தமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள்

தமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள் , “உலக நாகரிகத்தின் முன்னோடிகள் அறிவர் தமிழர்களே” உண்மையில் இரும்பை கண்டுபிடித்தது இவர்கள் தான்! உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக இருப்பவை, இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட – பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தங்க நாணயங்களோ, ஆபரணங்களோ, வெண் கலச் சிலைகளோ, முதுமக்கள் தாழிகளோ, ஓலைச்சுவடிகளோ அல்ல. மண்ணுக்குள் புதைந்து கிடந்து, ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் இரும்புப் பொருட்கள் தான், தமிழ் இனத்தின் அந்தப் பெருமையை உலகுக்கே உயர்த்திக் காட்டும் அடையாளச் சின்னங்களாக திகழ்கின்றன. ஆதிகால மக்கள், முதலில் தங்கள் ஆயுதமாக கற்களைப் பயன்படுத்தியதால், அவர்களது காலம் பழைய கற்காலம் எனவும், பின்னர் அந்த கற்களையே சீராக்கி…

Read More