கட்டுமானப் பொருள் சென்னை மழை தமிழக ரியல் எஸ்டேட்

கட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்

கட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்

கட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்

நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டும்போது பல்வேறு ‘(CMDA)அப்ரூவல்கள்’ பெற வேண்டியதாக இருக்கும். சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளை அமைக்க ‘என்.ஓ.சி சர்டிபிகேட்’ பெற வேண்டிய அவசியமும் உண்டு

கட்டிடத்தை அமைப்பதற்கு முன்பு கட்டுமான பணிக்கான அனுமதியை பெற சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலகத்தில் வரைபடம் சமர்ப்பித்தல் என்பது அதில் முதல்படியாகும் கட்டுமான திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்க இரண்டு விதமான படிவங்கள் உள்ளன

நில உரிமையாளர் உறுதிமொழி

அவற்றில் ‘படிவம் அ’ என்பது மனை பிரிவுகளுக்கானது. ‘படிவம் ஆ’ என்பது மற்ற கட்டமைப்புகளுக்கானது. ‘படிவம் இ’ என்பது விண்ணப்பதாரர் மற்றும் நில உரிமையாளர் தரும் பொறுப்பு உறுதிமொழி சான்றாகும்

கட்டுமான வரைபடம் சம்பந்தப்பட்ட துறையால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு கட்டுமான பணிகளை செய்ய தொடங்குவதுதான் முறையாகும் அப்படி சமர்ப்பிக்கப்படும் கட்டிட வரைபடங்களில் என்னென்ன விபரங்கள் இருக்கவேண்டும் என்பது பற்றி இங்கே காணலாம்.

வரைபடத்தின் உள்ளடக்கம்

1. கட்டிடத்தின் முழுமையான பிளான், செக்ஷன், எலிவேஷன்

2. சைட் பிளான்

3. வடக்கு திசை காட்டும் குறியீடு

4. வேலை பற்றிய முழுமையான விபரங்கள்

5. கட்டுமானம் நடக்கும் மனை அல்லது இடத்தில் சகல தகவல்கள்

6. குறிப்புகள் பற்றிய முழு விபரங்கள்

7. கட்டிட உரிமையாளருக்கு இடம் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள்

கட்டமைப்பின் விபரங்கள்  

கட்டிடத்தின் அனைத்து அறைகளின் அளவுகள், நடைபாதைகள், வராண்டா அளவுகள், கதவு, ஜன்னல்கள் அமையும் இடம் ஆகியவை இதில் குறிப்பிடப்படும்

மேலும் ‘வெண்டிலேட்டர்கள்’ அமையும் இடங்கள், தூண்களின் அளவுகள், ‘லாப்ட்’ அளவுகள், ‘போர்டிகோ’, மாடிப்படிகள் பற்றிய விபரங்கள், தரைத்தளம் அமைக்க ‘டைல்ஸ்’ அல்லது ‘கிரானைட்’ பயன்படுத்தும் விபரம் ஆகியவையும் இதில் குறிப்பிடப்படும்.

குறுக்கு தோற்ற வரைபடம்

ஒட்டு மொத்த கட்டமைப்பின் குறுக்கு தோற்றமானது வரைபட வடிவத்தில் இணைக்கப்பட வேண்டும் அதில் ஒவ்வொரு தளமும் எவ்வளவு உயரம் உள்ளது, கூரைகள் அமைப்பு, அதன் கனம், ‘பிளிந்த் ஏரியா’ உயரம், மாடிகளில் கைப்பிடிச்சுவர் உயரம், அஸ்திவாரங்கள் எவ்வளவு ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்ற விபரங்கள் இதில் இருக்கும்.

மனை அமைவிடம்   கட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்

வரைபடத்தில் காண்பிக்கப்பட்ட மனையின் அமைவிடம் எங்கு அமைந்துள்ளது என்பதை வரைபடத்தில் சரியாக காட்ட வேண்டும்

மொத்த மனையின் நீளஅகலங்கள், கட்டமைப்பை சுற்றிலும் விடப்பட்ட காலி இடம், மனை அமைந்துள்ள ஊர் மற்றும் தெருவின் பெயர், பழைய கட்டிடமாக இருந்தால் அதன் கதவிலக்கம், இல்லாவிட்டால் அருகில் இருக்கும் வீட்டின் கதவிலக்கம், வார்டு எண், மனையின் பட்டா எண் ஆகிய தகவல்கள் இதில் இடம் பெறும்.

வேலையின் உத்தேச விபரங்கள்

கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் பணியின் சகல விபரங்களையும் வரைபடத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டியது முக்கியம். புதிய கட்டிடமா? அல்லது முன்பே கட்டப்பட்டதா?, தரைத்தளங்கள், மேல் அடுக்குகளில் கட்டப்பட வேண்டியவை, இணைப்பு பகுதியாக கட்டப்பட வேண்டியவை போன்ற விபரங்கள் தெளிவாக அதில் இருக்கவேண்டும்

முன்பே ஏதாவது கட்டமைப்புகள் இருந்து அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதாக இருந்தால் அவை பற்றிய தகவல்களும் தரப்பட வேண்டும்

குறிப்புகளின் தொகுப்பு

கட்டுமான பணியில் மேற்கொள்ள வேண்டிய எல்லா வேலைகள் பற்றியும் சுருக்கமான குறிப்புகள் இதில் இருக்கவேண்டும்

கான்கிரீட் மற்றும் சிமெண்டு பூச்சு வேலைகள், தரைமட்ட வேலைகள், மரவேலைகள், பெயிண்டிங் வேலைகள், ‘சானிட்டரி’ வேலைகள், ‘கிச்சன்’ அமைப்புகள், குடிநீர் குழாய்களுக்கான அமைப்புகள்

மேல்நிலை தொட்டி, ‘செப்டிக் டேங்க்’, கட்டமைப்பை சுற்றிலுமுள்ள வடிகால் விபரங்கள், மின்சார இணைப்பு சம்பந்தமான சகல விஷயங்கள் போன்றவை பற்றி தனித்தனியாக குறிப்பு அறிக்கைகள் இணைக்க வேண்டும்

Publish Free real estate Classifieds

Comments

0 comments

Related posts

சினிமா உலகம்தான் எத்தனை நயவஞ்சகம் நிறைந்தது

admin

வீட்டு மனை வாங்கும்போது எட்டு அம்சங்களை கவனியுங்க..!

admin

கடன் உதவி-எந்த வித ஜாமீனும் இல்லாமல்

Koovam Tamil News headline
%d bloggers like this: