ஆளுமைகள்

அசிபா மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயர்

சிறுமி ‘ஆசிபா

அசிபா மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயர்

இந்திய சிறுமிக்காக உலகமெங்கும் அனுதாப அலை அசிபா இந்த நிமிடம், இந்தியாவின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயர் வயது எட்டு பள்ளி சென்றிருந்தால் மூன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்திருப்பாள் ஆனால் குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு செல்ல இயலவில்லை  குதிரை மேய்த்துக் கொண்டிருந்தாள்

ஜனவரி மாதம் 10ம் தேதி காணாமல் போனாள் அசிபா. ஜனவரி 17ஆம் தேதி அசிபா பிணமாகக் கிடைத்தாள். இவ்வளவு தான் விபரம் என்றால், இது ஒரு கொலை வழக்கு. அவ்வளவு தான்

அசிபா வன்புணர்ச்சிக்கு ஆளாகி இறந்திருந்தாள் இந்த நிலையில் இது ஒரு வல்லுறவு மற்றும் கொலை வழக்காக உருவெடுத்தது

இதில் கூடுதல் விபரங்கள் தான், அசிபா வழக்கின் இன்னொரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தது

ஜம்மு பகுதி, இந்துக்கள் மிகுந்திருக்கும் பகுதி

காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதி, இந்துக்கள் மிகுந்திருக்கும் பகுதி. ‘கத்துவ’ பகுதியின் ரசன கிராமத்தை சேர்ந்தவள் அசிபா அவள் செய்த பாவம், முஸ்லிம் மதத்தை சேர்ந்த, பேகர்வாலா குஜ்ஜார் நாடோடி இனத்தில் பிறந்தது

அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒற்றை வீடு அசிபா குடும்பத்தினரது. அந்தப் பகுதியில் இருக்கும் பேகர்வாலா இனத்தினர் எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள்

அந்த முஸ்லிம் நாடோடி இனத்தை அந்தப் பகுதியை விட்டு விரட்ட வேண்டும் என்பது சஞ்சிராமின் லட்சியம். சஞ்சிராம் அந்தப் பகுதியில் இருக்கும் சிறு கோவிலை பராமரிக்கும் அர்ச்சகர்  அதை விட, இந்துத்துவா அடிப்படைக் கொள்வாதி என்று குறிப்பிடுவது முக்கியம் அதனால் தான், அவ்வளவு முஸ்லிம் விரோத புத்தி

சஞ்சிராம் சிறுவயதாக இருக்கும் போது, அவனை கண்டாலே முஸ்லிம் பெண்களுக்கு பயம். அந்த அளவிற்கு சஞ்சிராமின் வன்முறை அவர்கள் மீது பாய்ந்தது. இந்த சஞ்சிராம் தான், அசிபா கொலையின் சூத்திரதாரி என்பது தான் பிரச்சினையின் திசையை உணர்த்தியது

இந்துக்கள் மட்டுமே இருக்கும் பகுதி கத்துவ

இந்துக்கள் மட்டுமே இருக்கும் பகுதியாக ‘கத்துவ’ திகழ வேண்டும், அதற்கு அங்கிருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை விரட்ட வேண்டும். அதற்கு , அவர்களை மிரட்ட வேண்டும். அதற்காக, சஞ்சிராம் தேர்ந்தெடுத்த எளிய இலக்கு தான் ‘அசிபா’.

தன் உறவினரான ஒரு சிறுவனை அழைத்து தயார் செய்கிறான். அசிபாவை கொன்றால், முஸ்லீம்களை பழிவாங்கலாம் என்கிறான் அவனிடம்.

அந்த சிறுவன் தன் நண்பன் பர்வேஷை கூட்டு சேர்த்துக் கொண்டு, மயக்க மருந்து சேகரிக்கிறான்.

