கட்டுமான தொழில்

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழக்கூடிய அனைத்து வகையான குற்றங்களையும் விசாரிப்பதற்காக 1804-ம் ஆண்டு வால்டர் கால்பீடு லேன்னனால் புத்தூர் பகுதியில்(தற்போதைய பிஷப் ஹீபர் பள்ளி வளாகம்) குற்றவியல் நீதிமன்றம் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது

பின்னர், திருச்சி நீதிமன்றத்துக் கென கன்டோன்மென்ட் பகுதியில் பல நூறு ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 இல் அடிக்கல் நாட்டப்பட்டு இங்கிலாந்து அரசின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்புடன் ஏ.தாத்தா பிள்ளை என்ற ஒப்பந்ததாரர் மூலம் புதிய நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன

மின்சாரத்தை நம்பி இல்லாமல் சூரிய ஒளி மூலம் வெளிச்சம், இயற்கையான காற்று கிடைக்கப்பெறும் வகையில் நீதிமன்ற விசாரணை அறைகளும், லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு உத்திரங்கள், தூண்கள் மூலம் கட்டிடத்தின் மேற்கூரைகளும் அமைக்கப்பட்டன ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட

மேலும், தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்குச் செல்ல மரப் பலகைகளால் ஆன இருபுற படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அழகிய வடிவமைப்புடன் கூடிய இக்கட்டிடத்தை 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி அப்போதைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜே.ஜி.பர்ன் திறந்துவைத்தார்

பின்னாளில் இக்கட்டிடத்தில் இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்காக குற்றவியல் நீதிமன்றங்கள், குடிமையியல் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்டவை, இதே வளாகத்துக்குள் தனித்தனியாக கட்டப்பட்டன

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடம் இன்றும் அதே பொழிவுடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறது

அதே போல் இந்த நீதிமன்றம் கட்டிடத்தின் உச்சியில் அமைந்துள்ள பெரிய கடிகாரமானது நான்குபுறமும் நேரத்தை காட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது..சில ஆண்டுகளாக கடிகாரம் பழுது எற்பட்டு அதனை சரி செய்திட பல முறை முயன்றும் பழுது நீக்க முடியாத நிலையில் உள்ளது..!!

என்றும் இளமையோடு அழகிய கம்பீரத்தோடு காட்சிதரும் இக்கட்டிடம் இன்னும் 1000 ஆண்டுகளை கடந்திட வாழ்த்துக்கள் ..!!!

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட

Comments

0 comments

Related posts

கட்டுமான செலவை கட்டுப்படுத்த வழிமுறைகள்

admin

ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்

admin

மணலைஇலவசமாக வழங்க முடிவு

admin
%d bloggers like this: