அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யாTamil latest news 

அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா

அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா

அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள்  எனக் கதறியபடி கூறியுள்ளார். அந்தச் சூழலிலும் தனது கழுத்தை அறுத்த காதலனின் உயிரைப் பற்றி அவர் அக்கறையுடன் பேசியது டாக்டர்களையும் போலீஸாரையும் நெகிழவைத்தது

இதோ உண்மையான செய்தி கிடைத்து விட்டது

இதோ உண்மையான செய்தி கிடைத்து விட்டது  வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளிக்கு அருகில் உள்ள கதம்பம்பட்டியைச் சேர்ந்தவர் மாணவி லாவண்யா. கழுத்தை அறுத்த நவீன்குமாரும் அதே ஊரைச் சேர்ந்தவர். பி.ஈ. முடித்துவிட்டு சென்னை அறன் சைபர் டெக் நிறுவனத்தில் டெவலப்மெண்ட் ஆபிஸராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 20 நாட்களாக நவீன் குமார் செல்போனில் லாவண்யாவைத் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், லாவண்யா நவீனின் அழைப்பைத் தவிர்த்துள்ளார். படிப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நவீன் நேற்றிரவு (ஏப்ரல் 29) சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று காலை சிதம்பரம் வந்துள்ளார். ஒரு கடையில் வயலுக்குத் தெளிக்கும் மருந்தையும், கூல் டிரிங்க்ஸும் வாங்கிக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்துக்குள் காத்திருந்துள்ளார். தாமரை விடுதியிலிருந்து லாவண்யா வருவதைப் பார்த்ததும், நவீன் தான் வைத்திருந்த மருந்தை கூல்டிரிங்க்ஸில் கலந்து குடித்துள்ளார். பின்னர் தனது பையில் வைத்திருந்த சிறு கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு லாவண்யாவை வழி மறித்துள்ளார். அவரிடம், ”எனது அழைப்புகளை ஏன் எடுக்கவில்லை? நீ ஏன் என்னை செல்போனில் கூப்பிடவில்லை? என்னைப் பிடிக்கவில்லையா?” என ஆத்திரத்துடன் கேட்டுள்ளார்.

நான் விஷம் குடிச்சிட்டு வந்திருக்கேன்

ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகியுள்ளது. அப்போது நவீன், “நான் விஷம் குடிச்சிட்டு வந்திருக்கேன். சீக்கிரம் சாகப்போறேன். நீயும் உயிரோட இருக்கக் கூடாது” என்று லாவண்யா கழுத்தை அறுத்துள்ளார். அபாயத்தைப் புரிந்துகொண்ட லாவண்யா தைரியமாக கத்தியைத் தடுக்க முயன்றபோது இரு கைகளின் உள்ளங்கையிலும் கத்தி பட்டு ரத்தம் சொட்டியது.

போலீஸார் விசாரணையில் நவீன் குமார், ”நானும் லாவண்யாவும் கடந்த ஏழு ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்துவந்தோம். நான் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவன். லாவண்யா ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவள். நாங்கள் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். அப்போதே எங்களுக்குள் காதல் உருவானது. நாங்கள் பேசாமல் இருந்ததே கிடையாது. ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை; கடந்த சில நாட்களாக லாவண்யா என்னிடம் பேசவில்லை. நான் பேசினாலும் லாவண்யா சரியாகப் பேசாமல் இருந்தாள். எனவே, நேரடியாகப் பேசிவிட்டு இருவரும் சாக வேண்டும் என முடிவுசெய்து வந்தேன்” என அழுதபடியே கூறியுள்ளார்.

இருவரும் காதலித்தோம் அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா

ஆபத்தான நிலையிலிருந்த லாவண்யாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ”இருவரும் காதலித்தோம். வேலை அதிகமாக இருந்ததால் சரியாகப் பேசமுடியவில்லை. அவர் விஷம் குடித்திருக்கிறார். அவரைக் காப்பாற்றுங்கள்” எனக் கதறியபடி கூறியுள்ளார். அந்தச் சூழலிலும் தனது கழுத்தை அறுத்த காதலனின் உயிரைப் பற்றி அவர் அக்கறையுடன் பேசியது டாக்டர்களையும் போலீஸாரையும் நெகிழவைத்தது.

லாவண்யா சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நவீன்குமார் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Thanks For Writer 

Related posts

%d bloggers like this: