Main Menu

இளையராஜா – காப்புரிமை, ஒருசில சுருக்கமான கருத்துகள்,

இளையராஜா – காப்புரிமை, ஒருசில சுருக்கமான கருத்துகள்,

இளையராஜா

1. பாடலாசிரியருக்கும் பாட்டில் உரிமை உண்டு. இசைக்கலைஞர்களுக்கும் உண்டு. தயாரிப்பாளருக்கும் உண்டு. இளையராஜாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று அவர் சொல்வது தவறு – பல்வேறு வாதங்கள்.

அப்போது, ஏதோ ஒரு உரிமை இதில் யாருக்கோ உண்டு என்பது புரிகிறதுதானே? அந்த ராயல்டியைக் கூடக் கொடுக்காமல் SPB ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பாட எண்ணியதுதான் இங்கே பிரச்னை. இப்போது புரிகிறதுதானே? இதுதான் மிக அடிப்படையான பிரச்னை. காப்புரிமைக்கான ராயல்டியை அவர் கொடுக்க நினைக்கவில்லை. யாருக்குக் கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் secondary. கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் இங்கே பிரச்னை. அவர் கொடுக்க நினைக்கவில்லை. மொதல்ல பழத்தை டேபிள்ள வைங்கய்யா.. யாருக்கு எந்தப்பங்குன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். பழத்தை முழுசா நீங்க முழுங்குவீங்களா?

2. ஒரு பாடலின் கர்த்தா யார்? உலகின் சிறந்த பாடலாசிரியராக இருக்கலாம். இசைக்கலைஞராக இருக்கலாம். அவரை அழைத்துக்கொண்டுவந்து, இப்படி வாசியுங்கள்.. இப்படி எழுதுங்கள் என்று சொல்வது யார்? இசையை முழுதும் இவர்களை வைத்துக்கொண்டு உருவாக்குபவர் யார்? இதுதான் வித்தியாசம். ஒரு இசையமைப்பாளர் நினைத்தால் எத்தனையோ பாடலாசிரியர்களை உருவாக்கலாம். ஆனால் பாடலாசிரியரால் இசையமைப்பாளர்களை உருவாக்க முடியுமா? உருவாக்குபவர்களுக்கும் அதில் அழைப்பின்பேரில் பங்கேற்பவர்களுக்கும் இதுதான் basic வித்தியாசம்.

இளையராஜா என்று நபர் இல்லாவிட்டால் அவர் உருவாக்கிய எந்தப் பாடலும் இங்கே இல்லை. அதில் பங்கேற்றவர்கள் எல்லாம் secondary. ஒவ்வொரு பாட்டும் ஒரு உருவாக்கம். தனித்தன்மை உடைய பொருள். அது வெறும் 5mb ஃபைல் மட்டும் அல்ல. இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

3. ஒரு விஷயத்தை உருவாக்குபவர்களுக்கும், அவர்களின் அழைப்பின் பேரில் அதில் பங்கெடுப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இளையராஜா இங்கே, இந்த அனைவருக்கும்தான் ராயல்டி பகிர்ந்து அளிக்கப்படும் என்றேதானய்யா சொல்கிறார். அதை ஏன் வசதியாக மறக்கிறீர்கள்?

4. இளையராஜா செய்துகொண்டிருப்பது ஒரு யுத்தம். யுத்தத்தில் நண்பனாவது எதிரியாவது. நோக்கம் ஒன்றேதான் முக்கியம். அந்த நோக்கில் அவர் வெற்றியடைவது, பிற இசையமைப்பாளர்களுக்கும் கண்டிப்பாக முக்கியம். எல்லாருக்குமான யுத்தம்தான் இது. அந்த நோக்கம் உயரியது. நல்லது. அதைப் பாராட்டுவோம்.

5. ரஹ்மான் போன்றவர்கள் துவக்கத்தில் இருந்தே செய்வதை, இதெல்லாம் தெரியாமல்/ நேரமில்லாமல் இருந்துவிட்டு, இப்போது முழுவீச்சில் களத்தில் இறங்கியிருக்கிறார் இளையராஜா. இதில் அவர் வெற்றிபெறவேண்டும் என்றே விரும்புகிறேன். விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, இதுதான் நியாயம். யோசியுங்கள். காப்புரிமை பற்றிப் படித்துப்பாருங்கள்.

Thanks By Written on Karundhel Rajesh






Related News

%d bloggers like this:
Skip to toolbar