இசையும் ஒலியும்Tamil Cinema News 

  இசையும் ஒலியும் சரியா அமைஞ்ச ஒரு காட்சி

  இசையும் ஒலியும் சரியா அமைஞ்ச ஒரு காட்சி

இசையும் ஒலியும் சரியா அமைஞ்ச ஒரு காட்சி யைப் பற்றி மட்டும் இப்ப பார்ப்போம் துப்பாக்கி படத்துல விஜய் உடைய தங்கச்சிய கடத்துற காட்சி அதுல முழுக்க இசை இருக்கும்

விஜய் தா அண்ன்ணன்னு காட்டினும் அந்த காட்சிஅடுத்த mood க்கு shift ஆகுது அதுக்காக அங்க இசை நிறுத்தப்படுது 

வெறும் சத்தம் அந்த இடத்தை களவரமா நமக்கு மாத்தித்தருது தொடர் காட்சிகள் அடுத்து கழுத்துல கத்திய வெச்சி வில்லன் அடியாள் அறுக்க போகும் பொழுது என்னமோ சத்தம் கேட்குதுன்னு வில்லன் அதை நிறுத்துவான்

துப்பாக்கி இசையும் ஒலியும் சேரும் பொழுது இந்த கொண்டாட்டத்தை கொண்டு வர முடியும்

இசை சுத்தமா இருக்காது அப்ப தியேட்டர்ல பார்க்குற எல்லாருடைய காதும் இன்னும் sharp ஆகும் உண்மையில அங்க ஒலியும் இருக்காது இந்த இடத்துல இயக்குனர் முருகதாஸ் பார்வையாளர முழுசா தயார் படுத்துறார்

எல்லார் காதும் கவனிக்கத் Banners தொடங்கியதும் நாய் குலைக்கிற சத்தம் மட்டும் கேட்குது தியேட்டர்ல விசில் பறக்குது அதாவது அதுக்கு முந்தின காட்சியில விஜய் தான் நாயோட தங்கச்சிய தேடி வரார்ன்னு காண்பிச்சிருப்பாங்க

நாயோட point of view shot-சந்தோஷ் சிவன்

சந்தோஷ் சிவன் ஒரு படி மேல போய் அந்த காட்சியில நாயோட point of view shot எடுத்து black and white ல போட்டிருப்பார் முழுசா பார்க்குற பார்வையாளர் உடைய mood அ set பண்ணியிருப்பாங்க

அதனால தான் நாய் குலைக்கிற சத்தத்துக்கே தியேட்டர் அதிர்ந்தது அதுக்கு அடுத்த shot முழு music யோட hero smoke effect ல reveal ஆவார். தியேட்டர் அடுத்த கட்ட கொண்டாட்டத்துக்கு தயார் ஆகும்

தமிழ் சினிமா மட்டுமில்லை உலக சினிமாவே இசைக்குப்பழகிடிச்சி அதனால அதை மொத்தமாக தூக்குவது என்பெதெல்லாம் யோசிக்க முடியாததுதான்

அதே நேரம் அதனோட தேவையை நாம தான் குறைக்கனும். தெளிவாக்கனும். அதுக்கு முதல்ல அதை தள்ளிவைச்சிட்டு சினிமாவ அணுகனும்

இது தான் நான் சொல்ல வருவதுnஒரு காட்சியை படமாக்குகிறோம் ஆனால் அது நாம நினைச்ச mood தரல அப்ப பயம் வருது இசையமைப்பாளர் கிட்ட சரண்டையிர சூழல் வருது

நமக்கு இசை பற்றிய ஞானம் இருந்தா பிரச்சனையில்லை இல்லைன்னா அவர் என்ன போட்டிருக்காருன்னோ இல்லை அதை எப்படி மாத்தி கேட்குறதுன்னோ தெரியாம கஷ்டப்படுவோம் படம் குழம்பும் இசைய விட ஒலி நமக்கு பக்கதுல உள்ளது

ஒரு காட்சி சரியான உணர்வ பிரதிபளிக்கனும்னா அதுக்கு முதல்ல திரைக்கதை அப்புறம் நடிப்பு அப்புறம் ஒளிப்பதிவு அதுக்கடுத்து முக்கியமானது ஒலிn எல்லாமும் நல்லா அமைஞ்சிட்டா இசைஅமைப்பாளர்கிட்ட போகும் பொழுதே படம் எல்லா உணர்வுகளையும் சரியா தரக்கூடிய இடத்துக்கு முன்னேறிடும்

இசை சேரும் பொழுது படம் இன்னும் பல மடங்கு உணர்வுப்பூர்மாக தெரியும்

நாம எல்லாத்தையும் கொண்டு வர மெனக்கெடரோம் ஒலியை மட்டும் விட்டுடறோம் அந்த இடத்தையும் சேர்த்து இசைக்குக்கொடுத்திடறோம்
அதனால தான் இசையோட நம்ம பஞ்சாயத்து வருது

இனைப்பு comment ல். தமிழில் கிடைக்காததால் தெலுங்கு version.

பி.கு – நான் sound கத்துக்கிட்டது முழுக்க முழுக்க உலக சினிமாவுல தான் இருந்தாலும் நாமளும் யாருக்கும் சலைச்சவங்க இல்லைன்னு தான் முடிஞ்ச வரை தமிழ் படத்துல இருந்து reference தரேன்

தேவைப்படும் போது உலக சினிமாவும் வரும்

Related posts

%d bloggers like this: