கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு

கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு
கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு

கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு

ட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பும் ஒன்றாக உள்ளது. வீடுகள் அமைக்கப்படும் இடம் நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும் அஸ்திவாரம் மற்றும் கட்டிடத்தின் மர அமைப்புகளை பாதிக்கக்கூடியவை கரையான்கள். ஆரம்பத்திலேயே அவற்றை தடுப்பது மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் கரையான்களால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ரசாயன பொருட்களால் பூச்சு கொடுக்கப்படும் தொழில்நுட்பம் உள்ளது. கட்டிட அஸ்திவாரங்களுக்கும் மரத்தால் செய்யப்பட்ட கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் ஆகியவற்றுக்கும் அந்த பூச்சுகளை அடித்து தருவதற்கு ஒப்பந்ததாரர்கள் இப்போது இருக்கிறார்கள்.
பழைய காலத்திலும் நமது முன்னோர்களால் கரையான் தடுப்பு முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளதை கட்டிட பொறியியல் வல்லுனர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். நமது முன்னோர்கள் கடைப்பிடித்த கரையான் தடுப்பு முறையானது இயற்கையானதாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக பழைய கால கட்டுமானங்கள் அமைக்கப்படும்போது அலமாரிகள், கதவுக்கான நிலைகள், ஜன்னல்கள் ஆகியவை பொருத்தப்படும் சமயத்தில் அவற்றின் நான்கு பக்கங்களிலும் தாமரை இலைகளை வைத்து சுவர் எழுப்பி விடுவார்கள். தாமரை இலையானது கரையான் அரிப்பதை தடுக்க கூடிய தன்மை பெற்றது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். பழங்கால வீடுகளில் தாமரை இலை வைத்து கட்டும் தொழில் நுட்பம் மட்டுமல்லாமல் வாழை இலையையும் கட்டுமானத்துக்குள் வைத்து கட்டியுள்ளனர். அதன் மூலமாகவும் கரையான் அரிப்பை கட்டுப்படுத்தியது ஆய்வில் தெரியவந்துள்ளது
Post You Ad Online   கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு

Leave a Reply