கட்டுமானப் பொருள் தமிழக ரியல் எஸ்டேட் 

சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி

சென்னை மாநகரில் அனுமதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள் போன்ற நில உபயோக விவரங்கள் அனைத்தும் சி.எம்.டி.ஏ அமைப்பின் இணைய தளத்தில் (http://www.cmdachennai.gov.in) நில அமைவு தகவல் முறையின் (ஜியாகிரபிகல் இன்பர்மேஷன் சிஸ்டம்) அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகிய தகவல்களையும் இந்த இணைய தளத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம்.சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி குறிப்பிட்ட பகுதிகளில் எந்த வகையான கட்டுமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்ற விவரத்தையும் இணைய தளத்தின் உதவியோடு தெளிவாக தெரிந்துகொள்ளலாம். எனவே குடியிருப்புக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் வீட்டு மனை விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருநகர பகுதிகள் சி.எம்.டி.ஏ அமைப்பானது சென்னை பெருநகரப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதியை வழங்கிவருகிறது. சென்னை பெருநகரப் பகுதி என்பது சென்னை…

Read More