ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து
ஆளுமைகள்

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து

ஆளுநரின் தலையீட்டால்

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்.அன்பார்ந்த மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகளுக்கு வணக்கம்

நான் சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) பயின்று வருகிறேன். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக இதழியல் (JOURNALISM) துறையில் பயின்றேன்

கடந்த ஜூலை 31ம் தேதி பல்கலைக்கழக விதிமுறையின் அடிப்படையில் தத்துவவியல் துறையில் முதுகலைக்கான பட்டப்படிப்பில் சேர்ந்தேன் அதைத் தொடர்ந்து கடந்த ஒருமாத காலமாக வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன்

அட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்

இந்நிலையில், கடந்த 21ம் தேதி தத்துவவியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி என்னை அழைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷ்ஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உங்களது அட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்

எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்?

மாணவரிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரது சான்றிதழ்களும் சரியாக உள்ளது. எதைச் சொல்லி அவரது அட்மிஷனை ரத்து செய்வேன் என்று நான் துணைவேந்தரிடம் கூறினேன்” என்றார்

இதைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன் எனது கல்வி சான்றிதழ்களிலிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன்!

அதற்கு துறைத்தலைவர் பேரா.வெங்கடாஜலபதி, “நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே

ஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள்

அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள்

எனக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை தனிப்பட்ட விரோதமும் இல்லை ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை” என்றார் அதன்பிறகு ஒருவார காலம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது

மீண்டும் கடந்த 29ம் தேதி என்னை அழைத்த பேரா.வெங்கடாஜலபதி, “தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை மற்றும் துணைவேந்தரிடமிருந்து உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி பிரஷ்ஷர் கொடுக்கின்றனர். எனது 20 ஆண்டுகால பணி அனுபவத்தில் இதுபோன்ற பிரஷ்ஷர்ரை எதிர்கொண்டதில்லை

எனவே, உங்களது அட்மிஷனை ரத்து செய்துள்ளேன். அதற்கான கடிதத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்

உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்

வகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்திற்கு பிறகு இவ்வாறு செய்வது நியாயமா..? என்று கேட்டேன். அதற்கு “நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை, இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்

என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார் பேரா.வெங்கடாஜலபதி. ஆனால், எனது அட்மிஷனின்போது “ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை

முதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷ்ஷர், என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டார் எனது அட்மிஷனையும் ரத்து செய்துள்ளார்

சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும்

நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெறமுடியும் தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது

எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது

மேலும், எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் இன்னும் பல மாணவர்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர். பிரச்சனை எலிஜிலிபிலிட்டி சான்றிதழ் பற்றியது அல்ல எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது

உரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்கும் சென்ற பிறகு சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்து பழிவாங்கியுள்ளது.

கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல்தலைமுறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன்

அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

முறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக, அம்பேத்கர் பெரியாரின் கருத்துகளை பேசியதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது. இது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது

மறுக்கப்படும் எனது கல்வி உரிமையை மீண்டும் பெறுவதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

கிருபாமோகன்,
முதுகலை முதலாமாண்டு,
தத்துவவியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
சேப்பாக்க வளாகம்.

Contact: 7550274571

தகவல் உதவி Ambedkar Periyar Study Circle

Comments

0 comments

Related posts

எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை

admin

வெளிநாட்டு பொருட்களை பலர் இந்த வாரம் தவிர்த்ததால்

admin

 சமூக அந்தஸ்த்தை இழந்தவர்கள் கோபம் ராகவன் கோபம் நியாயம் 

admin
%d bloggers like this: