அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்Tamil Cinema News 

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்
அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்  ஒரு அமெரிக்க பயணிகள் விமானம் நடுக்கடலில் சுட்டு வீழ்த்தப் படுகின்றது  அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் படுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது ஒரு பயங்கரவாத தாக்குதலாக கண்டிக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்காக அழுதிருக்கும். ஒவ்வொரு வருடமும் தவறாது நினைவுகூரப் பட்டிருக்கும். ஆனால், சுட்டு வீழ்த்தப் பட்டது ஈரானிய பயணிகள் விமானமாகவும், அதை சுட்டவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருந்தால்?

வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே, இன்றைக்கும் யாருக்கும் தெரியாது. அப்படியே அறிந்திருந்தாலும், அதை யாரும் பயங்கரவாதம் என்று சொல்ல மாட்டார்கள். 3 juli 1988 அன்று, ஈரானில் உள்ள பண்டர் அப்பாஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஈரான் எயர் விமானம், துபாய் நோக்கி பறந்து கொண்டிருந்தது. 

வளைகுடாக் கடலில் எண்ணைக் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க நிறுத்தப் பட்டிருந்த, USS Vincennes என்ற அமெரிக்க போர்க் கப்பல், ஈரான் எயர் விமானத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகளை செலுத்தியது. வானத்தில் வெடித்துச் சிதறிய விமானத்தில் இருந்த அனைவரும் (274 பயணிகள், 16 விமானப் பணியாளர்கள்) கொல்லப் பட்டனர். அதிலே பத்து இந்தியர்களும் அடங்குவார்கள்.

அப்போது ஈராக் – ஈரான் யுத்தம்

அப்போது ஈராக் – ஈரான் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்கர்கள் சதாம் ஆட்சி நடந்த ஈராக்கை ஆதரித்தார்கள். அமெரிக்கர்கள், வளைகுடா யுத்தத்திற்குள் மூக்கை நுழைப்பதற்காக, ஈரானிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளனர். ஆனால், அந்த சம்பவம் உலகம் முழுவதும் ஈரானுக்கு ஆதரவான அனுதாப அலையை தோற்றுவித்தது.

அமெரிக்கர்களால் தமது செயலை நியாயப் படுத்த முடியவில்லை. அதனால், “F-14 போர் விமானம் என்று நினைத்து, தற்செயலாக பயணிகள் விமானத்தை சுட்டு விட்டதாகவும், அது தெரியாமல் நேர்ந்த விபத்து” என்றும் கூறினார்கள். விமானத் தாக்குதல் குறித்து, அன்று அமெரிக்கா சொன்ன காரணத்தை, ஈரானில் மட்டுமல்ல, உலக நாடுகளில் யாரும் நம்பவில்லை.

ஏனெனில், F-14 போர் விமானம் பயணிகள் விமானத்தை விட அளவில் மிகவும் சிறியது, வேகமாக பறக்கக் கூடியது. இதனை, ஒரு பாமரன் தனது கண்களால் நேரில் பார்த்து அறிந்து கொள்ள முடியும். அமெரிக்க கடற்படையில் வேலை செய்பவர்கள், ஒரு பயணிகள் விமானத்திற்கும், போர் விமானத்திற்கும் வித்தியாசம் தெரியாத மடையர்களா?

“கேட்பவன் கேணையன் என்றால்…

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் Written by Kalaimarx

Related posts

%d bloggers like this: