நடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன்

     நடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன்

நடிகர் கலாபவன் மணி அவர்கள்
குறுமதியாளர்கள் சிலரால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற செய்தியினை நாம் அனைவரும் அறிவோம் !
பொதுவாக நடிகர் நடிகைகளின் விடயத்தில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை !
எனினும்


சினிமாத்துரையிலுள்ள சில நல்லவர்களைப் பற்றி நான் செய்திகள் வாயிலாக கேட்டு அறிந்து இருக்கின்றேன்.
இந்த வகையில் …….
நடிகர் கலாபவன் மணியின் குணாதிசம் பற்றி நான் அறிந்தது.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு, நானும் எனது நண்பனும் சகோதரனுமான தோக்காலன் அப்துல் காதாருடன் மனைவி குழந்தைகள் சகிதமாக குடும்பத்தோடு கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம் !
அதிரப் பள்ளியிலிருந்து வரும் வழியில் சாலக்குடி வழியாக வந்து கொண்டிருக்கும் போது, அப்துல் காதரின் மச்சான் (கம்பத்தைச் சார்ந்தவர்)
அங்கு துணி வியாபாரம் செய்து வருகின்றார்.
அவரை சந்திப்பதற்காக அவருடைய
வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டைச் சார்ந்த ஒரு அம்மா எங்களின் அருகில் இருந்து மிகுந்த வாஞ்சையுடன் பேசினார் .
நாங்கள் தின்பதற்கு பண்டங்கள் கொண்டு வந்து தந்தார். மேலும் சர்வ எழிமையாகவும் காணப் பட்டார்.
யார் இந்த அம்மா ? ஆச்சர்யத்தோடு பார்த்த எனக்கு ……
நண்பரின் மச்சான் சொன்னார் :- இந்த அம்மா சினிமா நடிகர் கலாபவன் மணியின் தாயார் ஆவார். எனது வீட்டை அடுத்துள்ள வீடுதான் அவர்களுடையாது. நான் குடியிருக்கும் இந்த வீடும் இப்போது அவர்களுடையதுதான்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு பணக் கஷ்டம் ஏற்பட்ட போது,
இந்த வீட்டை மணிக்கு விற்று விட்டேன்.
நான் வீட்டை காலிபண்ணும் போது, என்னை தடுத்து, உனக்கு கஷ்டமான சூழ்நிலையால் எனக்கு விற்றாய் !    நடிகர் கலாபவன் மணி  மிகச் சிறந்த மனிதன்
ஆண்டவன் அருளால் ” உன்னை வீட்டைவிட்டு வெளியேறும்படி சொல்லும் நிலையில் நான் இல்லை.
நீ எனது பக்கத்து வீட்டுக் காரன். நீ எனக்கு சொந்தம். ஆகையால் …
உனக்கென்று சொந்தமாக வேறு வீடு வாங்கிய பின்போ அல்லது நிரந்தரமாக
நீ தமிழ் நாட்டில் குடியேறுவதாக இருந்தாலோ மட்டுமேதான் ,
நீ இந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் !   நடிகர் கலாபவன் மணி  மிகச் சிறந்த மனிதன்
என்றும் கலாபவன் மணி சொன்னார்.
மேலும் என்னிடம் வீட்டிற்கு வாடகை கூட வாங்குவதில்லை !
என்று மிகவும் மகிழ்ச்சியோடும், நன்றிப் பெருக்கோடும் சொன்னார்.
அப்போது எனக்குப் புரியவில்லை கலாபவன் மணியை பற்றி.
இப்போது புரிகின்றது கலாபவன் மணி, ஒரு மனித நேயமிக்க, நேசம் பாராட்டும் மிகச் சிறந்த மனிதனென்று !!!  நடிகர் கலாபவன் மணி  மிகச் சிறந்த மனிதன்
அன்புடன் :- கேஎம் ஜாஸ் மைதீன். 28/03/2016. Post Your Free Ads

Kunnisseri
Veettil
Raman

Mani (1 January 1971 – 6 March 2016), better known by his stage name

Kalabhavan

Mani, was a South Indian film actor and singer. Mani started his career as a mimicry artist with the

Kalabhavan

troupe. He has starred in over 200 films, including Malayalam, Tamil, and Telugu films, and is renowned for his humorous character and, and villain roles. He received the National Film Award – Special Jury Award and Kerala State Film Award for his performance as Ramu in Vasanthiyum Lakshmi yum Pinne Njaanum

(1999)