இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் Tamil Cinema News 

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும்

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது “16 வயதினிலே” படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது.    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும்…

Read More
நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் Tamil Cinema News 

கடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..!

கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல போராட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பதிப்புகள் என்று தொடர் நிகழ்வுகளை நடத்திமுடித்திருக்கிறோம். காவேரி பிரச்சனை, கர்நாடக வெறியாட்டம், கருப்பு பண ஒழிப்பு, விவசாயிகள் தற்கொலை, இந்துத்துவ எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டங்கள், அடக்குமுறைகள், வழக்குகள், நெடுவாசல், புத்தகவெளியீடுகள், காணொளிகள், ஈழத்திற்கு எதிரான ஐ,நா தீர்மானம், மீனவர் படுகொலை, கீழடி, ரேசன்கடைகள் மூடப்படுதல் மற்றும் இதர போராட்டங்கள் என தொடர்ந்த நிகழ்வுகள் நடந்து முடிந்தவை. அரசின் கடுமையான நெருக்கடிகள், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பான திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள், அலுவலகப் பணியில் நீடிக்க இயலாத நிலையினை சந்தித்த தோழர்கள் என பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து போராட்டங்களை தோழர்கள் அச்சமின்றி எதிர்கொண்டு முன்னகருகிறார்கள்.…

Read More
Tamil Cinema News 

நாடார் சமுதாயம் Nadar Caste History

                   நாடார் சமுதாயம் தமிழ்நாட்டில் தன்னம்பிக்கையாலும், தன் உழைப்பாலும், ஒற்றுமையாலும் உயர்ந்த ஒரு சமுதாயம் எனில் அது நாடார் சமுதாயம் , இந்தச் சமுதாயத்தின் இன்றைய நிலை ஓர் இரவில் உருவானதல்ல. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட அடிமை சங்கிலியை உடைத்து அவர்கள் கடந்து வந்த ரத்தச் சரித்திரம். அவர்களின் வரலாறினைக் கொஞ்சம் பார்ப்போம் நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர் ஆரம்பத்தில் இவர்கள் சாணர்கள் என்றே அழைக்கப்பட்டனர். சாணார்கள் பிறப்பிலே பழங்குடியினர். மேலும், சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், இந்து சமயத்தின் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும், சிறுதெய்வ வழிபாட்டினையே…

Read More
அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் Tamil Cinema News 

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்  ஒரு அமெரிக்க பயணிகள் விமானம் நடுக்கடலில் சுட்டு வீழ்த்தப் படுகின்றது  அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் படுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது ஒரு பயங்கரவாத தாக்குதலாக கண்டிக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்காக அழுதிருக்கும். ஒவ்வொரு வருடமும் தவறாது நினைவுகூரப் பட்டிருக்கும். ஆனால், சுட்டு வீழ்த்தப் பட்டது ஈரானிய பயணிகள் விமானமாகவும், அதை சுட்டவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருந்தால்? வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே, இன்றைக்கும் யாருக்கும் தெரியாது. அப்படியே அறிந்திருந்தாலும், அதை யாரும் பயங்கரவாதம் என்று சொல்ல மாட்டார்கள். 3 juli 1988 அன்று, ஈரானில் உள்ள பண்டர் அப்பாஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஈரான் எயர் விமானம், துபாய் நோக்கி பறந்து கொண்டிருந்தது.  வளைகுடாக்…

Read More
இளையராஜா  Tamil Cinema News 

இசை பழமையும் புதுமையும்

  இசை பழமையும் புதுமையும் இளையராஜா நாளை தினமணியில் வரப்போகும் கட்டுரை ஒரு பழம்பெரும் இசையமைப்பாளர் பற்றியது. அதை எழுதும்போது ஒரு கேள்வி தோன்றியது   இளையராஜா  ஹிந்தியில் பழைய இசையமைப்பாளர்களுக்கு இன்றும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. எஸ்.டி பர்மன், ஆர்.டி. பர்மனெல்லாம் அங்கே கடவுள்கள். நேற்று கல்லூரியில் சேர்ந்த இளைஞன் கூட அவர்களின் பாடல்களைக் கேட்டிருப்பான். ஆனால் நம்மூரில் மட்டும் ஏன் இன்றைய இளைஞர்கள் பழையவை எவற்றையுமே கவனிக்காத தலைமுறையாக இருக்கிறார்கள்? மணி ரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் முதலிய எந்தப் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் அவர்களின் பல படங்களை நாம் பார்ப்பதில்லை. எதுவாக இருந்தாலும் புதிதுதான் பிடிக்கிறது. MSV என்றால் யார் என்று கேட்கிறோம். கே.வி. மகாதேவன் தெரியாது.. ஜி.ராமநாதன் தெரியாது.. ஸ்ரீதர் தெரியாது.. ஏன்? இயக்குநர் மகேந்திரன் யார் என்று என்னிடம் பலர் கேட்டுள்ளனர் (நான் அவரது படங்களின்…

Read More
Tamil Cinema News 

அடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே

  சத்யராஜ் பாகுபலி சத்யராஜ் பாகுபலிக்கு சம்பளம் வாங்கி விட்டார், கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகாமல் போனால் அவருக்கு எதுவுமில்லை ஆனால் ரியாலட்டி என்னன்னு யோசிக்கணும், ராஜமௌலி request பண்ணி கேட்டு இருக்கலாம், அதை மறுக்க முடியாது, அப்பவும் “கர்நாடக மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்” என்று தான் சொல்லியிருக்கிறார். வாட்டாள் நாகராஜ்     வாட்டாள் நாகராஜ் ஒட்டு மொத்த கர்நாடக மக்களின் பிரதிநிதியாக நினைத்து கொண்டாலும், உண்மையில் அவன் பிரதிநிதி இல்லையே. அது அவன் பிழைப்பதற்கான எச்ச அரசியல், இந்த ஒன்பது வருடத்தில் எத்தனையோ சத்யராஜ் படங்கள் வந்திருக்கிறது, இப்போது இந்த பிரச்னையை எழுப்புவது பெரிய படஜெட் படம், நல்ல பணம் பார்க்கலாம் என்று தான், இதை தவிர வேறெந்த முறையில் வாட்டாள் நாகராஜ் போன்ற அயோக்கியர்கள் நியாயமாக சம்பாதித்து விட முடியும்? ஆகையால் இதை இரு மாநில…

Read More

இளையராஜா – காப்புரிமை, ஒருசில சுருக்கமான கருத்துகள்,

இளையராஜா – காப்புரிமை, ஒருசில சுருக்கமான கருத்துகள், 1. பாடலாசிரியருக்கும் பாட்டில் உரிமை உண்டு. இசைக்கலைஞர்களுக்கும் உண்டு. தயாரிப்பாளருக்கும் உண்டு. இளையராஜாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று அவர் சொல்வது தவறு – பல்வேறு வாதங்கள். அப்போது, ஏதோ ஒரு உரிமை இதில் யாருக்கோ உண்டு என்பது புரிகிறதுதானே? அந்த ராயல்டியைக் கூடக் கொடுக்காமல் SPB ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பாட எண்ணியதுதான் இங்கே பிரச்னை. இப்போது புரிகிறதுதானே? இதுதான் மிக அடிப்படையான பிரச்னை. காப்புரிமைக்கான ராயல்டியை அவர் கொடுக்க நினைக்கவில்லை. யாருக்குக் கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் secondary. கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் இங்கே பிரச்னை. அவர் கொடுக்க நினைக்கவில்லை. மொதல்ல பழத்தை டேபிள்ள வைங்கய்யா.. யாருக்கு எந்தப்பங்குன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். பழத்தை முழுசா நீங்க முழுங்குவீங்களா? 2. ஒரு பாடலின் கர்த்தா யார்? உலகின் சிறந்த…

Read More

சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்

சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம் சினிமாத்துறையைச் சேர்ந்த நண்பர் அவர். கூடவே வணிகமும் செய்கிறார். 2006ல் இருந்து வங்கிகளில் வாங்கிய கடன்களை சரியாக கட்டி வந்துள்ளார். அந்த நன்மதிப்பில் வங்கிகள் மேலும் மேலும் கடன் வழங்கியுள்ளன. மிகச்சிறப்பான வாடிக்கையாளர் என்று போற்றியும் உள்ளன. ஆனால் டிசம்பரில் டீமானடைசேஷன் எனும் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் ஊழல் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பின் நண்பரின் வணிகத்திலும், சினிமா வருமானத்திலும் அடிவிழ ஆரம்பித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் எல்லாம், “நிதிநிலை கொஞ்சம் சரி இல்லண்ணே. கொஞ்ச நாள் ஆகட்டும்,” என தரவேண்டிய காசுக்கு காரணம் சொல்வதால் மாதத்தவணைகளை சரியான தேதியில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார். ஆனால் வங்கிகள் ஃபைன் மேல் ஃபைன் போட்டுக்கொண்டே இருக்கின்றனவாம். தொலைபேசியிலும் தொடர் தொல்லை கொடுத்துள்ளார்கள். “என்ன செய்வது அசோக், எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் பெரிய கஷ்டமாக…

Read More
Tamil Cinema News 

உறுதியுடன் தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம் மோடி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக கிளர்ந்தெழுந்திருக்கிறது தமிழகம். நான்கு நாட்களாக கடற்கரையில், ரயில் நிலையங்களில், அலுவலக வாயில்களில் உறுதியுடன் தொடர்கிறது போராட்டம். ஒவ்வொரு கணமும் போராட்டக்களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முழக்கங்கள், கவிதைகள், கோபங்கள், காட்சிகள் உதித்துக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி விட்டனர். தமிழ் மக்களை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய பார்ப்பனியம், ஒடுக்கிய மோடி அரசு இங்கே எண்ணிறந்த முறையில் செருப்படி பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் ஆட்டம், பாட்டம், முழக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்னார்வத் தொண்டர்கள், உணவையும் – நீரையும் கேட்காமலேயே பகிரந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து வட இந்திய ஊடகங்களே கண்களை விலக்க முடியாமல் திகைத்து நிற்கின்றன. கடற்கரையில் காளை மாட்டு கொம்பு விளக்கை சூடிய தலைகள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டன. இது தேவ…

Read More