இந்திய சினிமாக்களில் குடித்துவிட்டு பாடும் பாடல்கள்
Tamil Cinema News

இந்திய சினிமாக்களில் குடித்துவிட்டு பாடும் பாடல்கள்

குடித்துவிட்டு பாடும் பாடல்கள்

இந்திய சினிமாக்களில் குடித்துவிட்டு பாடும் பாடல்கள்

சரக்கும் இந்திய சினிமாவும் இப்போ நம்ம ஏரியா பக்கம் வரலாம். இந்திய சினிமாக்களில் குடித்துவிட்டு பாடும் பாடல்கள் மிக அதிகம் ஆரம்பகாலம் முதலே

ஆனால் அந்தப் பாடல்களில் எவையெல்லாம் இயல்பாக இருக்கும் என்று யோசித்தால், மிகக்குறைவான பாடல்கள்தான் அதிலும் வங்காளப் பாடல்களே இயல்பாக இருக்கும். அதன்பின் கேரளப் பாடல்கள்

தமிழில், குடித்ததும் அண்டர்வேரைக் காட்டிக்கொண்டு ஆடவேண்டும் (தண்ணித்தொட்டி தேடிவந்த)  இல்லையென்றால் கள்ளுக்கடையில் கூட ஆடும் பெண்களைத் தடவவேண்டும் (சிங்காரி சரக்கு)

இல்லாவிட்டால், குடும்பத்துக்கு ஏதாவது அறிவுறை கூறி, போடி தங்கச்சி என்று ஆடவேண்டும். அதுவும் இல்லாவிட்டால், டிஸ்கோவில் ஆடும் பெண்களுக்குப் போட்டியாக VAT 69ஐ ராவாக மடக்கு மடக்கு என்று குடித்துவிட்டு அவர்களை விட நன்றாக ஆடவேண்டும் (ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மணி

அடப்பாவிகளா! ரஜினி குடிப்பதுபோல் யாராச்சும் வேட் 69ஐ அப்படியே கையில் ஊற்றி மடக்கு மடக்கு என்று குடித்துவிட்டு ஸ்டெப் போடுங்கள் பார்க்கலாம்? இதுதான் தமிழ் சினிமா). இல்ல மிஷ்கின் டைப்ல டாஸ்மாக்ல ஜிங்கு ஜிங்குன்னு ஆடணும்

குடித்தால் அவன் வெறிநாய் போல இருப்பான் என்ற டுபாக்கூர் கற்பனையைக் காட்டியது தமிழ். பின்னர் தெலுங்கு. (ஆனால் இவற்றிலும் சில விதிவிலக்குகள் உண்டு. ரொம்பக் கம்மி). காரணம், அந்த இயக்குநர்கள் எல்லாம் குடித்ததே இல்லையோ என்று எனக்குத் தோன்றியது உண்டு. இல்லாவிட்டால் ரெண்டு பியருக்கே கைலாசம் செல்பவர்களாக இருக்கலாம்.

இந்தப் பின்னணியில்தான் ஹிந்தியின் சரக்குப் பாடல்களுக்கு நாம் வரவேண்டி உள்ளது.

ஹிந்தியிலும் ஓவரான சரக்குப் பாடல்கள் அதிகமே. ஆனால் லேசாக, இயல்பாக, சரக்கு போட்டுவிட்டு நாம் எல்லாரும் நமது நண்பர்களுடன் வாழ்க்கை பற்றி உளறுவோமே.. அப்படியான பாடல்கள் அங்கே கொஞ்சம் உண்டு

அதில் ஒரு பாடல் இது காரணம் எதுவுமே சொல்ல மாட்டேன். பாருங்கள். பிடிக்காவிட்டால் எழுதுங்கள்

பி.கு – அப்படியே தமிழில் மிக இயல்பான சரக்குப் பாடல்களை நண்பர்கள் கமெண்ட் செய்யலாம். (ஆனால் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சரக்கில் ஏதாவது அனுபவம் இருந்தால்தான் அந்த experience தெரியும்

உடனே சைக்கோ படம் பார்த்தா கொலை பண்ணணுமாடா என்று நான் கேட்பதுபோல் கேட்கவேண்டாம். ஒரு அனுபவமாக, ரெண்டு ரவுண்டு போட்டால் ஒரு ஜாலி இருக்கும் இல்லையா? அந்த ஜாலியில் தோன்றலாம்

எனவே சொன்னேன். இல்லாவிட்டால் சரக்கு அடிக்கும் ஆசாமிகள் உளறுவதைக் கேட்டு சைட் டிஷ் சாப்பிட்ட அனுபவம் இருந்தாலும் போதும்).

பி.கு 2 – எனக்கு என்னமோ, கண்ணதாசன் பாடல்கள் ஜாஸ்தி வரும் என்று தோன்றுகிறது. Anyway I shall be ready. Bring it on.

இதுதான் நான் நினைத்த பாடல் – https://www.youtube.com/watch?v=R-bvaFL-IOs

இந்தப் படமே அருமையான படம். பாஸு சாட்டர்ஜீ இயக்கியது. இந்தப் படம் பத்தி நம்ம சினிமா ரசனை புத்தகத்துல எழுதியிருக்கேன்

Karundhel Rajesh

Comments

0 comments

Related posts

இன்னல் யார் பட்டாலும் ஓடோடிச்சென்று முதலில் உதவ வேண்டும்

admin

சினிமா உலகம்தான் எத்தனை நயவஞ்சகம் நிறைந்தது

admin

கிரேஸி மோகன் நினைவலைகள்

admin
%d bloggers like this: