1-800-999-9999 — hi@loremipsum.com

ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்

ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்

ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இப்போது ஒரு படி முன்னேறிவிட்டனர் என்கவுன்டர் பண்ணப் போகிறோம் என்பதை ஊடகங்களுக்கு முன்பே சொல்லி, அவர்களை வீடியோ காமிராக்களுடன் வரச் சொல்லி வீடியோ பதிவு செய்துகொள்ளச் சொல்லி விட்டு இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்  உண்மை இது மிகையில்லை

NDTV, DNA முதலான இணையத் தளங்களைப் பாருங்கள் தங்களுக்கு ‘இன்விடேஷன்’ வந்ததையும், வீடியோ எடுக்க அன்மதித்ததையும் செய்தியாகவே பதிவு செய்துள்ளனர். கூடவே அந்த வீடியோவையும் நீங்கள் பார்க்கலாம்

இது நடந்தது செப் 20. இடம் அலிகாரில் ஹர்துவாகஞ் எனும் இடம்

ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் சொன்ன கதை

அலிகார் போலீஸ் தலைமை அஜய் ஷானி கூறியது: முஸ்தஹீன் (22), நவ்ஷாத் (17) இருவரும் ஆறு பேர்களைக் கொன்ற குற்றங்களுக்காகக்த் தேடப்பட்டவர்கள். கொல்லப்பட்ட வர்களில் இரண்டு பேர் இந்துசாமியார்கள் (‘இந்து’ சாமியார்கள் என்பதை அழுத்திச் சொல்லியுள்ளனர்). செப் 20 அன்று காலை பார்த்தால் இந்த “தேடப்பட்ட” இருவரும் ஜாலியாக பைக்கில் போய்க் கொண்டிருந்தார்கள். போலீஸ் கண்ணில் பட்டவுடன் துரத்தத் தொடங்கினர். அவர்கள் அங்கிருந்து நான்கு கி.மீ தொலைவில் இருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்திற்குள் ஒளிந்து கொண்டார்கள். அப்புறம் என்ன சார் பண்றது? என்கவுன்டர் பண்ண வேண்டியதாச்சு

எங்கள் பிள்ளைகள் மீது எந்த வழக்கும் இல்லை

ஆனால் பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் (நவ்ஷத்தின் தாயார் ஷஹீன் மற்றும் முஸ்தஹீமின் தாயார் ரஃபீகின் இருவரும்) இது பொய் என்கிறார்கள்  அவர்கள் சொல்வது:

“எங்கள் பிள்ளைகள் மீது எந்த வழக்கும் இல்லை  வீட்டிலிருந்துதான் இருவரையும் காவல்துறை அழைத்துச் சென்றது  இப்போது நாங்கள் வெளியே செல்லக் கூடாது என மிரட்டப்படுகிறோம்  தனியாகப் பெண்கள் இருக்கும் வீடு என்று கூடப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து போலீஸ்காரர்கள் உட்கார்ந்து கொண்டுள்ளனர். சோதனை என்கிற பெயரில் எல்லாவிதமான பேப்பர்களையும், இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்…”

இரண்டு உண்மை அறியும் குழுக்கள் அங்கு சென்று வந்துள்ளன ஒன்றில் JNU போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட உமர் காலித் இருந்துள்ளார். இன்னொரு குழு வெளியிட்டுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன

யோகி ஆதித்யநாத்

அந்தக் குழுவின் பெயர் ரிஹாயி மஞ்ச். அதன் பொதுச் செயலாளர் ராஜீவ் யாதவ் சொல்வது:

“சிவில் ஆடையில் போலீஸ்காரர்கள் அந்தப் பையன்களின் வீட்டில் உட்கார்ந்துள்ளனர். இந்து சாமியாரைக் கொன்றார்கள் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கொல்லப்பட்ட இந்து சாமியார் ரூப் சிங்கின் சகோதரர் கிரிராஜ் சிங்கிடம் பேசியபோது அவரே என்கவுன்டரில் தீர்த்தக் கட்டப்பட்ட முஸ்தகீமும் நவ்ஷத்தும் குற்றமற்றவர்கள் என்கிறார். கொன்றவர்கள் வேறு உள்ளூர் ஆட்கள்தான் எனவும் சொல்கிறார். அண்ணன் (ரூப் சிங்) கொல்லப்பட்டதாகப் போலீஸ் சொல்கிற அந்த நேரத்தில் நான் அவருடன் கோவிலில் பேசிக் கொண்டிருந்தேன்…”

மற்றவற்றை நாம்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்?
__________________________________________________
தங்களின் உயிருக்கு ஆபத்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழியே இல்லை எனும்போதுதான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள யாரையும் என்கவுன்டரில் கொல்ல முடியும்  போலீஸ்காரர் மட்டுமல்ல யாருமே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அப்படிச் செய்யலாம்

ஆனால் இப்படி சுட்டுக் கொல்லப்படுவதை வெடிக்கை பார்க்க ‘இன்வைட்’ பண்ணி அழைத்து, வீடியோ பதிவு செய்ய அனுமதித்து சுட்டுத் தள்ளுவது என்றால்?

அந்தப் பையன்கள் உண்மையிலேயே ஆறு கொலைகளைச் செய்திருந்தாலும் இப்படிச் சுட்டுக் கொல்ல சட்டத்தில் இடமில்லையே  ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருக்கும் இரண்டு பையன்களை இப்படிச் சுட்டுத்தான் பிடிக்க வேண்டுமா? சுடுவதற்கு முன் அந்தப் போலீஸ்காரர்கள் ஜோக் அடித்துக் கொண்டு நின்றனர் என ஒரு பத்திரிக்கை எழுதுகிறது!

யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின் 66 பேர் அதாவது 66 குடிமக்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்கள் என உ.பி அர்சே சொல்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?


1.சொல்ல மறந்து போனேன். இந்த “ஆறுபேர் – இரண்டு இந்து சாமியாகள் உட்பட கொல்லப்பட்ட” வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த இருவர் தவிர மேலும் 5 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. அந்த வீடியோவைப் பார்க்க வேண்டுமானால் NDTV யில் Aligarh Encounter எனத் தேடுங்கள்)

என்கவுன்டர் கலையில் ஒரு முன்னேற்றம்..
Marx Anthonisamy
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

%d bloggers like this: