கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா

கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா

கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா என சிலர் கூவுகிறார்கள் பரிதாபம் தோன்றுகிறது  யாரிவர்கள் அரசியல் அறியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நீந்திக்கொண்டே ஆழ்கடலின் ஆழம் தெரியாமல் கதைக்கிறார்கள்
..
கலைஞரை போன்ற ஒருவரை தமிழக அரசியல் இதுவரை கண்டதில்லை என்ற யதார்த்தம் கூட அறியாத அறிவிலிகள்

பகுத்தறிவு பகவலனின் பார்வைகொண்ட அஞ்சாநெஞ்சன்இவர்

அவரின் நிழலை கூட நெருங்க முடியாதென தெரியாமல் உளறுவது காலக்கொடுமை இந்திய துணைகண்டம் கண்ட ஒப்பற்ற தொலைநோக்கு அரசியல்வாதி சமூகநீதியை கையிலேந்தி பாசிசத்திற்கெதிராக வாள் சுழற்றியவர்
 அவர் தொடாத துறையில்லை பல்வேறு தளங்களில் தன் ஆளுமையை பறைச்சாற்றியவர் ..பன்முக ஆளுமை ஒவ்வொன்றிலும் பேராளுமை
கொண்ட கொள்கையில் சமசரமற்ற தெளிவான பாதை பகுத்தறிவு பகவலனின் பார்வைகொண்ட அஞ்சாநெஞ்சன்இவர் ஆற்றிய சமூக அரசியல்பணிகள் காலங்கடந்தும் இ்ந்தியா முழுவதும் இப்போதும் பேசபடுகிறது
வியப்போடு அரசியல்நோக்கர்கள், ஆய்வாளர்கள் அறிவுடை சான்றோர்கள் சாமானியர்கள் பார்க்கிறார்கள் இவரின் ஒற்றை வார்த்தை இந்த சமூக அவலங்களை புரட்டி போட்டுவிடும் ஆளும் அரசுகள் நடுங்கும்
பாசிசம் குலைநடுங்கி நின்றதெல்லாம் வரலாறு  தெளிவான அரசியல் அரிச்சுவடி இவரை படிக்காமல் அரசியலில் நிலைக்க முடியாது எதிர்த்தோ ஆதரித்தோ தான் இந்திய அரசியலே ஐம்பதாண்டு நகர்ந்தது 
உள உறுதியோடு ஜனநாயகதிற்கெதிரான செயல்கண்டு அஞ்சாமல் எதிர்த்துநின்று போராடும் குணம் இந்திய அரசியலிலேயே இப்படியொரு தலைவனை காண்பதறிது ..
விமர்சனங்களை காழ்ப்புணர்ச்சிகளை கண்டு அலட்டிக்கொள்ளாமல் “அறம்வெல்லும்” என்று நடைபோட யாரால் முடியும் 

எத்தனை சூழ்ச்சிகள்,துரோகங்கள் அத்தனையையும் தன் அறிவால் வென்றவர் .. இவரோடு ஒப்பீடென்பதே அறியாமையில் வருவது 

அரசியல் சாதீய அடுக்களுக்கெதிரான போராடல் திருமா

திருமா என்றில்லை யாராலும் நிரப்ப முடியாது ஆர்வமிகுதியில் உளறுவதை திருமாவே விரும்பமாட்டார்  சனாதன எதிர்ப்பில் உறுதியும் பகைவரையும் எதிர்கருத்தாளர்களையும் மதித்தல் என சிலவிடயங்களில்கலைஞரை ஒத்திருக்கிறார் மறுப்பதற்கில்லை கலைஞரின் பாதிப்பில்லாமல் எந்தவொரு அரசியல்வாதியும் இல்லை .. சனாதன எதிர்ப்பென்பது தான் அவரது அடிப்படை அரசியல் சாதீய அடுக்களுக்கெதிரான போராடல் ..
திருமாவின் அரசியல் என்பது சமூகநீதி அமர்ந்து பயணித்தாலும் சாதீய குறுக்கீடுகளிலிருந்து மீறி வர எக்காலத்திலும் முடியாது இன்றைக்கும் இதுதான் நிலை என்பதை அனைவரும் அறிவர் அதையும் மீறி கொண்டாட என்ன காரணம் .. ஒடுக்கபட்ட மக்களின் குரலாய் இருப்பதுதான்

நிறைய பேர் தலித் அடையாளங்களோடு வந்தாலும் குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி பயணிக்க முடியவில்லை அதை திறம்பட கையாண்டாடு தம் மக்களால் கொண்டாடப்படுகிறவராய் இருப்பது தான் திருமாவின் வெற்றிக்கு பின்னில் 
தனித்து களம் கண்டால் நிலைமை வேறுமாதிரியாகவே போகும் இதையெல்லாம் அறியாதவர்களில்லை ஆனாலும் புகழ வேண்டுமென்பதற்காக எதையாவது சொல்லி வைப்போமென கதையளக்கிறார்கள்
கலைஞர் பெருமகனிடத்தில் ஏன் நீங்கள் பிரதமராக கூடாது என கேட்டபோது “என் உயரம் எனக்கு தெரியும் ” என்றார்  அதே தான் ஒவ்வொருவரும் அவரவர் உயரம் அறிந்திருந்தல் நன்று ..
..
ஆலஞ்சியார்

Leave a Reply