1-800-999-9999 — hi@loremipsum.com

ஆற்று மணல் சூறையாடப்படுகிறது / Read M Sand News in Tamil

ஆற்று மணல் இந்த விவகாரத்தை இப்போதுதான் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. ஆற்று மணல் சூறையாடப்படுகிறது என்றெல்லாம் உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (Manufactured sand  Or Artificial sand Manufacturing) பயன்படுத்தச் சொல்லி உத்தரவு போட வேண்டும் என்பது அந்த வழக்கின் சாரம்.

மிக முக்கியமான முன்னெடுப்பு இது. இது ஏதோ இன்றைக்கு எடுக்கப்படுகிற முன்னெடுப்பு போலச் சொல்லப்படுகிறது. உண்மையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இதுகுறித்த விவாதங்கள் கட்டுமானத் துறையில் நடந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஒரு லோடு மணல் 25000 ரூபாய் அளவில் 2012 இல் விற்கப்பட்டபோது இந்தத் துறையில் இருப்பவர்கள் எம் சாண்ட் குறித்து தீவிரமான உரையாடலை முன்னெடுத்தார்கள்.

ஆனாலும் அதுகுறித்த தெளிவான உரையாடல்கள் அரசுத் தரப்பில் அப்போது நடக்கவேயில்லை. அரசுத் தரப்பைப் பொறுத்தவரை ஆற்று மணலால்தான் கொழித்துச் செழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதால் இதுகுறித்து அவர்கள் காது கொடுத்துக் கேட்கக் கூடத் தயாராக இல்லை.

ஒரு பரிந்துரையை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டனர்.
பொதுவாகவே நாள்தோறும் சென்னைக்கு மட்டுமே சுமார் பத்தாயிரம் ட்ரக் லோடு வரைக்கும் ஆற்றுமணலுக்கான தேவைகள் இருக்கின்றன. தமிழகம் முழுக்க எடுத்துக் கொண்டால், 55000 மணல் லாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

நாளொன்றிற்கு ஒரு லோடாவது அவை அடித்து விடுகின்றன. இரண்டு லோடு, மூன்று லோடு அடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு லோடு மணல் என்பது குறைந்தது இரண்டு யூனிட். இந்தப் பின்னணியில் ஒரு நாளைக்கு எத்தனை லோடு மணல் தமிழகத்தில் மட்டும் அடிக்கப்படுகிறது என்பதைக் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு சட்டவிரோதமாகக் கடத்தப்படும் மணல் இந்தக் கணக்கில் வராது.

தவிர சட்டப்பூர்வமாகவே கேரளாவிற்கு மட்டும் ஒருநாளைக்கு சுமார் 100 லோடு வரை மண் இங்கிருந்து போவதாகவும் சொல்கிறார்கள்.

இதுதான் தமிழகத்தைப் பொறுத்தவரையான தினசரி மணல் தேவை. தனியார் கட்டுமானங்கள் மற்றும் பொதுப் பணித் துறையால் மேற்கொள்ளப்படும் அரசுக் கட்டுமானங்களும் இவற்றில் அடங்கும்.
இந்தப் பின்னணியில்தான் நீண்ட காலமாகவே ஆற்று மணலுக்கு மாற்றாகக் கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் மாற்று மணலான எம்.சாண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.

இந்த மணலைப் பொறுத்தவரை கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ஐ.எஸ்.383 தரத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

தரத்தில் ஆற்று மணலை விட இவை மிகச் சரியாக இருப்பதாகவே சொல்கிறார்கள். நிறத்தைப் பொறுத்தவரை அவை சிமெண்ட்டோடு சேரும்போது எந்த வித்தியாசங்களையும் கொண்டிருக்காது என்றும் விளக்குகிறார்கள்.

குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டடமான, துபாயில் இருக்கும் Burj Khalifa: Home Worlds Highest Tower in The Earth எம்சாண்ட் கொண்டு கட்டப்பட்டது என்றும் ஆதரத்தைத் தருகின்றனர்.

இதன் விலையைப் பொறுத்தவரை ஆற்று மணலை விட 30லிருந்து 40 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைக்கிறது.

தமிழகத்தின் ஒருநாள் தேவை தோராயமாக 30000 யூனிட் அளவு. கொஞ்சம் கூடலாம். குறையலாம். இந்தத் தேவையை மாற்று மணலைக் கொண்டு நிரப்பி விட முடியுமா என்று கேட்டால் முடியும் என்றே சொல்கிறார்கள்.
உதாரணமாகத் தமிழகத்தில் மட்டும் சுமார் ஆயிரம் கிரஷர்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஐம்பது குவாரிகள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றிலிருந்து சுமார் ஐயாயிரம் யூனிட் வரை உற்பத்தி நடக்கிறது. ஒரு கிரஷரில் இந்தப் பணியைத் துவங்குவதற்கு ஒரு கோடியிலிருந்து ஐந்து கோடி ரூபாய் வரை முதலீடு தேவை. அரசு இந்த விசயத்தில் மானியங்களைக் கொடுத்தால் மீதமிருக்கும் கிரஷர்களையும் செயலுக்குக் கொண்டு வர முடியும். மிக எளிதாகவே தமிழகத்தின் கட்டுமானத் தேவையான அந்த 30000 யூனிட் அளவை சரிக்கட்டி விட முடியும். இது முழுக்க முழுக்க இந்தத் துறை சார்ந்தவர்கள் சொல்லும் புள்ளி விபரம்

. வேலையில்லாத பொறியியல் பட்டதாரி நான் இல்லை என்பதால், இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
இப்படியொரு எளிதான தீர்வை வைத்துக் கொண்டு எதற்காகப் புலம்பிக் கொண்டு அலைகிறோம்?

ஏன் மாற்று மணலை கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை? என்கிற கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால், இதில் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் புரிதல் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது,
இத்தனைக்கும் அரசு கண்டிப்பான உத்தரவாக அல்லாமல் எம்.சாண்ட் பயன்படுத்தலாமென ஒரு பரிந்துரை அறிவிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது.

ஆனாலும் அரசு காண்டிராக்டர்கள் இன்னமும் ஆற்று மணலையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில் எம்சாண்டை விட விலை குறைவாக இருக்கும் திருட்டு மணலைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

உண்மையில் இங்கே சிக்கல் 80 சதவீதம் மக்களிடம்தான் இருக்கிறது. இங்கு மக்கள் என்று சொல்லி யாரையும் குற்றம் சொல்லவே முடியாது. மக்கள் என்ன செய்தாலும் சரி என்பதுதான் அடிப்படையாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் மக்கள் மனது வைத்தால் இந்த விவகாரத்தில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

ஆனால் மாற்று மணலால் கட்டப்பட்ட வீடுகள் வெயிலில் உருகி விடும் என்கிற ரேஞ்சிற்கு இங்கே அறியாமை நிலவுகிறது. தவிர விலை அதிகமானாலும் பரவாயில்லை, ஆற்று மணல்தான் வேண்டும் என மக்கள் அடம்பிடிக்கிறார்கள்.
“எங்க தாத்தா காலத்துல இருந்து மணலில்தான் வீடு கட்டுகிறோம். நானும் அப்படித்தான் கட்டுவேன்” என மக்கள் அடித்துச் சொல்வதாக இந்தத் துறையில் இருக்கும் கட்டுமானக்காரர்கள் சொல்கிறார்கள்.

தவிர மணல் மாபியாக்களின் பிடியில் இந்த வணிகம் இருப்பதால், அது பணம் கொழிக்கும் துறையாகவும் இருப்பதால் இந்த மாற்று என்கிற வார்த்தைக்கு எதிராகவே அவர்கள் கொடி பிடிக்கின்றனர்.

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வீட்டு வாசலில் கொட்டும் மணலில் கையை விட்டால் தண்ணீர் சொட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

M Sand In Tamil News

ஆனால் ஆற்று வளத்தைச் சூரையாடுகிறோம் என்றெல்லாம் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய பொறியாளர் மாற்று மண் என்று வார்த்தையை உச்சரிக்க ஆரம்பிப்பதற்குள் அதற்குத் தடை போடத் தலைப்படுகின்றனர்.

மாபியாக்களைப் பொறுத்தவரை ஆற்று மணல் இருக்கிற வரைதான் ஆட்டம் எல்லாமும். இரண்டு யூனிட் என்று சொல்லி விட்டு ஐந்து யூனிட் வரை ஆட்டையைப் போடும் நிதர்சன நிலையை அவர்கள் உடைக்கத் தயாராக இல்லை.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளுக்குமான முக்கிய வருவாய் ஆதாரம் என்பது மணல் வியாபாரமே.

நேரடியான அரசு வருவாய் என்பதை இந்த இடத்தில் சொல்லவில்லை, மறைமுகமான மணல் வருவாய் என்பதை இந்தயிடத்தில் பொருத்திப் புரிந்து கொள்ளுங்கள்.

திராவிடக் கட்சிகளே இப்படித்தான் என்கிற அரசியல் ரீதியிலான குரலில் இதைப் பதிவு செய்யவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.

நிதர்சனத்தைப் பதிவு செய்கிறேன். மணல் வியாபாரம் முழுக்க இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்லாமல் பலம் பொருந்திய பிற கட்சிகளின் குறுநில மன்னர்களின் கைகளில் இருக்கிறது.

அதை உடைப்பது என்பது இயலாத காரியம்தான். ஆனால் அதைவிட உடைக்க முடியாத ஒன்று இருக்குமென்றால் அது மக்களின் மனநிலைதான்.
பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்கிற மனநிலையில் இந்த விஷயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்ல முடியும்.

ஆற்று மணல்

மாற்று மணல் குறித்த தெளிவான புரிதல்களை மக்கள் மத்தியில் கொண்டு வருவதுதான் இப்போதைய உடனடித் தேவை.

ஆற்று மணல் சூறையாடுகிறவர்களின் கையை உடைக்க வேண்டும் எனக் குரல் எழுப்புபவர்களை நிறுத்தி, உன்னோட வீட்டுல எம்சாண்ட் பயன்படுத்துவாயா எனத் துணிந்து கேட்கலாம். ஜனநாயகத்தில் யாரை நோக்கியும் கேள்விகள் கேட்கலாம்.

மக்களும் அதில் அடக்கம். மக்கள் என்பதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் சரியென்று தலையாட்டினால், இனி ஆறுகளே இருக்காது. தவிர இந்த விசயத்தில் மக்கள் தலையில் கொஞ்சம் கொட்டினாலும் தப்பில்லை.
– Saravanan Chandran

About a M sand , Manufactured sand is a substitute of river for construction purposes sand produced from hard granite stone by crushing. The crushed sand is of cubical shape with grounded edges, washed and graded to as a construction material. The size of manufactured sand (M-Sand) is less than 4.75mm.

Read More Online news articles about M Sand 

%d bloggers like this: