1-800-999-9999 — hi@loremipsum.com

உங்களை முட்டாளாக்கும் ஒரு பரிசோதனை கருவி

உங்களை முட்டாளாக்கும் ஒரு பரிசோதனை கருவி உனக்கு இந்த பற்றாக்குறை இருக்கிறது ..உனக்கு இந்த நோய் இருக்கிறது ..எனவே உனக்கு பக்க வாதம் வர வாய்ப்பு இருக்கிறது ..என்று பயமுறுத்த கண்டுபிடிக்கபட்ட ஒரு நோய் அறியும் கருவி என்று பெயர் சொல்கிற பித்தலாட்ட கருவிக்கு பெயர் –குவாண்டம்மேக்னடிக்ரிசொனன்ஸ்_அனலைசர் (Quantum magnetic resonance analyser –Body analyser )

1.கையில் பிடித்து கம்ப்யூட்டர் ரிபோர்ட் கொண்டு ஒரு ஏமாற்று வேலை

2.மல்டிலெவல்மார்கெட்டிங்கில் உங்களுக்கு இந்த சத்து_குறைவு அந்த சத்து குறைவு என்று பயமுறுத்த ஒரு போலி பரிசோதனை கருவி

3.மருந்து இலவசம் ஆனால் வரும்போதெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும் –டெஸ்ட்_பீஸ் ஐயாயிரம் –இது போல் நீங்கள் ஏமாந்தது உண்டா ?

4.குவாண்டம்_அனலைசர் என்னும் ஒரு ஏமாற்று பரிசோதனை கருவி

5.முழுஉடல்பரிசோதனை என்கிற பெயரில் ஒரு ஏமாற்று_கருவி .

6.நோய் அறிந்து கொள்ளும் கருவியில் ஒரு ஏமாற்று வேலை .

7.நீங்கள் இந்த ஏமாற்று பரிசோதனை கருவியால் ஏமாற்ற பட்டிருக்கிறீர்களா ?

#இந்தகருவிஎப்படி_இருக்கும் ?

கம்ப்யூட்டரோடு இணைக்க்பட்டுள்ள ஒரு கையில் பிடிக்கும் ஒரு கருவி. இதை உள்ளங்கையில் பிடித்த உடன் ..உங்கள் முழு உடலையும் ஸ்கேன் செய்வது போல் கணினி திரையில் ஒரு பீப் சத்தங்களுடன் ஒரு புகை படங்கள் மாறி மாறி வரும் ..

#48_report ,56 report என்று பக்கம் பக்கமாக ஒரு பிரிண்ட் எடுத்து தந்து அதில் உங்களக்கு அந்த சத்து குறைவு ,இந்த சத்து குறைவு ,உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை,கிட்னி ,கல்லீரல் பிரச்சனை என்று பயமுறுத்துவார்கள் .சிலர் பேப்பர் பிரிண்ட் போட சோம்பேறித்தன பட்டு –CD போட்டு கொடுக்கிறார்கள் .

#இந்தகருவியையார் யார் வைத்திருக்கிறார்கள் ?

•நாடிகளை கற்று தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிராத –கற்ற வைத்திய முறைகளில் ஒரு நம்பிக்கை இல்லாத #அரைகுறைவைத்தியர்கள்.

•அடிப்படையே தெரியாத சில அக்குபஞ்சர்_மருத்துவர்கள் –

#Food_supplement என்ற பெயரில் உங்களிடம் கொள்ளை அடிக்க மல்டி லெவல் மார்கெட்டிங் –#சதுரங்க_வேட்டை ஏமாற்று காரர்கள்

•திடீர் என்று மருத்துவர் ஆன –மருத்துவ பின் புலம் இல்லா –உடனடி காசுக்கு ஆசை படும் ஏமாற்று காரர்கள் .

•உங்களை பயமுறுத்த நினைக்கும் பேராசை காரர்கள்

#இந்தகுவாண்டம்மேக்னடிக்அனலைசர்தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்

•கையில் பிடிக்காமலும் –ரிப்போர்டை தரும் ( வீடியோ இணைக்கப்பட்டுள்ளது )

•கையில் பிடிக்கும் ராடில் –எந்த ஒரு காந்த சென்சாரும் இல்லை

•ஆணுக்கு பெண் பெயர் இட்டு –ரிப்போர்ட் எடுத்தாலும் கருப்பை வலுவில்லை என்றும் ரிப்போர்ட் வரும்

•வயது ,பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குகிற ஒரு சிவகாமி ரோபோ ஜோசியம் போன்ற ஏமாற்று மிஷின் இது

•நாய் ,பூனை கையில் கொடுத்தாலும் –இந்த பரிசோதனை மிஷின் ரிப்போர்ட் தரும் –அது மனிதன் என்று .

•நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லாத ஒரு டுபாக்கூர் சீனா தயாரிப்பு

•ரிபோர்ட் உண்மை என வாதிடுபவர்கள் –சவாலுக்கு தயாரா ? IIT போன்ற தரமான இன்ஸ்டிடியூட்டில் உண்மை என நிரூபிக்க முடியுமா ?

•யூடியூப் ,கூகிள் போன்றவற்றில் இது பொய் தான் என்பதற்கு பல வீடியோக்கள் ,மற்றும் பல ஆதாரங்கள் உள்ளது

•கையில் பிடிப்பதால் உடல் முழுவதும் ஸ்கேன் பண்ணுகிற பரிசோதனை கருவியை எந்த ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்தாலும் –நோபல் பரிசே கூட கிடைக்கும்

#இந்தகுவாண்டம்மேக்னடிக்அனலைசர்என்ன_விலை ?

வெறும் #ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்க கூடிய இந்த போலி பரிசோதனை கருவியை கொண்டு ஒரு நோயாளியை பரிசோதிக்க குறைந்த பட்சம் #முன்னூறு முதல் ஐயாயிரம் வரை வாங்குகிறார்கள் என்பது வேதனையான தகவல்

குறிப்பு –பலர் இது பொய் என தெரியாமல் ,ஏமாற்று வேலை என்று தெரியமால் பயன்படுத்தி வருகிறார்கள் .வாங்கி வைத்து விட்டோமே என்ன செய்வது என்று தெரியாமல் –இது உண்மை தான் என வாதிடுபவர்கள் மனசாட்சியை அடகு வைத்தவர்கள் ..நாடி பரிசோதனையை விட எந்த ஒரு பரிசோதனையும் நமக்கு தேவை இல்லை .

எனக்கு தெரிந்த மருத்துவர் “நான் குழந்தையின்மை ,கிட்னி பெயிலியர் ,பக்கவாதம் போன்ற நோய்க்கு இலவசமாக வைத்தியம் பார்க்கிறேன்” என்பார்;

சரி போய் தான் பார்போம் என்று, அவரது கிளை கிளினிக் சென்றால்…. அங்கே உள்ள மருத்துவர் –மருந்து இலவசம் தான் ,ஆனால் பரிசோதனை மட்டும் கட்டாயம் செய்ய வேண்டும் ,இப்போது என்ன நிலையில் உடல் நிலை உள்ளது என்று எங்களது வழியில் பரிசோதிக்க வேண்டும் என்று இந்த கையில் பிடிக்கும் –முழு உடல் டுபாகூர் பரிசோதனைக்கும் ,சில ரத்த பரிசோதனைக்கும் சேர்த்து ஐயாயிரம் கறந்து விடுகிறார்கள் என்று அவரிடம் ஏமாந்த பல நோயாளிகளும் ,அவரிடம் வேலை செய்யும் மனசாட்சியை அடகு வைத்தே வேலை செய்கிறேன் என்று கூறுகிற ஜூனியர் மருத்துவர்களும் இதற்க்கு சாட்சி .

பாரம்பரிய சிகிச்சைக்கு தக்க ஏமாற்றாத ,பொய் சொல்லாத ,பயமுறுத்தாத ,உள்ளதை உள்ளபடி சொல்லும் வாழ்வியல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். இயற்கையோடு இயைந்து என்றும் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Written by Mohamed Ali V

%d bloggers like this: