Main Menu

பத்திரப்பதிவு தடை மறுபரிசீலனை செய்யக்கோரி கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்!

 பத்திரப்பதிவு தடை

பத்திரப்பதிவு தடை

கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்:
கடந்த 09.09.16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பட்டா மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற இடைக்கால தடை யை பிறப்பித்தது. இந்த இடைக்கால  பத்திரப்பதிவு தடை யை மறுபரிசீலனை செய்யக்கோரி நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் , தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை K.கிருஷ்ணா மற்றும் அகில இந்திய லே-அவுட் ப்ரோமோட்டர்ஸ் & விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவருமான திரு,S.அன்னை சரவணன் அவர்களும் மற்றும் அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள நமது அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான திரு.S.மணிவண்ணன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் W.M.P NO:30160 / 2016 மூலமாக IMPLEAD மனுசெய்ய்யப்பட்டுள்ளது என்பதனை நாம் அறிவோம். மேலும் மற்ற ரியல் எஸ்டேட் சங்கங்களின் சார்பிலும் போடப்பட்ட மனுக்களின் வழக்கு விசாரணை வருகின்ற 21.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறயிருக்கின்றது. இந்த விசாரணையின் முடிவு பொதுமக்களுக்கும், நம் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற 18.10.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு சென்னை பாரிஸ் சிங்காரவேலன் மாளிகை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பட்டா நிலங்களை வைத்துள்ள அனைத்து பொதுமக்களும், லட்சியம் கொண்ட அத்துனை ரியல் எஸ்டேட் நண்பர்களும், ரியல் எஸ்டேட் தொழில் புரியும் தொழிலாளர்களும், கட்டிட தொழிலாளர்களும், பத்திரப்பதிவு செய்யும் எழுத்தாளர்களும், அதை சார்ந்துள்ள தொழிலாளர்களும், தச்சு தொழிலாளர்களும் மட்டும் ரியல் எஸ்டேட் தொழிலை சார்ந்த அனைத்து வகையான தொழிலாளர்களும் கலந்துகொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை ரத்து செய்ய நாம் ஒன்று கூடி போராடி வெற்றி பெறுவோம். ” ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்னும் கூற்றுக்கிணங்க தங்கள் அனைவரின் ஓத்துழைப்புடன் ஒற்றுமையாக செயல்பட்டு நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்.

இப்படிக்கு
அகில இந்திய ஊடக பிரிவு செயலாளர்
பெரம்பூர் S. ஸ்ரீதர்






Related News

%d bloggers like this:
Skip to toolbar