ஒரு நாள் மதியம் குதிரையை தேடி அலைந்துக் கொண்டிருந்த அசிபாவை காண்கிறான் சஞ்சிராம். சிறுவனிடம் அசிபாவை காட்டுகிறான் சஞ்சிராம். அசிபாவை பின் தொடர்ந்து சென்ற சிறுவன், குதிரையை காட்டுவதாக வனப்பகுதிக்குள் அழைத்து செல்கிறான்.

அசிபாவிற்கு மயக்க மருந்து கொடுக்கிறான். மயங்கிய அந்தப் பிஞ்சு குழந்தையுடன் வல்லுறவு கொள்கிறான். பின் நண்பன் பர்வேஷுடன் சேர்ந்து, அசிபாவை தூக்கி வந்து சஞ்சிராம் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் அடைத்து வைக்கிறான்

மயங்கிய அந்தப் பிஞ்சு குழந்தை மயக்க மருந்து கொடுக்கிறான்

அசிபாவின் பெற்றோர் குழந்தையை காணாமல் தவித்துப் போகிறார்கள். சஞ்சிராமின் கோவிலுக்கு தேடி வருகிறார்கள் தான் பார்க்கவில்லை என்கிறான் சஞ்சிராம். அப்போது, அசிபா அதே கோவிலில் தான் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறாள்.

மீரட்டில் இருக்கும் சஞ்சிராமின் மகன் விஷாலுக்கு அலைபேசி அழைக்கிறான். அவனும் வருகிறான், கற்பழித்து இன்பம் காண

சஞ்சிராம், பாதுகாப்பிற்காக காவல்துறையை சேர்ந்த திலீப்பை தொடர்பு கொள்கிறான். அவன் மூலம் உயர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கிறான்.

பர்வேஷ், விஷால், திலிப், அந்த சிறுவன் ஆகியோர் அடுத்தடுத்து அந்தப் பிஞ்சை சிதைக்கிறார்கள். எட்டு நாட்கள், மயக்கமருந்தின் உதவியால் நடைபிணமாக வைக்கப்பட்டிருக்கிறது குழந்தை

அசிபாவை கொன்று பிணத்தை தூக்கி எறி

அசிபாவை கொன்று பிணத்தை தூக்கி எறிவது என்று முடிவெடுத்த பிறகு, மறுபடியும் வல்லுறவு தொடர்ந்திருக்கிறது. அத்தனையும், அந்தக் கோவிலில் தான். கோவிலின் இன்னொரு புறம் பூஜை புனஸ்காரங்கள் தொடர்ந்திருக்கின்றன.

அந்த சிறு குழந்தை அசிபா, எலும்புகள் நொறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். வனத்தின் ஓரப் பகுதியில் தூக்கி எறிந்து விட்டு செல்கிறார்கள், அந்த கொலை பாதகர்கள்.

உடல் கிடைத்த பிறகு, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கொலையாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்.

இது வரையிலும் நிகழ்ந்திருந்தால், இந்த பிரச்சினை பெரிதாகி இருக்கப் போவதில்லை. கொலை வழக்காக முடிந்திருக்கும்.

கைதானவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர், “முஸ்லீம்கள் இந்துகளின் நிலங்களை ஆக்கிரமிக்கப் பார்த்தார்கள்” என்று வைத்த குற்றச்சாட்டு அவர்களின் கோர முகத்தை காட்டியது. உயிருக்கே பாதுகாப்பு இல்லாதவர்கள், ஆக்கிரமிக்கிறார்கள் என்று சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனம்.

இந்த வழக்கை, பொய் வழக்கு என்று சொல்லி, ”இந்து ஏக்தா மன்ச்” என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்தது. அதன் கோரிக்கை, கைதானவர்களை விடுவிக்க வேண்டும். வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க சொல்ல எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.

அந்த திமிருக்கு காரணம், மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசும், மாநில அரசில் பா.ஜ.க பங்கேற்றிருப்பதும் தான். அந்த இந்து ஏக்தா மன்ச் என்பது, பா.ஜ.கவின் ஓர் துணை அமைப்பு தான், வி.ஹெச்.பி போல.

சட்டமன்றத்தில் இந்த வழக்கு குறித்து குரல் கொடுத்தார், குஜ்ஜார் இன சட்டமன்ற உறுப்பினர் மியான். ‘உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை இங்கு பேசாதீர்கள்’, என மிரட்டினார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ். இது கொலை பாதக செயலுக்கு பா.ஜ.கவின் ஆதரவை வெளிப்படுத்தியது

இதற்கு அடுத்து நிகழ்ந்தவை தான் கொடுமையின் உச்சகட்டம்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சொல்லி இந்து ஏக்தா மன்ச் ஒரு ஊர்வலம் நடத்தியது. அதில் இரண்டு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்கள் சவுத்திரி லால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா. இவர்கள் இருவரும் ஜம்மு கஷ்மீர் மாநில அரசில் இடம் பெற்றிருக்கும் பா.ஜ.க அமைச்சர்கள்.

ஊர்வலத்தில் தேசியக் கொடியை ஏந்தி, அந்த கற்பழிப்பு குற்றவாளிகளை விடுவிக்க சொல்லி கோஷமிட்டது தான் இந்துத்துவாவின் உச்சக்கட்ட ஆணவம்.

கொலை பாதகத்தை சஞ்சிராம் திட்டமிட்டு நிகழ்த்த காரணம் இந்துத்துவா வெறி. அதை பாதுகாக்க களமிறங்கிய அமைச்சர்களின் செயல் “ஹிந்தியா” வின் செயல் திட்டம். இன்னும் தலைமை மவுனம் காக்க காரணம், ஏக இந்தியாவுக்கான கனவு

வன்புணர்ந்து கொன்றது, உச்சத்திலும் உச்சக்கட்ட குற்றம்.

பாலியல் வன்புணர்ச்சியும், கொலையும் உச்சக்கட்ட குற்றம். அதுவும், ஒன்றும் அறியாத குழந்தையை வன்புணர்ந்து கொன்றது, உச்சத்திலும் உச்சக்கட்ட குற்றம்.

ஒரு இனத்தை மிரட்ட, ஒரு சிறு குழந்தையை சிதைத்து கொன்றது, மனிதத் தன்மையற்றது

அந்த கொலைப்பாதகர்களுக்கு ஆளுங்கட்சி துணை போவதும், அவர்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் பெருமக்கள் ஊர்வலம் போவதும் தேச துரோகம்.

தன் கட்சிக்கார அமைச்சர்கள் இந்த கயமை செயலை செய்த பிறகும் கண்டித்து பேசாமல், விளக்கம் அளிக்காமல், நாட்டை ஆளும் தலைவன் இருப்பது, நாட்டிற்கே அவமானம்.

மொத்தத்தில் அந்தக் குழந்தையை வன்புணர்ந்தவன், திட்டம் தீட்டியவன், துணை போனவன், காவல் கடமை தவறியவன், பாதுகாத்தவன், சட்டமன்றத்தில் ஏகடியம் பேசியவன், ஊர்வலத்தில் தேசிய கொடியை பிடித்தவன், இதற்கு இயக்கம் நடத்தியவன், அதிகாரத்தை வைத்துக் கொண்டு மிரட்டியவன், அமைச்சன்கள், மவுனம் காத்தவன் என அத்தனை பேருமே அவமானச் சின்னங்கள்.

அகற்றிடுவோம் அவமானச் சின்னங்களை !

#JusticeForAsifa

_எஸ்.எஸ்.சிவசங்கர்

Comments

0 comments

Related posts

உன்னதமான நிலை யை அடைவதற்கு ஐந்து செயல்கள்

admin

ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் எப்போது பிடித்துப்போனவன் ஆகிறான்?

admin

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே

admin
%d bloggers like this: