பெரியாரை வேண்டாம் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்
ஆளுமைகள்

பெரியாரை வேண்டாம் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்

இயக்குனர் பா ரஞ்சித்

பெரியாரை வேண்டாம் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்

பெரியாரை வேண்டாம் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்  பெரியாரை மறுத்து அம்பேத்கரே போதும் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்  அது தொடர்ந்து வந்த இடைசாதி அழுத்தத்தால் ஏற்பட்டதென எண்ணுகிறேன் தொடர்ந்து புறக்கணிக்கபடும் போது ஏற்படும் வலி அது எதனால் என்பதையெல்லாம் ஆராய்வதில்லை மாறாக ஏதோ ஒன்றை பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டுமென்ற நிலை  இப்படி பேச வைக்கிறது

பெரியாரை மறுத்த ஜெய்பீம் எடுபடுமா

பெரியாரை மறுத்த ஜெய்பீம் எடுபடுமா.. என்ற கேள்விக்கு பதில் வடநாடுகளில் தலித்துகளின் நிலை ஒன்றே போதும்.. மீசை முறுக்கினாலே உயிர் ஊசலாடும் .. தலித்களின் வாழ்வாதாரம் எந்த நிலையில் என்பதும் நாம் ஆராய வேண்டும்.. தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் தலித் சமூகம் மேம்பாடடைந்ததென சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு மெச்சபட்ட கொஞ்சம் சுயமரியாதையோடு வாழ .. இன்னும் கொஞ்சம் அடங்கமறு அத்துமீறு என முழங்க முடிகிறதென்றால் அது பெரியார் தந்தது.. இது ஒப்பீடல்ல மாறாக ஒடுக்கப்பட்ட சமூக மேம்பாட்டில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று போராடினார் அண்ணல் அம்பேத்கர்.. ஆனால் பெரியாரின் எல்லை விரிவடைந்திருந்தது .. ஒவ்வொரு அசைவிலும் எதிர்மறையை கொண்டு .. குறிப்பாக பிராமணீயத்திற்கெதிராக அவர் நடத்திய போரில் அதிக பயனை ஒடுக்கபட்ட சமூகத்திற்கானதாக மாற்றியிருந்தார்.. இடைசாதிக்காரனை கொம்பு சீவும் பாசிசத்தை போட்டுடைத்து.. உன்னையும் தேவடியாள் மகனென்கிறானென சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டுமே இருந்தது

கல்வியை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதே  இயக்குனர் பா ரஞ்சித்

அம்பேத்கர் பார்வை செயல் போராட்டம் ..மெத்த படித்த மேதாவித்தனத்தில் விளைந்ததாகவும்.. அது குறிப்பிட்ட வரையறைக்குள் அல்லது எல்லைக்குள் நின்று போராடியது.. ஆனால் பெரியாரிய பார்வை ..பாசிசத்தை உலுக்கியது.. அதன் ஆணிவேரை அசைத்தது காரணம் அவர் மக்களோடு கலந்திருந்தார்.. செருப்பு வீசினாலும் மலத்தை அள்ளி எறிந்தாலும் அவனிடமே சென்றார்.. அவன் அறிவோடு கதைத்தார் .. அவனை தட்டியெழுப்பி கூர்தீட்டி போராட வைத்தார்.. உனக்காக தான் போராடிகிறேன் என புரியவைத்தார்.. கல்வியை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதே அதை உன்னை கரைசேர்க்குமென சொன்னார்.. உனதுரிமைக்காக நீ தான் போராட வேண்டுமென சொன்னார்.. அதாவது பாமரனோடு அவன் பாதையில் பயணித்து வெற்றிக்கண்டார்.. ஆனால் அம்பேத்கர் அதில் தான் வேறுபடுகிறார்.. அவரின் பணிகள் சட்ட போராட்டமாக.. அதிபுத்திசீவிகளோடான போராட்டமாக சட்டமியற்றுதல் நாடாளுமன்ற செயல்பாட்டில் மூலம் தன் இனத்திற்கான விடியலை அடைந்துவிடலாமென்றிருந்தது .. அது பெரிய மாற்றத்தை தராமல் போனது என்பது நிதர்சனம்.. வடமாநில தலித் சமூகம் பெரியளவில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடடைய முடியவில்லை.. தமிழகத்தில் ஒடுக்கபட்ட சமூகத்தின் நிலை .. தந்தை பெரியாரும் அவர் வழியில் பயணித்த கலைஞரின் முயற்சியால் ஒரளவு மெச்சபட்டிருப்பதை மறுக்க முடியாது முழுமையாக இல்லையென்றாலும் ..மறுக்கமுடியாத உயரத்தை அடைந்திருக்கிறார்கள்..
..
அதற்கெல்லாம் தந்தைபெரியாரின் பங்கு அளப்பரியது.. இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அல்லது மறுத்தாலும் அது தான் உண்மை .. பெரியார் இல்லாமல் போயிருந்தால் ..கடைசாதி மட்டுமல்ல இடைசாதியினர் கூட மரியாதை இழந்த நிலையில் தான் திரிய வேண்டியிருக்கும்..
பெரியாரை இவர்கள் மறுத்தாலோ அல்லது மறைக்க முற்பட்டாலோ வேண்டுமன்றே தவிர்த்தாலோ …இழப்பு அவர்களுக்குதானே தவிர..பெரியாருக்கில்லை.. இன்றைக்கு எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியத்தை தந்ததே திராவிடம் தான்.. பெரியாரை விடுத்து பீமை தூக்கிக்கொண்டலைந்தாலும் கடைசியில் கரைசேர்த்திடும் #திடலாய் இருப்பார் பெரியார்..
..  இயக்குனர் பா ரஞ்சித்
ஆலஞ்சியார் 

Comments

0 comments

Related posts

தற்கொலை எண்ணத்தை மாற்ற அறிவுரை சொல்லுங்கள்

admin

நமது flat ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது,

admin

விஜய் அஜித் ரசிகர்களே சோறு தானே திங்கிறீங்க

admin
%d bloggers like this: