1-800-999-9999 — hi@loremipsum.com

இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்!

இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்!

நமது இராணுவ வீரர்கள் 44க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 20 வருடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்!

தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் ஈ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தற்கொலைப் படை பயங்கரவாதி 300 கிலோ வெடி மருந்துகளுடன் ஒரு காரில் வந்து இராணுவ வீரர்கள் வந்த பஸ்சில் மோதி திட்டமிட்டு நடத்தியிருக்கும் கோரமான இரக்கமற்ற ரத்த வெறி பிடித்த வன்முறைச் செயலின் உச்சம் இது!

நமது உளவுத் துறையின் தோல்வி இது! டெர்ரரிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக செயல்படுவதற்காகவே ஐ.பி யிலிருந்து தனியாகப் பிரித்து அமைக்கப்பட்ட என் ஐ ஏ எனப்படும் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சியின் உயரதிகாரிகள் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பான பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்!

பல பயங்கரவாத அமைப்புகளுக்கு பின்னாலிருந்து பண உதவி, ஆயுத உதவி செய்து வரும் பாகிஸ்தானை பகிரங்கமாகக் கண்டித்து அத்தனை பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவைக்க வேண்டிய தருணம் இது.

நட்பைத்தான் விரும்புகிறோம் என்று புன்னகை செய்தபடியே கொத்து கொத்தாக நம் வீரர்களின் உயிர்களைப் பறித்து அவர்களின் குடும்பங்களுக்கு கண்ணீரை பரிசாகக் கொடுத்து வரும் இரட்டை வேடத்தை உலக அரங்கில் துகிலுரித்து்க் காட்ட வேண்டும்.

கார்கில், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று எத்தனை முறை நம் பலத்தை நிரூபித்துக் காட்டினாலும் அடங்காமல் வாலாட்டும் பகை அரசுக்கு எதிராக அமைதி விரும்பும் உலக நாடுகள் அனைத்தையும் ஆதரவு திரட்டி ஓங்கி எதிர்ப்புக் குரல் கொடுக்கச் செய்ய வேண்டும்.

நாட்டைக் காக்கும் நற்பணியில் தன்னுயிர் நீத்த தியாகச் சிங்கங்களின் சோகக் குடும்பங்களுக்கு கை கூப்பி கண்ணீருடன் ஆறுதல் சொல்வோம்.

இன்னொரு யுத்தம் தூண்டப்பட்டுவிடக் கூடாதே என்று பதைப்பாய் இருக்கிறது!

PKB

ராணுவ வீரர்கள் பயணம் செய்ய வேண்டி ஒரு வார காலமாக அனைத்து சாலைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது 

அந்த கார் அனைத்து செக்போஸ்ட் களையும் தாண்டி 350 கிலோ எடையுள்ள வெடிமருந்து கொண்டுவந்து ஒரு மனிதரால் இந்த விபத்தை ஏற்படுத்த முடியுமா.? அப்படி முடியும் என்றால்.! செக் போஸ்ட்களில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.? 

காஷ்மீர் என்பது தமிழ்நாட்டை போன்றோ.! மற்ற மாநிலங்களைப் போல அல்ல.! 

தடுக்கி விழுந்தால் ஒரு செக் போஸ்ட் என்ற அடிப்படையில் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்க படுகிற ஒரு மாநிலம் தான் காஷ்மீர் 

எப்படி இத்தனை செக்போஸ்ட் கலையை அந்த கார் தாண்டி வந்தது.? அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் ஏன் அந்த காரை தடுக்கவில்லை.? 

ஒரு வார காலமாக மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருந்த சாலையை எப்படி அந்த காருக்கு மட்டும் திறந்து விடப்பட்டது.? என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது.

%d bloggers like this: