அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு புதிய கட்டணம் நிர்ணயம்

பத்திர பதிவு தடை நீங்கியது உயர் நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வீட்டு மனைகளை வரன்முறை தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு  புதிய கட்டணம் நிர்ணயம்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அங்கீ காரமற்ற வீட்டு மனைகளை வரன்முறைப் படுத்துவது, புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது தொடர்பாகவும் தமிழக அரசு 2 அரசாணைகளை பிறப்பித்து அவற்றை நேற்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது

வங்கி கடனில் இருக்கும் வீட்டை விற்க்க முடியுமா?
வங்கி கடனில் இருக்கும் வீட்டை விற்க்க முடியுமா?

தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகார மற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதி-2017 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளின்படி மாநகராட்சி, நக ராட்சி பகுதிகளில் அந்தந்த ஆணையர் களும், பேரூராட்சியில் செயல் அதிகாரி யும், கிராமப் பஞ்சாயத்துகளில் வட்டார வளர்ச்சி அதிகாரியும் அங்கீகாரமற்ற மனைகளை வரையறை செய்ய தகுதியானவர்களாவர்.

பத்திர பதிவு தடை நீங்கியது

அதுபோல சென்னை மாநகரைப் பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச் சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலரும், உள்ளூர் திட்டக்குழுமம், மண்டல திட்டக் குழுமம், புதிய நகர வளர்ச்சிக் குழுமத் துக்கு உட்பட்ட இடங்களுக்கு அந்த குழுமத்தின் துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோரும் தகுதியான அதிகாரிகளாக இருப்பார்கள்.

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தை வாங்கிய உரிமையாளர்களும் தகுதியான இந்த அதிகாரிகளிடம் முறை யாக விண்ணப்பித்து நிலத்தை வரைமுறைப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், இந்த நிலங்கள் கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் உருவாக்கப் பட்ட வீட்டுமனைகளாக இருக்க வேண்டும்.

இந்த நிலங்களை வரன்முறைப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சிப் பகுதி களில் ரூ.100 வீதமும், நகராட்சிப் பகுதி களில் ரூ.60 வீதமும், பேரூராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் ரூ.30 வீதமும் அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதுதவிர அங்கீகாரமற்ற வீட்டு மனை களை மேம்படுத்த வளர்ச்சிக் கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சிப் பகுதி களில் ரூ.600-ம், சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் ரூ.350-ம், முதல் மற் றும் இரண்டாம் நிலை நகராட்சிப் பகுதி களில் ரூ.250-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.150-ம், கிராம பஞ்சாயத்துகளில் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சிப் பகுதி என்றால் குறைந்தது 4.8 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நகராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்து பகுதிகளில் குறைந்தது 3.6 மீட்டர் அகலத்தில் சாலை கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதி களில் திறந்தவெளி பொது நிலம் விடவேண் டும். இவ்வாறு திறந்தவெளி இல்லாமல் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்தால் அந்த ஒட்டுமொத்த வீட்டு மனையின் சந்தை மதிப்பில் 10 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும். வீட்டுமனைகளை வரையறை செய்வதற்கான ஆய்வுக் கட்டணமாக ஒரு வீட்டுமனைக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை இந்த புதிய விதிகளின்படி கட்டணம் செலுத்தி வரையறை செய்வதால், அந்த வீட்டுமனை யில் உள்ள அங்கீகாரம் இல்லாத கட் டிடங்களையும் வரன்முறைப்படுத்தி விட்டதாக அர்த்தம் இல்லை. அந்த மனை யில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.

இனிவரும் காலங்களில் வீட்டுமனை களை அமைக்கும்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் நகரமைப்புக்குழு அதி காரிகளிடம் முறையாக விண்ணப்பித்து உரிய அனுமதியை பெற வேண்டும்.

விவசாயத்துக்கு தகுதியான நிலங்கள், ஆறு, குளங்கள், கால்வாய்கள் போன்ற பொது நீர் நிலைகள், அந்த நீர் நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், மதம் மற்றும் அறக்கட்டளை சம்பந்தப்பட்ட இடங்கள், திறந்தவெளி மற்றும் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், வரைமுறைப்படுத்த தகுதியற்ற இடங்கள், சாலை, ரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக் காக ஒதுக்கப்பட்ட இடங்கள், ஆக்கிரமிப் பில் உள்ள இடங்கள், வக்பு வாரிய சொத்து கள், உயர் மின்னழுத்த கோபுரங்களின் கீழே எக்காரணம் கொண்டும் வீட்டு மனை களை அமைக்கக் கூடாது. அந்த இடங் களில் உள்ள மனைகளை வரன்முறைப் படுத்த அனுமதி வழங்கக் கூடாது.

பயன்பாட்டில் இல்லாத விவசாய உலர் நிலங்களைப் பொறுத்தமட்டில் விவசாய இணை இயக்குநரின் ஒப்புதல் பெற்ற பிறகே மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர மைப்பு இயக்குநரின் அனுமதி பெற வேண் டும். அதுபோல மனைப் பகுதிகளில் பாசன கால்வாய்கள் இருந்தால் அவற்றை சேதப்படுத்தக் கூடாது.

இந்த அதிகாரிகள் அந்த நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அதன்பின் னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி வீட்டு மனைகளை அமைக்க அனுமதி வழங்கலாம்.

வீட்டுமனையின் ஒரு பகுதியை விற் பனை செய்துவிட்டு, பிற பகுதிகளை விற்கா மல் இருந்தால், அவற்றை புதிதாக முறைப் படுத்த சந்தை மதிப்பில் 3 சதவீத கட்ட ணத்தை செலுத்தி வரையறை செய்யலாம். இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள், அங்கீ காரம் இல்லாத வீட்டு மனைகளை வரை யறை செய்ய விண்ணப்பிக்கலாம். நிலத்தை வரையறை செய்த பின்னர், அதற் குரிய கட்டணத்தை செலுத்த சம்பந்தப்பட்ட வர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

அதன்படி 30 நாட்களுக்குள் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் அந்த தொகை 90 நாட்களுக்குள் வசூலிக்கப்படும். அப்படியும் தொகையை செலுத்தவில்லை என்றால், அந்த நிலத்தை வரையறை செய்யக்கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இந்த புதிய விதிகளின்படி அங்கீகார மற்ற வீட்டு மனைகளை வரையறை செய்ய வில்லை என்றால் அந்த மனைக்கு மின் சாரம், குடிநீர், கழிவுநீர் போன்ற எந்த இணைப்பும் வழங்கப்படாது. இந்த அங்கீகாரமற்ற நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. மேலும் அந்த நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதியும் வழங்கப்படாது.

இவ்வாறு அந்த அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பத்திர பதிவு தடை நீங்கியது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு அரசாணைகள் சமர்ப்பிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகார மற்ற வீட்டு மனைகளை வரன்முறைப் படுத்துவது குறித்து தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள 2 அரசாணை கள் நேற்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் விவசாய விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனை களாக மாற்றுவதை தடை செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, கடந்த 9.9.16 அன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்தது. இதுதொடர்பாக புதிய வரைவு விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்பின் இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு இந்த தடையை தளர்த்தி 20.10. 2016 தேதிக்கு முன் பதியப்பட்ட அங்கீகாரமில்லாத மனைகளை மறு பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த புதிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை யிலான அமர்வு, புதிய வரைவு விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மே 4-ம் தேதி வரை பத்திரப்பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மே 4-ம் தேதி இந்த வழக்கு விசா ரணைக்கு வந்தபோது, புதிய வரைவு விதிகள் உருவாக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், அதை முறைப்படி அறிவிப்பாணை செய்ய ஒரு நாள் கால அவகாசம் தேவை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன் முறைப்படுத்துவது தொடர்பாகவும், புதி தாக வீட்டு மனைகளை உருவாக்குவது தொடர்பாகவும் தமிழக அரசின் வீடடு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை 2 அரசாணைகளை சமீபத்தில் பிறப்பித்தது இந்த அரசாணைகள் நேற்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன

இந்த வழக்கு மே 12-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது  எனவே உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தொடர்பான தடை அமலில் இருக்கும்

பத்திர பதிவு தடை நீங்கியது உயர்நீதி மன்றம் உத்திரவு

Leave a Reply