Skip to toolbar

 ஆன்லைன் விமர்சகர்களால் சினிமா வியாபாரம் பாதிக்கப்படுகிறதா

-ஆன்லைன் விமர்சகர்களால் பாதிக்கப்படுகிறதா  என்றால் – சந்தேகமே வேண்டாம் சர்வநிச்சயமாக பாதிக்கப்படுகிறது
2019 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ், ஐரா, குப்பத்து ராஜா, வாட்ஸ்மேன், கீ, Mr. லோக்கல், தேவி 2, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, சிந்துபாத், தர்மபிரபு, களவாணி 2, கூர்கா, வெண்ணிலா கபடி குழு 2, கடாரம் கொண்டான், ஆடை
இந்தப் படங்கள் எல்லாம் நான் திரையரங்கில் பார்க்கவேண்டும் என்று நினைத்து, ஆன்லைன் ரிவ்யூக்களால் வாய்ப்பிருந்தும் பார்க்க வேண்டாம் என்று ஒதுக்கிய படங்கள்
முதல் காட்சி பார்த்துவிட்டு, பெரும்பாலும் நொந்து வெளியே வருபவனது வாயில் மைக்கத் திணிப்பதில் தொடங்கி இந்த விமர்சனச் சேனல்களது அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறித் தான் போய்க்கொண்டிருக்கிறது

ஆன்லைன் விமர்சகர்களால் தயாரிப்பாளர்கள் நிலைமை?

மேடைகளில் தயாரிப்பாளர்கள் புலம்புவதைப் போல, ரிவ்யூ போடுவதற்காக திரையரங்கிற்கு வெளியே நிற்பவர்கள் உள்ளே வந்திருந்தாலே பல படங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதைப் போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவில் வாசலை விட, திரையரங்கு வாசலில் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது
இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருந்தாலும் (அது முடியாது என்பது வேறு விஷயம்), படங்கள் ஓடாததற்கு இவர்கள் மட்டுமா காரணம்? மேற்சொன்ன படங்களை நான் பிளான்படி பார்த்திருந்தால் என் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
லாப நோக்கம் தான் என்றாலும் வாராவாரம் விடாமல் வரும் படங்களையெல்லாம் பார்த்து ரிவ்யூ சொல்கிறார்களே, அவர்களது மன தைரியத்தை அவசியம் பாராட்டியே தீர வேண்டும்
கமிட்மெண்டிற்காக கண்ட படங்களைப் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை யாருக்கும் வரக்கூடாது என்பது என் பர்சனல் ஒப்பீனியன் சினிமா என்பது கொண்டாட்டமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாயமாக இருக்கக்கூடாது.

பார்க்காதவர்கள் தேடிப் போய் பார்ப்பார்கள்

கொலைகாரன், ஜீவி, LKG, வெள்ளைப்பூக்கள், 100, மான்ஸ்டர், கேம் ஓவர் – இந்தப் படங்கள் என் லிஸ்டிலேயே இல்லை
விமர்சனங்களால் மட்டுமே இந்தப் படங்களைத் தேடிப் போய் பார்த்தேன். இவற்றில் எதுவுமே என்னை ஏமாற்றவில்லை என்பது ஆறுதல் (K13, தோழர் வெங்கடேசன், ஹவுஸ் ஓனர் போன்ற படங்கள் அருகில் எங்குமே வெளியாகவில்லை
இது வேறு டாபிக்) ஆக, விஷயம் இதுதான் படங்கள் நன்றாக இருந்தால் விமர்சனம் நன்றாகத் தான் இருக்கும்  பார்க்காதவர்கள் தேடிப் போய் பார்ப்பார்கள் பிரச்சனை எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும்
விமர்சகர்களைப் போலவே வாராவாரம் வெளியாகும் படங்களும் அதிகமாகிக்கொண்டே போகிறது ஆகையால் எதைப் பார்ப்பது எதை விடுவது என்ற குழப்பம் வாராவாரம் வரும்
ஆட்டோமேடிக்காக நமக்கென்றே வாய்த்த விமர்சகர்களது பக்கங்களைத் தான் கண்கள் தேடும். இதிலும் பெய்டு ரிவ்யூ, ஃபேக் ரிவ்யூ போன்ற கொடுமைகள் இருக்கிறது. ஆனால் மதியத்திற்குள் ஒரிஜினல் ரிசல்ட் தெரிந்துவிடும்
தமிழ் சினிமாவின் இன்றையத் தேவை நல்ல கதை, திரைக்கதை மட்டுமே. வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாரஸ்யமாக திரைக்கதை எழுதப்பட்ட படங்கள் மட்டுமே இங்கு ஓடுகிறது
மாஸ் படங்கள், கமர்ஷியல் படங்கள், ஸ்டைலிஷ் படங்கள், காமெடி, காதல், பேய் என்று அனைத்துமே போரடிக்கத் தொடங்கிவிட்டது. புதிதாக ஏதாவது இருந்தால் சொல்லு வந்து பார்க்கிறோம் என்ற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்
இதற்கு தியேட்டரே கதி என்று கிடந்த, இப்போது எதுக்கு போய்கிட்டு என்று செலெக்ட் செய்து பார்த்து கொண்டிருக்கும் நானே சாட்சி
அட்லீஸ்ட் காப்பியடித்தாவது (இன்ஸ்பயர்) நல்ல படங்களாகக் கொடுக்கலாம். கொலைகாரன், 100, மான்ஸ்டர், கேம் ஓவர் போன்ற படங்களின் களம் தமிழுக்குப் புதிதே தவிர, இதன் சாயலில் பலபடங்கள் உண்டு
கொரில்லா பார்த்தேன். பேங்க் ராபரி எனது பேவரிட் களம் என்பதாலும், நான் எழுதிக்கொண்டிருக்கும் (?) ஒரு நாவல் (??) பேங்க் ராபரி என்பதாலும் இந்தப் படம் பார்க்கவேண்டிய ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது

ஒரு பெருங்களத்தை வீணடித்திருக்கிறார்கள்

முதல் நாளே பார்த்துவிட்டேன் கொடுமை பல படங்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். அந்தப் படங்களின் காட்சிகள் கூட வருகிறது அதையெல்லாம் பார்த்தும் இவர்களால் நல்ல படம் எடுக்கமுடியவில்லை
மொத்தமாக ஒரு பெருங்களத்தை வீணடித்திருக்கிறார்கள் ரிவ்யூவர்களைச் சொல்லி குற்றமேயில்லை. விவசாயப் பிரச்சனை, ஜல்லிக்கட்டு, ஆன்லைன் வைரல், விவாத மேடை, மீம்ஸ், ப்ளூ சட்டை மாறன், பார்ட் 2 நோய் – இதிலிருந்தெல்லாம் என்று தமிழ் சினிமா வெளியே வருகிறதோ அன்று தான் நல்ல சினிமா வரும்
நான் விரும்பிப் பார்க்கும் இயக்குனர்களான மிஷ்கின், பாலா, கௌதம் மேனன் மூவருக்கும் தனித்தனியே பிரச்சனைகள். NGK என்ற ஒற்றைப் படத்தால் செல்வா மொத்தத்தையும் சுக்கு நூறாக்கிவிட்டார். வெற்றிமாறனுக்கு அசுரன் இருக்கிறது
வடசென்னை 2 டவுட் தான் போல அடுத்த ஷங்கர் படம் வர இன்னும் சிலவருடங்கள் ஆகலாம் சுந்தர் சி, ராம் இன்னும் தங்களது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை
மோகன் ராஜாவின் தனி ஒருவன் 2 பற்றிய அப்டேட்டே இல்லை சிவா, அட்லீ இருவர் மீதும் எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை

பொன்ராம் மீதிருக்கும் நம்பிக்கை, முத்தையா மீது இல்லை

பா. ரஞ்சித் சினிமாக்களின் நோக்கமே வேறு என்பதால் சொல்வதற்கு ஏதுமில்லை. அவர் தெளிவாக இருக்கிறார் மௌனகுரு சாந்தகுமாரின் ‘மகாமுனி’ நன்றாக இருக்க வேண்டும், இருக்கும் என்றே தோன்றுகிறது
பொன்ராம் மீதிருக்கும் நம்பிக்கை, முத்தையா மீது இல்லை. ‘நாளைய இயக்குனர்’ களில் நலன் குமாரசாமி என்ன ஆனார் என்றே தெரியவில்லை H. வினோத் அஜித் இடம் லாக் ஆகி இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது
‘மாநகரம்’ லோக்கேஷிற்கு கார்த்தியுடன் கைதி, அடுத்த விஜய் படம் என்று லைன் அப் நன்றாக இருக்கிறது. மாரி’ யால் பாலாஜி மோகன் மீதும், ‘சிந்துபாத்’ ஆல் அருண் குமார் மீதுமிருந்த நம்பிக்கை குறைந்திருக்கிறது
‘சீதக்காதி’ பாலாஜி தரணிதரன் மீது குழப்பத்தையே உண்டாக்கியிருக்கிறது. ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார், ‘மரகத நாணயம்’ சரவணன், ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ராம், ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ், ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ அஜய் ஞானமுத்து, ‘அறம்‘ கோபி, ‘அருவி’ அருண் பிரபு, ‘கோலமாவு கோகிலா’ நெல்சன் திலீப்குமார்
ஆகியோரது அடுத்த படங்கள் தயாராகிக்கொண்டிருப்பது பெரிய நம்பிக்கையைத் தருகிறது

சூர்யாவை காப்பான் தான் காப்பாற்ற வேண்டும்

நடிகர்களில் சிவகார்த்திகேயன் மீதிருந்த ஆர்வம் குறைந்து பல படங்கள் ஆகிறது விஜய் சேதுபதி போன வருடமே போரடிக்கத் தொடங்கிவிட்டார்
இன்னும் 2 படம் இப்படிக் கொடுத்தால் விக்ரம் மீள்வது சிரமம்  சூர்யாவை காப்பான் தான் காப்பாற்ற வேண்டும் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தனுஷ் மீண்டும் கேங்ஸ்டராம்
சிம்பு பீல்டிலேயே இல்லை  கார்த்தி-க்கு கைதி நிச்சயம் கைகொடுக்கக்கூடும்  நயன்தாரா, ஜோதிகா தலா இரண்டு நல்ல படங்களில் நடித்தார்கள்
சூரி, சதீஷிடமிருந்து தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும். விரைவில் அந்த நிலைமை யோகி பாபுவிற்கும் வரலாம். சந்தானம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்
ரஜினி, கமல், விஜய், அஜித் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவர்களது படங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை.
இன்னும் எத்தனையோ புதிய இயக்குனர்கள், நடிகர்கள் நம்மை அசரடிக்கக் காத்திருக்கிறார்கள
ஜீவி படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பே அதற்கு சாட்சி அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும்  நல்ல படங்கள் வரவேண்டும்  மற்றபடி ரிவ்யூவர்களால் தமிழ் சினிமாவிற்கு ஆபத்து என்பதெல்லா

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *