Skip to toolbar

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு கம்யூனிசமும் “ஹராம்” தான்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு கம்யூனிசமும் “ஹராம்” தான். உலகில் உள்ள இனவாதிகள், மதவாதிகள் எல்லோரும் தமக்குள் அடிபட்டுக் கொண்டாலும் கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
அதை நிரூபிக்கும் முகமாக, “கம்யூனிசத்தின் மறுமுகம்” என்ற பெயரில் Ahmed Jamsath Ahamedsha, பிழையான, கற்பனையான தரவுகளுடன் ஓர் அபத்தக் கட்டுரை எழுதி இருக்கிறார்.
“ஜெர்மனியில் நாஸிகள் கொன்ற யூதர்களின் எண்ணிக்கை குறைவு” என்ற புனைகதையுடன் எழுதத் தொடங்குகிறார். நாஸிகள் ஆறு மில்லியன் யூதர்களை மட்டுமல்லாது, பல இலட்சம் ஜிப்சிகளையும் கொன்று குவித்தனர்.
இவை சிறந்த முறையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. இன்றைய ஜெர்மானியர்களே ஒத்துக்கொள்ளும் உண்மையை, இவர் தனது கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக மறுக்கிறார்.
இப்போது ஒரு புதுக்கதை கொண்டு வந்து புகுத்துகிறார். //பொஸ்னியாவில் கம்யூனிஸ்டுகள் ஆடிய வெறியாட்டத்தில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களைவிட பல மடங்கு குறைவானவர்கள்தான் நாசியாக்களால் கொல்லப்பட்ட யூதர்கள்
1992 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை நடந்த பொஸ்னிய யுத்தம், கிறிஸ்தவ செர்பியர்களுக்கும், இஸ்லாமிய செர்பியர்களுக்கும் இடையிலானது. இதிலே கம்யூனிசம் எங்கே வந்தது?

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்றொரு பழமொழி இருக்கிறது. புளுகினாலும் நம்பக் கூடியதாக இருக்க வேண்டும். யூகோஸ்லேவியாவில் எண்பதுகளுக்குப் பிறகு, அதாவது டிட்டோவின் மறைவுக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் கம்யூனிசத்தை கைவிட்டு விட்டார்கள்
மிலோசொவிச் ஆட்சிக் காலத்தில் செர்பிய தேசியவாதம் புத்துயிர்ப்பு பெற்றது. கூடவே முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டன

யூகோஸ்லேவியா உடைந்த நேரம்,

முதலாளித்துவத்திற்கும், தேசியவாதத்திற்கும் இடையில் எப்போதும் ஒரு காதல் உறவு இருக்கும் ஒரு இடத்தில் அது இருந்தால் இதுவும் இருக்கும்செர்பிய பேரினவாதிகளுக்கு எதிராக தோன்றிய ஸ்லோவானிய தேசியவாதிகளும், குரோவாசிய தேசியவாதிகளும் தத்தமது பிரதேசங்களை பிரித்து தனிநாடாக்கி விட்டனர்.
யூகோஸ்லேவியா உடைந்த நேரம், பொஸ்னியாவும் தனிக் குடியரசாக பிரிந்து விட்டது. ஆனால் அங்கே ஒரு பிரச்சினை எழுந்ததுசெர்பிய முஸ்லிம்கள் அரைவாசிக்கும் சற்று அதிகமாக பெரும்பான்மை கொண்டிருந்தாலும், செர்பிய கிறிஸ்தவர்களும் சரிக்கு சமன் இருந்தனர்

பொஸ்னிய யுத்தத்தின் ஆரம்பம்

முன்னாள் யூகோஸ்லேவியாவில் முஸ்லிம்கள் தனியான தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தனர். ஆனால், செர்பிய தேசியவாதிகள் எப்போதும் அவர்களை இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் செர்பியர்களாக கருதி வந்தனர்.
முஸ்லிம் ஜனாதிபதி அலியா இசபெகொவிஷ் ஒரு மத அடிப்படைவாதியாகவும் இருந்தார். அவர் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் ஆதரவுடன், பொஸ்னியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்பினார். இது தான் பொஸ்னிய யுத்தத்தின் ஆரம்பம்
போர் நடந்த காலம் முழுவதும், “இஸ்லாமிய மயமாக்கலை தடுத்து நிறுத்துவதற்கான கிறிஸ்தவர்களின் புனிதப் போர்” நடத்துவதாக செர்பிய தேசியவாதிகள் சொல்லிக் கொண்டனர். இங்கே கம்யூனிசம் எங்கே வந்தது?
மதங்களுக்கு எதிரான இந்த மோதல் போக்கை தொடரமுடியாத ஸ்டாலின் வேறு வழிகளை தேடினார், மதங்களுக்குள் கம்யூனிச சிந்தனையை புகுத்த திட்டம் தீட்டினார்
இது என்ன பித்தலாட்டம்? சாதாரண மக்களின் மத நம்பிக்கை வேறு. அவர்கள் மீது ஆதிக்கம் செய்யும் மத அடிப்படைவாதிகளின் அரசியல் வேறு.
மத்திய ஆசியாவில் சாதாரண இஸ்லாமிய மக்களை எழுத்தறிவற்ற பாமரர்களாக ஒடுக்கி வைத்திருந்த மத அடிப்படைவாதிகள் தான் அடித்து விரட்டப் பட்டனர். அதற்குப் பிறகு தான் அங்கு வாழ்ந்த இஸ்லாமியர்கள் கல்வியறிவு பெற்று நாகரிக உலகை தரிசித்தனர்
மத்திய ஆசியாவுக்கு கம்யூனிசம் வந்திரா விட்டால், அது இப்போதும் இன்னொரு ஆப்கானிஸ்தானாக பின்தங்கி இருந்திருக்கும் அதற்காக அவர்களது மத வழிபாட்டு உரிமை மறுக்கப் படவில்லை
சோவியத் யூனியன் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும், யூத ஆலயங்களும் எல்லாக் காலங்களிலும் திறந்து கிடந்தன
பெரும்பாலும் வயதானவர்கள் மட்டும் தான் அங்கு சென்று வழிபட்டனர். இளைய தலைமுறையினரிடம் மதம் குறித்த அக்கறை இருக்கவில்லை
அதற்குக் காரணம் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மக்கள் இறைவனைத் தேட மாட்டார்கள். இது சாதாரண மக்களின் உளவியல்
இன்றும் மேற்குலக நாடுகளில் மத நம்பிக்கையாளர்கள் குறைந்தமைக்கு காரணம் வசதியான வாழ்க்கை தான்.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் கம்யூனிசம் பரவியதற்கு காரணம் ஸ்டாலினின் “சூழ்ச்சி” என்றொரு அபாரமான கண்டுபிடிப்பை செய்கிறார். இது வரலாற்றை மறைத்து, திரிபுபடுத்தி புனையப்பட்ட கட்டுக்கதை
ரஷ்யப் புரட்சி நடப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே மத்திய கிழக்கு நாடுகளில் ஐரோப்பிய காலனியாதிக்கம் ஏற்பட்டு விட்டது.
முதலாம் உலகப்போர் முடிவதற்குள் அனைத்து அரபு, முஸ்லிம் நாடுகளும் பிரித்தானியா அல்லது பிரான்சினால் நிர்வகிக்கப் பட்டன
இதற்குள் ஸ்டாலின் “சூழ்ச்சி” செய்து முஸ்லிம்கள் மத்தியில் கம்யூனிசத்தை புகுத்தி இருந்தால், அது ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே இருந்திருக்கும்.
அல்ஜீரியா, லெபனான், சிரியா போன்ற நாடுகளில் இருந்து பிரான்சிற்கு கல்வி கற்க சென்றவர்களுக்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு ஏற்பட்டது
அதே மாதிரி, எகிப்து, பாலஸ்தீனம் ஜோர்டான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு படிக்கச் சென்றவர்களுக்கு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது
அவ்வாறு தான் மேற்குறிப்பிட்ட அரபு- முஸ்லிம் நாடுகளில் கம்யூனிசம் பரவியது.ஓர் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்
முஸ்லிம்கள் என்றால் எல்லோரும் ஒன்றல்ல இஸ்லாமிய சமூகத்திலும் ஏழை, பணக்காரர் வேறுபாடு உள்ளது  முதலாளி, தொழிலாளி என்ற வர்க்க முரண்பாடு உள்ளது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை வர்க்க ரீதியாக ஒடுக்குகிறான். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது நீதியானது.
நீங்கள் “கம்யூனிசம்” என்று முத்திரை குத்தும் இந்த வர்க்கப் போராட்டம் ஆயிரம் வருடங்களாக நடக்கிறது. இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி நடந்த காலத்தில், ஈராக்கின் தெற்குப் பகுதியில் அடிமைகளின் புரட்சி வெடித்தது
அதுவும் ரஷ்யப் புரட்சி போன்றதொரு பாட்டாளி வர்க்கப் புரட்சி தான். தெரியாவிட்டால் தேடிப் படியுங்கள். இன்று நாம் சோஷலிசம் என்று சொல்லும் சமத்துவ கோட்பாடுகளை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி உள்ளனர். அவற்றையும் தேடிப் படியுங்கள்
Written by Kalaimarx

Image may contain: 1 person, text

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *