Main Menu

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள்

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள் நேற்றைய உங்களின் நேரலையில் தபோல்கர்,கௌரி லங்கேஷ் கொலைகளை சிந்தாந்த கொலைகளாக பேசுபொருளாக்கிய தேசிய ஊடகம் திருபுவனம் ராமலிங்கம் கொலையை மட்டும் தனிநபர் கொலையாக சித்தரிப்பது ஏன் என்று தமிழக ஊடகங்களை பார்த்து கேட்கிறீர்கள்

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதமென்று தலைப்பிட்டு பேசவேன்டுமென்றா? வழக்கில் கைதாகிவிட்டாலே அவர்கள்தான் குற்றவாளி என்று முடிவுக்கு வரவேண்டும் என்றா பாண்டே?

உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் ..மறைந்த ஜெயலலிதா தண்டனை பெற்ற வழக்கை கிட்டதட்ட தேசிய ஊடகங்கள் அணைத்தும் சொத்துகுவிப்பு வழக்கு என்ற சொல்லை பயன்படுத்தியபோது நீங்கள்மட்டும் அதை லாவகமாக சொத்து வழக்கு என்று மட்டுமே எழுதி பேசி வந்தீர்கள் அதை பேராசிரியர் சு.ப.வீ கூட ஒருபேட்டியில் உங்களிடம் கேள்வியாக வைத்தார் அதற்க்கு நீங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு முன் எப்படி அதை சொத்துகுவிப்பென்று நான் முடிவு செய்ய முடியும் அது ஊடக அறமுமில்லையென்று கூறினீர்கள்

நீதிமன்ற தீர்ப்புக்கு முன் ஜெயலலிதா வழக்குக்கு நிறம்பி வழிந்த உங்கள் அறம் ராமலிங்கம் கொலை வழக்குக்கு வற்றிபோனதேன் ?

அடுத்து இஸ்லாமிய இளைஞர்களுக்கு அந்தமதத்தின் பெரியவர்கள் உலமாக்கள் அறிவுரைகூறி நல்வழிபடுத்தவேண்டும் என்கிறீர்கள் 
தமிழக இஸ்லாமிய இளைஞர்கள் எல்லாமும் வழிதவறி போய்விட்டோமா இல்லை தினம் ஆளுக்கொரு கொலை கொள்ளையில் ஈடுபடுகிறோமா?

ஒரு வழக்கில் கைதானவர்களை வைத்து அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பாடமெடுக்கும் பாண்டே லங்கேஷ் தபோல்கர் பன்சாரேவை கொலைவழக்கில் கைதான ஹிந்துத்துவ தீவரவாதிகளை உதாரணம் காட்டி ஹிந்துமத இளைஞர்களுக்கு பாடம் நடத்தவில்லையே ஏன்?

அப்போதெல்லாம் ஒரு கொலைக்காக ஒட்டுமொத்த மதத்தையும் தொடர்புபடுத்துவது தவறென்று தெரிந்த உங்கள் ஊடக அறம் இஸ்லாமியர்கள் என்றதும் விடுப்பில் சென்றுவிட்டதா?

கடந்தகாலங்களில் என்னதான் நீங்கள் நடுநிலை நாடகம் போட்டு உங்களின் கருத்துக்களை வெளிபடுத்தினாலும் அவ்வப்போது உங்களுடைய வலதுசாரி கொன்டை தெரிந்துகொன்டுதான் இருந்தது 
இப்போது அதையும் கடந்து சங்பரிவார எஜமானர்களின் எச்சில் எலும்புக்காக காத்துகிடக்கும் அரண்மனை நாயாகவே நீங்கள் மாறிவிட்டது உள்ளபடி வருத்தம் தருகிறது மிஸ்டர்

Nazeer« (Previous News)Related News

ஒருமையில் பேசிய பிரேமலதா

ஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா

ஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா சில மூத்த பத்திரிகை நிருபர்கள் முகம் சுளித்தனர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. திமுக, அதிமுக என இரு தரப்பினருடன் பேசியதாக கூறப்படுவதே தவறு

%d bloggers like this:
Skip to toolbar