இஸ்லாமியர்களின் தேசப்பற்று அற்றவர்கள் | அவதூறில் 100% வெற்றி பெற்றார்கள்

இஸ்லாமியர்களின் தேசப்பற்று

காவிகளால் பரப்பப்படும் மற்றொரு விஷயம் இஸ்லாமியர்களின் தேசப்பற்று அற்றவர்கள் இந்த அவதூறில் 100% அவர்கள் வெற்றி பெற்றார்கள்
அவர்களுக்கு துணையாக சினிமாவும் ,ஊடகங்களும் ,பாகிஸ்தான் என்ற நாடும் காஸ்மீரும் பிலிம் காட்ட பெரும் வசதியாக இருந்தது
வாயளவில் பாரத் மாதாகி ஜே என்று எச்சில் தெறிக்க தொண்டை வலிக்க கத்துவதும்
ஒரு நாட்டை தேசத்தை பெண் உருவகப்படுத்தி பூஜை செய்வதுதான் தேசபக்தி என்று உருவாக்கினார்கள்

 நம் நேசத்தை காண்பிப்பதுதான் தேசப்பற்று

தேசம் என்பது நாம் பிறந்து வளர்ந்த நாடு அதன் நலனில் ,அதன் வளர்ச்சியில் நம் நேசத்தை காண்பிப்பதுதான் தேசப்பற்று
அவற்றையெல்லாம் தங்கள் பிடரிகளுக்கு அப்பால் எறிந்து விட்டு ,தங்கள் நம்பிக்கை சார்ந்த விஷத்தை விஷயத்தை தேசபக்தி என்று உருவப்படுத்தி இதை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் ஆண்டி இந்தியன் என்று கூறுவதும் அம்பட்டமான அயோக்கியத்தனம் இல்லையா
பல்வேறு சமயங்களையும் கொள்கைகளையும் கொண்ட ஒருங்கிணைத்த ஒரு நாட்டில்
இறைவனை தவிர வேறெதையும் வணங்க மாட்டேன் என்பது ஒரு சாராரின் நம்பிக்கை சார்ந்த விஷயம்
அது அவரது ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயம்
மா துஜே ஸலாம் தாய் மண்ணே வணக்கம் என்று நீ வாழும் மண்ணை வணங்கினால் மட்டுமே நீ தேசபக்தன் இல்லையென்றால் நீ தேச துரோகி என்றால் இது அநியாயம் இல்லையா !

காவி பக்தர்கள் சிந்திக்க கடமை பட்டுள்ளார்கள்

உனது நம்பிக்கையை அடித்து ஏற்றி அதை நம்பினால் மட்டுமே தேசபக்தன் என்று சொல்வது அவ்வாறு உன்னை சொல்ல வைத்த நூல் எது என்பதை
காவி பக்தர்கள் சிந்திக்க கடமை பட்டுள்ளார்கள்
நாட்டை நேசிப்பவன் நாட்டை எதிரிகளிடம் காப்பவனாக இருக்கவேண்டும்
இந்தியாவின் சுதந்திர போரில் தங்கள் சதவீதத்திற்கு மேல் இன்னுயிரை தந்து வாயளவில் இல்லாமல் செயலளவில் காட்டி நிரூபித்தவர்கள் இஸ்லாமியர்கள்
டெல்லியில் இருக்கும் இந்தியா கேட்டில் இந்த நாட்டிற்காக உயிர் நீத்த 94000 க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயரில் 63000 க்கும் மேற்பட்ட பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது இஸ்லாமியர்களின் பெயர்கள் தான்
வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த வர்களின் பெயர்களோ அல்லது கோல்வால்கர் பெயர்களோ அதில் இல்லை
இன்று தொண்டை கிழிய கத்தி தேசபக்தி பாடம் எடுக்கிறார்கள்
பாகிஸ்தான் பிரிவினையை காட்டி மற்றொரு பிலிம்
வடநாட்டில் அன்றைய இந்தியாவில் எல்லைகளை பிரித்து கொண்டபோது எல்லைக்கு அங்கிட்டு இருந்தவன் பாகிஸ்தானியாகவும் இங்கிட்டு உள்ளவன் இந்தியன் என்றழைக்கப்பட்டான்

இங்கேயே இருந்து தேசபக்தியை நிரூபித்தவர்கள் இஸ்லாமியர்கள்

பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாகி இஸ்லாமியர்கள் அனைவரும் வாருங்கள் என்றழைத்த போதும்
சப்பாத்தி திங்குற உன் நாட்டுக்கு நாங்கள் ஏண்டா வரணும் இது எங்கள் நாடுன்னு இங்கேயே இருந்து தேசபக்தியை நிரூபித்தவர்கள் இஸ்லாமியர்கள்
இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கி எல்லா யூதனும் வாருங்கள் என்றழைத்தபோது கொச்சியில் இருந்து கப்பல் புடித்து சென்ற வரலாறுகள் உண்டு
கத்துவதுதான் தேசபக்தி என்று ஆரிய விஷம் காவிகளுக்கு ஏற்றப்படுகிறது
செயல்பாட்டில் தேசபக்தியை நிரூபி என இஸ்லாம் இஸ்லாமியர்களுக்கு கற்று தருகிறது
நீ தேசபக்தின்னு உன்னை கத்த விட்டுவிட்டு அவாள் பாமெரேனியன் நாயை உதாரணம் காட்டி உன்னை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து துப்பி விட்டு தான் செல்கிறார்கள் நீயும் துடைத்து விட்டு மீண்டும் கத்தி கொண்டு இருக்கிறாய்
மும்பை: இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய முஸ்லிம்கள், இந்தியாவுக்காகவே வாழ்வார்கள், இந்தியாவுக்காகவே உயிர் கொடுப்பார்கள்
அவர்களை தவறாகப் பயன்படுத்த அல்-கய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் முயற்சி செய்தால் அது எடுபடாது என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மோடி கூறியிருந்தார்
மோடியின் கருத்துக்கு பாராட்டு தெரிவித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய முஸ்லிம் மக்களின் தேசப்பற்று குறித்து மோடி கூறியுள்ள கருத்து வரவேற்கக் கூடியது
நாட்டின் பிரதமராக உள்ளதால், அனைத்து மத, இன மக்களுக்கும் அவர் பொதுவானவர். இதனால் அவருடைய இந்துத்வா கொள்கை நீர்த்து போகாது என்று நம்புகிறோம்.
மோடி, முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை  கூறிக் கொள்பவர்கள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணமாகும்
மோடி தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு இந்திய முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் தீவிரவாத அமைப்பில் ஈடுபடுவதால் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என்று தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பாஜ, சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில், மோடிக்கு சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Thanks by Dinakaran 
#தொடர்வோம் இன்ஸா அல்லாஹ்

Leave a Reply