இனாம் என்றால் என்ன? சட்டம் தெரிந்து கொளவோம் இனாம்

இனாம் என்றால் என்ன? சட்டம் தெரிந்து கொளவோம்,  இனாம்  இனாம்கள் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட இனங்கள்
முன்னால் இந்து மன்னர்கள் காலத்திலும், முகமதியர் காலத்திலும் மத ஸ்தாபங்களுக்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கும், ஊழியர்களுக்கும், துறவிகளுக்கும் மற்றும் அறிவாளிகளுக்கும் நிலவரியில்லாமலோ அல்லது குறைந்த அளவு நிலவரி செலுத்துவதற்குட்பட்டோ ஊழியர் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் இனாம் நிலங்களாகும்

இனாம் நிலங்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது

சத்திரம் தேவதாயம் : இனாம்கள்

மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் ஆகும்

இனாம் என்றால் என்ன? சட்டம் தெரிந்து கொளவோம் இனாம்
இனாம் என்றால் என்ன? சட்டம் தெரிந்து கொளவோம் இனாம்

தர்மாதாயம்
சத்திரம், தண்ணீர்ப் பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபங்களுக்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்
தசபந்தம்
வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம் ஆகும்
பிரம்மதேயம்
வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள்
காவல் ஊழியம் :
நாட்டின் பண்டைக்கால காவல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள்
கிராம ஊழியம்
சாதாரண கிராம வரிவசூல் மற்றும் கிராம காவல் வேலைகளுக்காக வழங்கப்பட்ட இனாம்கள்.
கைவினைஞர் இனாம்
தச்சர், கொல்லர், நாவிதர், முதலிய கைவினைஞர்களுக்குக் கிராம ஊழியத்திற்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்
கிவிட்ரெண்ட்(Quit Rent)
ஊழியம் தேவைப்படாத கிராமங்களை பொறுத்தமட்டில் அவை உரிமை அளிக்கப்பட்ட இனாம்களாக கருதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ,வாங்கவோ, மாற்றவோ உரிமையாக்கப்பட்டது
இதற்குண்டான தொகை ரயத்துவாரி தீர்வைக்கு நிகராக விதிக்கப்பட்டது. அந்த தொகைக்கு கிவிட் ரென்ட் (Quit Rent) என்று பெயர்
ஊழியம் தேவைப்பட்ட இனாம்களை பொறுத்த வரையில் உரிமை அளிக்கப்படாத நிலங்களாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ, வாங்கவோ மாற்றவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டது
ஊழியம் நடைபெறும் ஆண்டு வரை அனுபவித்து வரலாம், ஊழியத்தை நிறுத்திவிட்டால் அந்த நிலங்களை அரசினர் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.(1963 – ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டச் சட்டத்தின்படி இனாம்கள் ஒழிக்கப்பட்டது)

ஜமீன் தாரர்-ஜமின் முறை

மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல்செய்ய இடைத் தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர்
இவர்களுக்கு ஜமீன் தாரர் என்று பெயர், இவர்கள் பணி, நிலவரி போன்றவற்றை வசூல் செய்து கணக்குகளுடன் மன்னர்களுக்கு ஒப்படைப்பதாகும்
இதற்காக அவர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியினை நிலவரி வசூல் செய்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது
அவ்வாறு வழங்கப்பட்ட பகுதிக்கு ஜமீன் என்று பெயர் பிறகு ஜிமீந்தாரருக்கு வரிவசூல் செய்யும் உரிமை நிரந்தரமாக வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டது
முழு வருவாயும் கணக்கிடப்பட்டு ஒரு பகுதி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையாக நிர்னயிக்கப்பட்டது, அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு பேஷ்குஷ் என்று பெயராகும்
இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்கு ஜமீன் தாரருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு ஜோடி என்று பெயர்.
1948-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தினால் எல்லா ஜமீன்களும் ஒழிக்கப்பட்டது. சில மத ஸ்தாபாங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இனாம்தாரர்களாகவும், ஜமீன் தாரர்களாகவும் இருதார்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்தாபனங்களைத் தொடர்ந்து நடத்த உதவி தேவைப்பட்டது அதற்காக நிலவரி திட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்டத் தொகை அவர்க்ளுக்குப் பிரதி வருடம் வழங்கப்பட்டது அத்தகைய தொகைக்கு‘தஸ்டிக் படிகள்’(Tasdic Allowances) என்று பெயர்

ரயத்துவாரி நிலவரி முறை

ரயத்துவாரி  பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு நில வருவாய் முறையாகும், இது சர் தாமஸ் மன்ரோவால் 1820 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது பாரமஹால் மாவட்டத்தில் கேப்டன் அலெக்சாண்டர் ரீட் நிர்வகித்த அமைப்பின் அடிப்படையில் யத்துவாரி என்பது பிரித்தானிய இந்தியாவில் விவசாய நிலங்களில் இருந்து வரி வசூல் செய்யும் இரு முறைகளில் ஒன்றாக இருந்தது. மற்றொன்று ஜமீன்ந்தாரி முறை.

ரயத்துவாரி முறையின் படி பிரித்தானிய அரசு நிலத்தை பயிரிடுபரிடம் நேரடியாக வரி வசூல் செய்தது

ரயத்து என்ற சொல்லுக்கு “உழவர் என்று பொருள்

ரயத்து என்ற சொல்லுக்கு “உழவர்” என்று பொருள். பயிரிடுபவர்களிடம் வரி வசூல் செய்து அரசுக்கு செலுத்தும் இடைத்தரகர்கள் இம்முறையில் இருக்கவில்லை
மற்றொரு முறையான ஜமீந்தாரி முறையில் பயிரிடுபவர்களிடமிருந்து வரி வசூல் செய்த ஜமீன்தார்கள் அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியானதை அரசுக்கு செலுத்தினர்
அரசுக்கும் பயிரிடுபவருக்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டனர். ரயாட்வாரி முறையில் பயிரிடுபவர் நிலத்தீர்வையை நேரடியாக அரசுக்கு செலுத்தினார்
தனது நிலத்தை அவர் நினைத்தவாறு விற்கவோ, அன்பளிப்பாகக் கொடுக்கவோ, அடகு வைக்கவோ முடிந்தது. விதிக்கப்படும் தீர்வையை அவர் தவறாமல் செலுத்தி வரும் வரை சட்டப்படி அவரை அரசால் அவரது நிலத்திலிருந்து வெளியேற்ற இயலாது
மேலும் தான் பயிரிடும் நிலத்தின் அளவைக் நினைத்தபடி கூட்டவும் குறைக்கவும் உரிமை பெற்றிருந்தார். பஞ்ச காலங்களிலும், விளைச்சல் குறைவான காலங்களிலும் விளைச்சலுக்கு ஏற்ப நிலத்தீர்வை குறைத்துக் கொள்ளப்பட்ட
written by mylsamy
Sell From Facebook
Need to promote your business? 
Find your dream property in Chennai 
Find business in your location 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *