Skip to toolbar
கொரானா! உடல்களை ஜாதி மத வித்தியாசம் ஏதுமின்றி அடக்கம்

கொரானா வைரஸ் தொற்றால்
உயிரிழக்கும் மக்களின் உடல்களை
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலின்படி ஜாதி மத வித்தியாசம் ஏதுமின்றி அடக்கம் செய்துவருகிறார்கள் சில அமைப்பினர்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
இதுவரை 65 உடல்களையும்..
Social Democratic Party of India (SDPI),மற்றும்
Popular front அமைப்புகள் 41 உடல்களையும்
அடக்கம் செய்திருக்கிறார்கள்.

வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருக்கும் ஒரு நபரை அவர் தொற்றுள்ளவரா, இல்லாதவரா என்றுகூட அறியாமல் வெறுப்புடன் பார்க்கும்
இந்தச் சூழ்நிலையில்..

கொரானா தொற்றுள்ள வீடு என்று அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் இருப்போரை கண்ணால் பார்க்கவும் பயந்து வேறு வழிகளில் நடக்கும் மனிதர்கள் உள்ள இந்தச் சூழ்நிலையில்..

கொரானாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முக்கியமான சேவையை புனிதமான பணியாக ஏற்று தயக்கமின்றி செயல்படுத்தி வரும் இந்த அமைப்பின் அத்தனை நபர்களுக்கும் தலை வணங்கி நன்றி சொல்கிறேன்.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களைப் போலவே அதி முக்கியமாக
நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள் இவர்களும்தான்.

(தகவலுக்காக நன்றி:
புதிய தலைமுறை தொலைக்காட்சி

கொரானா! உடல்களை ஜாதி மத வித்தியாசம் ஏதுமின்றி அடக்கம்

Pattukkottai Prabakar Pkp

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *