்’ அமைப்புகளாக இருந்த தொட்டிகள் பயன்படுத்துவதில் உள்ள எளிமை…

Read More

போன்சாய் கலை கட்டுமான செய்திகள்

எவ்வளவு பெரிய தேவையையும் மிகக்குறைந்த பொருள், இடம், நேரம் மற்றும் ஆற்றலைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வது ஜென் தத்துவத்தின் ஒரு கோட்பாடு. இயற்கையான சூழலில் பரந்து விரிந்து வளரும் தாவரங்களை, தொட்டிகளில் வைத்து வளர்க்கும் போன்சாய் கலை இந்த கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது. சீனாவில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்போது, அரண்மனைத்  தோட்டத்தில், அனைத்து மரவகைகளையும் நட இடமில்லாமல் போனது. எனவே மரங்களை வளர்க்கும் மாற்று வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோட்டக்கலை நிபுணர்கள் ஈடுபட்டனர். இப்படித்தான் தட்டுகளில் மண் பரப்பி, மரக்கன்றுகளை நட்டு அவற்றை சிறிய வடிவில் வளர்க்கும் கலை தோன்றியது. தொடக்கக் காலத்தில் சீனர்கள் இக்கலையை ‘பென்ஜிங்’ என்று அழைத்தனர். இம்முறையில் சீன தேசத்தில் வளரக்கூடிய கிட்டத்தட்ட எல்லா மரவகைகளையும் அரசரின் தோட்டத்தில் வளர்த்து வந்தனர். விரைவில் பொதுமக்களும் கலையால் கவரப்பட்டு, தங்களது வீடுகளில் சிறுமரங்களை வளர்க்க…

Read More