அன்னை கதீஜா கல்லூரி கட்டியது யார் பணத்தில்?
Tamil Youth Page Uncategorized

அன்னை கதீஜா கல்லூரி கட்டியது யார் பணத்தில்?

அன்னை கதீஜா கல்லூரி கட்டியது யார் பணத்தில்?

அன்னை கதீஜா கல்லூரி கட்டியது யார் பணத்தில்? உன் வாப்பா வீட்டுப் பணமா?
8 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஷேர் ஹோல்டர்கள் கூட்டத்தைக் கூட்டவில்லெயே ஏன் என ஷேர் ஹோல்டர்களில் சிலர் கேட்டதற்கு,

 

அதற்குச் சட்டத்தில் இடமில்லை; ஷேர் ஹோல்டர்கள் கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறி CMN சலீம் தட்டிக் கழித்ததால்,

கடந்த பிப். 2019 ல் ஷேர் ஹோல்டர்களில் சிலர் தொடர்பிலிருந்த சில ஷேர் ஹோல்டர்களை ஒன்றிணைத்து கூட்டம் நடத்தத் தீர்மானித்தனர்.

இது அறிந்ததும் அதுவரை அப்படியான கூட்டத்துக்கு அவசியமில்லை எனக் கூறிவந்த CMN சலீம், அவசரம் அவசரமாக கடந்த 14 பிப். 2019 ல் ஷேர் ஹோல்டர்கள் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

இதனால் ஷேர் ஹோல்டர்கள் தாம் நடத்த நினைத்த கூட்டத்தைத் தவிர்த்தனர்.

ஆனால், ஷேர் ஹோல்டர்களைத் தவிர அவர்களின் சார்பாக அவர்களின் குடும்ப நாமினிகள் கூட கலந்துகொள்ள அனுமதி மறுத்தார்.

எனில், நிகழ்ச்சி நிரல் அனுப்பி வைக்க வேண்டுமென ஷேர் ஹோல்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இறுதிவரை நிகழ்ச்சி நிரல் அனுப்பி வைக்காமல் தவிர்த்த CMN சலீம், ஷேர் ஹோல்டர்களுக்கு எந்த விவரமும் தராமல் அன்றைய கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோரை அழைத்து கூட்டம் காட்டினார்.

சுமார் 150 பேர் கலந்து கொண்ட அன்றைய கூட்டத்தில் சொற்பமான அளவிலேயே ஷேர் ஹோல்டர்கள் கலந்துகொண்டனர். மீதமுள்ளவர்கள் அத்தனை பேரும் ஷேர் ஹோல்டர்கள் அல்லாதவர்களே!

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமுமுக சகோதரர் ஹைதர் அலி அவர்கள், ஓரளவு விசயத்தை விளங்கிக் கொண்டு அன்றைய நிகழ்ச்சியிலேயே CMN சலீம் செய்தது தவறு எனச் சுட்டிக்காட்டினார்.

இக்கல்லூரியும் பாண்டிச்சேரியிலுள்ள பைத்துல் ஹிக்மா கல்லூரியும் உன் வாப்பா காசிலா கட்டினாய் எனக் கேட்டு, இனியாவது ஆண்டுதோறும் ஷேர் ஹோல்டர்கள் கூட்டம் நடத்து, ஷேர் ஹோல்டர்களில் சிலரையும் பொதுவிலுள்ள சிலரையும் நிர்வாகத்தில் இணைத்து ஒரு பொது நிர்வாகம் ஏற்படுத்து; பைத்துல்மாலை இப்படி தனியாக விருப்பத்துக்கு நிர்வாகம் செய்யக்கூடாது என கண்டித்தார்.

CMN சலீமுக்கு சகோ. ஹைதர் அலியாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி, அவரின் எண்ணவோட்டத்துக்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் மட்டும்தான் உடன் வைப்பார். அன்றைய தினம் சகோதரர் ஹைதர் அலியை அவர் அழைத்து வந்ததன் காரணம், கூட்டத்தில் ஷேர் ஹோல்டர்களால் பிரச்சனையேதும் வந்துவிட்டால் அதனைச் சமாளிக்கவே. இதனையும் சகோதரர் ஹைதர் அலியே அன்றையக் கூட்டத்தில் பேச்சினிடையே தெரிவித்தார்.

அதல்லாமல், சகோதரர் ஹைதர் அலியின் ஆலோசனைகளெல்லாம் அவருக்குத் தேவையில்லை. அதனால்தான், அன்று சகோதரர் ஹைதர் அலி அவ்வாறு ஆலோசனை தெரிவித்தும்கூட இதுவரை அதனைச் செயல்படுத்தாமல் தற்போது இவ்விவகாரம் பொதுவெளிக்கு வரக் காரணமாகியுள்ளார்.

கல்லூரியினை உம்மத்தின் சொத்து என்பார்; ஆனால் அதனை அவர் மட்டுமே நிர்வகிப்பார். எல்லோரும் அவரை நம்பி கோடிகளைக் கொட்டி கொடுத்துவிட்டு, பேசாமல் போய்விட வேண்டும். கல்லூரி செயல்பாடு, பைத்துல்மால் கணக்குகள் என்றெல்லாம் எதுவுமே கேட்கக்கூடாது. அப்படி கேட்டால், கேட்பவர்கள் சமுதாய விரோதிகளாவர்!

 
 

Comments

0 comments

Related posts

யார் இந்த பியூஸ் மானுஷ் Who Is Piyush Manush ?

admin

குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு | தமிமுன் அன்சாரி MLA

admin

அய்யா வழி பாலமுருகன் இன்று சமூக ஊடகத்தில் குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார்

admin
%d bloggers like this: