ஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம்! | ஏர்செல் நிறுவனம் வதந்தி

ஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம்!

ஏர்செல் நிறுவனம் தமிழர்களால், தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் துவக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அதற்கு முன்பு டெலிகாம் நிறுவனங்கள் பெரும் கட்டணம் வசூலித்து வந்தபோது குறைவான கட்டணத்தில் சேவையை துவக்கி டெலிகாம் புரட்சியை ஏற்படுத்தியது.

வதந்தி
Aircel news in Tamil

இப்போது ஏர்செல் நிறுவனத்தை பற்றி ஒரு வதந்தி கிளப்ப படுகிறது. அது என்னவென்றால் இந்த மாதத்தில் ஏர்செல் தன் சேவை நிறுத்தி விடும் என்பது தான் அது. ஆனால் இது உண்மையான தகவல் அல்ல. வேறு நிறுவனங்களால் திட்டமிட்டு இந்த வதந்தி பரப்ப படுகிறது.
ஆனால் ஏர்செல் நிறுவனத்தின் சில டவர்களில் பிரச்சினை இருப்பது உண்மைதான். அந்த பிரச்சினைகளுக்கு காரணம் சில தொழில் போட்டிகளே. அந்த பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு விட்டன, முழுமையாக சரி ஆக ஒருவாரம் ஆகும் என்று ஏர்செல் வட்டாரம் கூறுகிறது.
தமிழகத்தின் முதல் நெட்வொர்க் ஆக இப்போதும் ஏர்செல் விளங்குகிறது. நாளை ஏர்செல் போன்ற நிறுவனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டு விட்டால் ஓரிரண்டு பெரிய நிறுவனங்களே இந்த சந்தையில் இருக்கும். அப்போது அவர்கள் சொல்வது தான் கட்டணமாக இருக்கும்.
ஏர்செல் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அப்படி ஏர்செல் நிறுவனம் ட்ராய் அனுமதி பெறாமல் வெளியேறவும் முடியாது. இந்த சூழலை வெற்றி கொண்டு தமிழகத்தின் ஏர்செல் நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்.

Leave a Reply