1-800-999-9999 — hi@loremipsum.com

அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்

 

 அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்

அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்   

அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்

அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பவர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் அமைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் வீட்டின் பராமரிப்பு, பாதுகாப்பு இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் எளிதாகிறது.

கோரிக்கைகள்   அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்

குடியிருப்பு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள், சாலை வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிய அலுவலகங்கள் மூலம் கேட்டு பெறுவதற்கு சங்கங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும். தனியொரு ஆளாக விண்ணப்பம் செய்வதைவிடவும் நிறைய பேர் சேர்ந்து கோரிக்கை விடுக்கும்போது அது உரிய கவனத்தை பெறுகிறது.

பதிவு அவசியம்

பதிவாளர் அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். எந்தவொரு சங்கமும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே அதற்குரிய முழுமையான உரிமைகளைப் பெற முடியும். மேலும் உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர் நியமனம், அவர்களது பதவிக் காலம் உள்ளிட்ட சங்க விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

கட்டாயப்படுத்த கூடாது

அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் ஒருவரை குடியிருப்போர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று எந்தவகையிலும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமாகும். ஒவ்வொருவரும் தமது சொந்த விருப்பத்தன் அடிப்படையிலேயே சங்கத்தில் சேர வேண்டும். அதைப்போல உறுப்பினர்களுக்கான சந்தா தொகையினையும் கட்டாயப்படுத்தி வசூலிக்க கூடாது. சந்தா செலுத்தாத உறுப்பினர்களின் குடிநீர், மின்சார இணைப்புகளை துண்டித்து அவர்களை அச்சுறுத்துவது குற்றமாக கருதப்படுகிறது.

வங்கிக்கணக்கு

குடியிருப்போர் சங்க வரவு செலவுகளை சங்க விதிமுறைக்கு உட்பட்டே கையாள வேண்டும். வரவு செலவுகளை வங்கிக் கணக்கு மூலமாக கையாளுவது பாதுகாப்பானது. எனவே சங்கத்தை பதிவு செய்யும்போது வங்கிக்கணக்கு மூலமாக மட்டுமே வரவு செலவு விவரங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு விதியாகவே உருவாக்கலாம்

%d bloggers like this: