தமிழக ரியல் எஸ்டேட் 

அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

 Virukai N Kannan
Virukai N Kannan

அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

அனைத்து ரியல் எஸ்டேட் நண்பர்களுக்கு நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள்,தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ..

பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை 20.09.2016
( செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நமது நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்களின் தலைமையில்,

அகில இந்திய லே-அவுட் புரோமோட்டர்ஸ் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவர் திரு.Lion.S.அன்னை சரவணன்
அவர்களின் முன்னிலையிலும்,

நிகழ்ச்சியின் வரவேற்பாளர்களான திரு.Lion.B.S.சங்கர் மற்றும்

தேசிய செய்தி தொடர்பாளர் கொளத்தூர் Lion.V.B சுரேஷ்குமார் அவர்களும்,

நிகழ்ச்சி தொகுப்பாளர் தென்பாண்டி சிங்கம் Lion.D.செந்தில் குமார் அவர்களின் சார்பில்

அனைத்து ரியல் எஸ்டேட் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர், மேலும் பட்டா மனையின் உரிமையாளர்களும்,
ரியல் எஸ்டேட் வியாபாரிகளும்,
கட்டிட தொழிலாளர்களும்,கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களும்,
தச்சு தொழிலாளர்கள், பத்திர எழுத்தாளர்கள்

என அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு உங்களின் பொன்னான கருத்துக்களையும், இந்த தடையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு அமைதியான முறையில் எடுத்து சொல்லி ஒரு நிரந்தர தீர்வை பெற்றிடுவோம்.
வாருங்கள் நம் சொத்தை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்… இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டும் மற்றும் மற்ற சங்கங்கள் பாகுபாடின்றி செயல்படும் என்று உறுதியளிக்கிறோம்.

வாருங்கள் ஒன்றாய் இணைவோம்… ஒன்றாய் செயல் படுவோம்….

அனைத்து  ரியல் எஸ்டேட்  வர்த்தகர்கள் அனைவருக்கும்  வேண்டுகோள்

ஒன்று படுவோம்…… வென்று காட்டுவோம்

இப்படிக்கு.
அகில இந்திய ஊடக பிரிவு செயலாளர்
பெரம்பூர் ஸ்ரீதர்

Related posts

%d bloggers like this: