இஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு

 

ஆளூர் ஷா நவாஸ் இலங்கை சம்பவத்தை
கண்டிக்கிறேன் என்ற பெயரில் இங்குள்ள 
சமுதாய இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் கடுமையான விமர்சித்து இருக்கிறார்

கடும் போக்கு கொண்டவர்களால் தான் கடந்த 25 வருடங்களுக்காக இஸ்லாமிய சமுதாயம் பல இன்னல்களை பெற்று இருப்பதாக
ஓர் பொய்யான வாதத்தை வைத்து தன்னை 
அமைதி விரும்பியாக காட்ட முயல்கிறார்
கடும் போக்கு கொண்ட இயக்கங்களால் தானே 
சமூக சேவைகளும் சீர்திருத்த நடவடிக்கைகளும் 
ஏற்பட்டது என்று கேள்வியார் வினா எழுப்பும் போது மழுப்பலான வாதத்தை வைத்து மடை மாற்றுகிறார்


உலகிலே எங்கேயோ நடக்கும் நிகழ்வுகளுக்கு 
இங்கே உள்ள இஸ்லாமிய மக்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் நமக்காக அவர்கள் குரல் கொடுத்தவர்களா என்ற ஓர் அற்ப வாதத்தை வைத்து உம்மத்களுக்கான உறவை கொச்சை படுத்துகிறார் …….
கடும் போக்கு உடையவர்கள் யார் அவர்கள்? என்று 
கேள்வியாளர் கேட்கும் போது 
அது கூடாது இது கூடாது என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் தான் என்று 
மறைமுகமாக தவ்ஹீத்வாதிகளை – ததஜவை 
குற்றம் சாட்டுகிறார்


சினிமா பாட்டு பன்முக கொண்ட இஸ்லாத்தில் 
அனுமதிக்க பட்ட ஒன்று தான் என்றும் 
கலை இலக்கியம் இவற்றை எல்லாம் இஸ்லாம் எதிர்ப்பது போல பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்

சமீபத்தில் நடந்த மரண இழப்புகளை 
கடும் போக்கு உடையவர்களால் நடத்த பட்டது போன்று கூறி மறைமுகமாக சகோதர அமைப்பான SDPI கடுமையாக சாடுகிறார் …..
எத்தனை உயிர் காக்கும் சேவைகள் -சமூக மேம்பாட்டு பணிகளை செய்யும் சமுதாய இயக்கங்களை சற்று கடுமையான 
சொற்டேல் கொண்டு தாக்குகிறார் 
சமுதாய இளைஞர்கள் 90 % 
வரலாறு தெரியாத மார்க்கத்தை தவறாக புரிந்து 
கொண்ட முட்டாள்கள் என்ற கோணத்தில் தனது வாதத்தை வைக்கிறார்

ஆளூர் ஷா நவாஸ்

தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு 
தீவிரவாதத்தை கடுமையாக எதிர்த்து வரும் 
இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆளூர் ஷாநவாஸ் 
போன்றோர் ஆறுதலான வார்த்தைகள் கூறா விட்டாலும் குறைந்த பட்சம் தமது 
சொந்த சமுதாயம் சார்ந்த கட்சிகளை 
அமைப்புகளை பொது வெளியில் 
துற்றமால் இருந்தாலே போதுமானது …
அல்லாஹ் போதுமானவன்

ABU JAMAL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *