கடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..!

கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம்

கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல போராட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பதிப்புகள் என்று தொடர் நிகழ்வுகளை நடத்திமுடித்திருக்கிறோம்.நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம்
காவேரி பிரச்சனை, கர்நாடக வெறியாட்டம், கருப்பு பண ஒழிப்பு, விவசாயிகள் தற்கொலை, இந்துத்துவ எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டங்கள், அடக்குமுறைகள், வழக்குகள், நெடுவாசல், புத்தகவெளியீடுகள், காணொளிகள், ஈழத்திற்கு எதிரான ஐ,நா தீர்மானம், மீனவர் படுகொலை, கீழடி, ரேசன்கடைகள் மூடப்படுதல் மற்றும் இதர போராட்டங்கள் என தொடர்ந்த நிகழ்வுகள் நடந்து முடிந்தவை.
அரசின் கடுமையான நெருக்கடிகள், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பான திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள், அலுவலகப் பணியில் நீடிக்க இயலாத நிலையினை சந்தித்த தோழர்கள் என பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து போராட்டங்களை தோழர்கள் அச்சமின்றி எதிர்கொண்டு முன்னகருகிறார்கள்.
இந்த ஆறு மாதத்தில் நடந்த நிகழ்வுகள் பெரும் நிதிச் சுமையை எம்மீது திணித்திருக்கிறது.
பெருமளவிலான கடனை தோழர்கள் தங்களது சொந்த பொறுப்பேற்று ’அரசியல் நிகழ்வுகள் நின்றுவிடாமல்’ சுமந்தார்கள்.
மே17 இயக்கத்தோழர்களின் சொந்த உழைப்பிலிருந்தும், மே17 இயக்க ஆதரவு சக்திகள் கொடுக்கும் உதவியிலிருந்தும், வீதியில் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து திரட்டிய நிதியிலிருந்தும் சேர்த்த நன்கொடைகள் மே17 இயக்கத்தின் கடன் சுமையையோ, இனிவர இருக்கும் நிகழ்வுகளையோ நடத்தக் கூடிய அளவில் இல்லை. இதற்கு மேலும் கடன் சுமையை சுமக்க இயலாது என்ற நிலையில் உங்களிடத்தில் நன்கொடையை எதிர்பார்த்து இப்பதிவினை செய்கிறோம்.
மே 17 இயக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், ஆதரவு நிலையினை கொண்டவர்களிடத்தில் இக்கோரிக்கையை உரிமையுடன் வைக்கிறோம்.
தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல், ரேசன் கடைகள் மூடுவது தொடர்பான மேலதிக பிரச்சாரங்கள், ஆய்வு புத்தகங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், களப்பணிகள், வழக்குகள், வழக்கறிஞர்களுக்கான நன்கொடைகள், இதழ்கள் என பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றவேண்டிய நிலையில், உங்களது நன்கொடைகள் இவைகளை முன்னகர்த்த உதவும்.
இதுவரை ஆதரவு கொடுத்துவந்த தோழர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்கொடை ஆதரவு எங்களது தொடர் பயணத்திற்கும், போராட்டத்திற்கும், வழக்குகளுக்கும், பதிப்பகத்திற்கும், பிரச்சாரத்திற்கும் பெரும் வலிமையை சேர்க்கும். மாதம் தோறும் உங்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடை தொடர்ந்து தோய்வின்றி இயங்குவதற்கு உதவியாய் அமையும்.
நன்கொடை கொடுக்க விரும்பும் தோழர்கள் கீழ்கண்ட விவரங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1. தமிழீழ குடிமக்களிடம் நன்கொடைகளை மே17 இயக்கம் பெருவதில்லை. அவ்வாறு பெருவதை அறம் சார்ந்து தவிர்க்கிறோம்.
2. புலம்பெயர் வாழ் தமிழகத் தமிழர்கள், நன்கொடையினை தமிழகத்தில் (இந்திய துணைக்கண்டத்தில்) இருக்கும் நண்பர்கள்/உறவினர் மூலமாக நன்கொடையை கொடுத்தனுப்பவும். வெளிநாட்டில் இருக்கும் வங்கிகளிலிருந்து நிதி பெருவது இயலாது.
3. உங்களது பங்களிப்பின் விவரங்கள் ( பெயர், தேதி, தொகை) ஆகியவற்றினை உடனடியாக [email protected] /9884072010 ஆகிய தொடர்புகளுக்கு தெரிவிப்பது அவசியமாகும். இத்தொடர்பின் மூலம் உங்களுக்கு செலவு கணக்குகள் அனுப்புவது எளிதாகும். (இதுவரை கணக்கு விவரங்கள் கிடைக்கப்பெறாத தோழமைகள், மீண்டுமொரு முறை மின்னஞ்சல் செய்வீர்களெனில் , செலவு கணக்குகளை அனுப்ப உதவியாக அமையும்)
வங்கி கணக்கு விவரங்கள்
Nimir Publications
Karur Vysya Bank
Ashok Nagar
C.A : A/c no : 1278115000007792
IFSC code : KVBL0001278
வங்கி கணக்கு விவரம்:
Nimir Publications
Karur Vysya Bank
Ashok Nagar
C.A : A/c no : 1278115000007792
IFSC code : KVBL0001278
*****
மேலதிக விவரங்கள் வேண்டுமெனில் மின்னஞ்சலிலோ, தனிச் செய்தியிலோ தொடர்பு கொள்ளுங்கள.
மே பதினேழு இயக்கம்
9884072010

மே17 இயக்கம்
மே17 இயக்கம்

Leave a Reply