இலவச மரக் கன்றுகள் வேண்டுமா? எங்க கிட்ட வாங்க!
கட்டுமானப் பொருள் ஆளுமைகள்

இலவச மரக்கன்றுகள் வேண்டுமா? எங்க கிட்ட வாங்க!

இலவச இலவச மரக்கன்றுகள்

இலவச மரக்கன்றுகள் வேண்டுமா? எங்க கிட்ட வாங்க!

இலவச மரக்கன்றுகள் வேண்டுமா? மரப் பயிர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள்… ‘தரமான மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? மரங்களை வளர்க்க யார் சொல்லிக் கொடுப்பார்கள்?’ என்று தேடி அலைவதுண்டு

அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள  தமிழக வனத்துறையின் விரிவாக்க மையங்கள், தேவையான கன்றுகளையும், மரம் வளர்ப்புப் பற்றிய தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்

இதுபற்றி தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் இருளாண்டி, மரப்பயிர் சிறப்பிதழுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன

சென்னை நீங்கலாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறையின் கீழ் வன விரிவாக்க மையம் மற்றும் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன
இங்கு வேம்பு, மலைவேம்பு, தேக்கு, மகோகனி, மூங்கில், பீநாரி (பெருமரம்), இலவு, சவுக்கு, குமிழ், புங்கன், புளி, நாவல், பலா, பெருநெல்லி, சந்தனம் என பல மரக் கன்றுகளும் கிடைக்கின்றன. என்ன வகையான கன்றுகள் தேவைப்படுகிறதோ

இலவச மாகவே கன்றுகளை வாங்கிச் செல்லலாம்

அதை முன்கூட்டியே தெரிவித்தால், உற்பத்தி செய்து தருவார்கள்.
தமிழ்நாடு உயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ‘தொகுப்பு கிராமங்கள்’ என்ற பெயரில், ஆண்டுக்கு ஆயிரம் கிராமங்களுக்கு இலவசமாக மரக் கன்றுகளை வழங்கி வருகிறோம்
சிறு-குறு விவசாயிகளுக்கு 1,000 மரக்கன்றுகள் வரையும், பெரிய விவசாயிகளுக்கு 2,500 மரக் கன்றுகள் வரையும் கொடுக்கிறோம். விவசாயிகள், அருகில் உள்ள வன விரிவாக்க மையத்தை அணுகி
அவர்களின் கிராமம், இத்திட்டத்தின் கீழ் உள்ளதா?’ என்ற விவரத்தைக் கேட்டு இலவச மாகவே கன்றுகளை வாங்கிச் செல்லலாம்
இலவச மரக்கன்றுகள் கிடைக்குமிடம்
இலவச மரக்கன்றுகள் கிடைக்குமிடம்
ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஆண்டுக்கு 25 முதல் 30 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் வரும். இத்திட்டத்தில், இரண்டு, மூன்று கிராம விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்தும் மரங்கள் வளர்க்கலாம்
செடிகளுக்கு இடையில், ஊடுபயிர் செய்வதற்கான தகவல்கள், பராமரிப்பு ஆலோசனைகள் போன்றவற்றையும் வழங்குகிறோம்
ஒவ்வொரு மையத்திலும் மரம் வளர்ப்புக்கான பயிற்சியும் நடைபெறுகிறது. அதிலும் கலந்து கொண்டு மரம் வளர்ப்புக்கான தொழில்நுட்பத் தகவல்களைப் பெறலாம்
  இலவசமாக கன்றுகள் பெறும் அனைவரும் நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல், ஒரு ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை மையத்தில் கொடுக்க வேண்டும்
அவ்வளவுதான்” என்றவர்
”மரங்கள் அறுவடைக்குத் தயாரான பிறகு, ‘பேப்பர் தொழிற் சாலைகள், பிளைவுட் கம்பெனிகளில் மரங்களின் தேவை எவ்வளவு?’, ‘தற்போது என்ன விலை?’, ‘எங்கு நல்ல விலை கிடைக்கும்?’ போன்ற தகவல்களையும் வன விரிவாக்க மையத்தில் தெரிந்து கொள்ளலாம்
மரம் வளர்ப்பு லாபத்துக்காக மட்டு மில்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவுகிறது. எனவே விவசாயிகள் முழுக்க முழுக்க வருமானமாக மட்டும் பார்க்காமல், தங்கள் நிலங்களில் ஒரு பகுதியை மரம் வளர்ப்புகென ஒதுக்கிப் பயன் பெற வேண்டும்” என்று அழைப்பு வைத்தார்!

இலவச மரக்கன்றுகள் கிடைக்குமிடம்

இலவச மரக்கன்றுகள் கிடைக்குமிடம்
இலவச மரக்கன்றுகள் கிடைக்குமிடம்
இலவச மரக்கன்றுகள்
இலவச மரக் கன்றுகள் வேண்டுமா? எங்க கிட்ட வாங்க!

[banner id=”5619″]

Find your dream property in Chennai 

Find business in your location 

Comments

0 comments

Related posts

இந்தியர்களே  தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள்

admin

திராவிடர்களுக்கு அப்படி என்ன தமிழ் மீது பற்று?- சீமான்

admin

பொற்காலத்தின் குற்றவாளி கூண்டில் பா ரஞ்சித்

admin
%d bloggers like this: