Skip to toolbar

காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.

காஷ்மீரின் களநிலவரம் தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து மாநிலத்தை பிளவுபடுத்திய பின்னர் காஷ்மீரின் உண்மை நிலவரம் கண்டறிய கடந்த ஆகஸ்ட் 7 முதல் 13 வரை5 நாட்களுக்கு காஷ்மீரில் முகாமிட்டிருந்தனர்.
கீழுள்ள ஆக்கம் பிரபல ஆங்கில நாளிதழான ஹஃ ப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானது.கீழுள்ள செய்தி கவிதா கிருஷ்னன் மற்றும் நிருபருக்கு மத்தியில் நடந்த உரையாடலாகும் .
அவர் அங்கு கண்ட காட்சிகளை  ..

“காஷ்மீர் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக் அல்லது பாலஸ்தீன பகுதியை போன்று காட்சி அளித்தது” என்று வர்ணித்துள்ளார்.

அங்கு நீங்கள் கண்டதை வர்ணியுங்கள் ?

காஷ்மீரில் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது . ராணுவ முற்றுகையின் கீழ் மக்கள் உள்ளனர். காஷ்மீரின் ஒவ்வொரு தெருக்களிலும், வீடுகளிலும் அனைத்து பகுதிகளிலும் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.  யாரும் கருத்து சொல்லவோ , அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கோ எந்தவிதமான அனுமதியும் இல்லை.

HuffPost India
@HuffPostIndia “Frankly, it looked like occupied Iraq or occupied Palestine,” @kavita_krishnan told @betwasharma after returning from a fact finding mission to newly-bifurcated Kashmir, which is still under a communication shutdown. http://huffp.st/0nJBC5C 
கவிதா கிருஷ்ணன்

Children Arrested In Kashmir, Says Activist Kavita Krishnan After Fact Finding Mission

Krishnan from the CPI(ML), economist Jean Dreze and Maimoona Mollah of AIDWA spent five days in Kashmir after the government nullified Article 370 in Jammu And Kashmir, and bifurcated the state.

huffingtonpost.in 202

168 people are talking about this

காஷ்மீர்-நள்ளிரவில் சிறுவர்கள் கைது’! -‘மானபங்கம் படுத்தபடும் பெண்கள்

பெருநாள் அன்றைய தினத்தில் காஷ்மீர் முற்றிலும் உயிரற்று காணப்பட்டது. சின்னஞ்சிறு சிறுவர்களைத் தவிர வேறு எவரும் புத்தாடை அணிந்து இருக்கவில்லை. மக்கள் கிராமப்புறத்தில் உள்ள தங்கள் பள்ளிவாசல்களுக்கு கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை. பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் இருந்தும் மக்கள் தங்களின் வீடுகளிலேயே தொழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்கின்றார்கள். தங்களுக்கு உதவுவதற்கு எவருமில்லை என்று பெரும் விரக்தியில் உள்ளனர்.

முழு காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் ஒருவர் கூட மோடி அரசாங்கத்தின் முடிவை மகிழ்ச்சியாக ஏற்று கொண்டதாக தெரியவில்லை . காஷ்மீரில் தற்போது உள்ள சூழலை குறித்து இந்திய ஊடகத்தின் சித்தரிப்பு மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.
“அனைவரும் காஷ்மீருக்கு ஒரு மிகப்பெரிய நன்மை நடந்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால் இது யாருடைய திருமணம்? அதை யார் கொண்டாடுகிறார்கள்?  எங்களின் திருமணம் என்றால் எங்களிடம் தான் மகிழ்ச்சியாக உள்ளோமா ? என்று கேட்கப்பட வேண்டும். அது எப்படி ..?

The Princess@rajakumaari
View image on Twitter
காஷ்மீர் அங்குள்ள ஊரடங்கு உத்தரவை பற்றி..?

அங்கு மிகவும் கொடுமையான முறையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தங்கியிருந்த  ஸ்ரீநகர் ராஜ்பாக் வீதியிலும்..  ஈது பெருநாள் அன்றும் கூட ஊரடங்கு உத்தரவு முழு அமலில் கடுமையான முறையில் காணப்பட்டது. காஷ்மீர் மக்கள் இதை தங்களுக்கு எதிரான ஒரு தாக்குதலாகவும் , ஆக்கிரமிப்பாகவும் உணர்கிறார்கள்.

அங்குள்ள காஷ்மீர் பண்டிட்டுகளிடம் பேசினீர்களா?

ஆம் . அங்கு பல காஷ்மீரி பண்டிட்ககளிடம் பேசினோம். இது குறித்த காணொளி ஆவணமும் எங்களிடம் உள்ளது. அதில் பேசிய ஒரு காஷ்மீரி பண்டிட் ” காஷ்மீரியத்”  என்பது உணரப்பட கூடிய ஒன்றாகும். ஈது பெருநாள் எங்கள் அனைவரின் பண்டிகை. மிக விரைவில் எங்கள் பண்டிகை நேரம் வரும்” என்று  கூறினார்.

சமீபத்தில் பிபிசி கஷ்மீர் மக்கள் நடத்திய மிகப் பெரும் போராட்டம் குறித்த வீடியோவை மோடி அரசாங்கம் மறுத்துள்ளதே ? அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் மட்டுமே போராட்டம்  நடந்ததாகவும், காஷ்மீரில் முழு அமைதி நிலவி வருவதாக தெரிவித்துள்ளதே ?

ஆம் உண்மைதான் . போராட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் நடந்து வருகிறது. ஏனெனில் போராட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.  ஆனால் ஸ்ரீநகரில் உள்ள சௌரா என்ற பகுதியில் மிகப்பெரிய ஒரு போராட்டம் நடந்தது உண்மைதான். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி சரியானதுதான். எந்தவித போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் வீதியோரம் நின்றிருந்தும் பெள்ளட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களை சந்தித்தோம். அவர்களில் சில சிறுவர்களையும் சந்தித்தோம். மக்களின் கண்களை குருடாக்கி வாயை மூடி விட்டு அங்கு எந்த வித போராட்டமும் நடைபெறவில்லை என்று கூறி கடந்து சென்று விட முடியாது.

காஷ்மீரில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று இருந்தோம். அங்கு பல சிறுவர்களை போலீசார்  கடத்தி (abducted) சென்றுள்ளனர் ! இதை வேறு எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நடு இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று சட்டவிரோதமாக இராணுவ முகாம் பகுதிகளிலோ அல்லது காவல் நிலையங்களிலோ அடைத்து வைத்துள்ளனர். அங்கு அவர்கள் தாக்க படுகின்றார்கள்.

வீட்டிலிருந்து அழைத்து செல்லப்பட்ட சிறுவர்கள் மீண்டும் வீடு திரும்புவார்களா  அல்லது அப்படியே காணாமல் போய் விடுவார்களா என்பதை அறிந்துகொள்ள பெற்றோர்களுக்கு ஒரு வழியும் இல்லை. முதல் தகவல் அறிக்கையோ வேறு எந்த ஒரு வழக்கோ பதிய படுவதும் கிடையாது.நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களிலும் இவ்வாறு பலர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை கைது  செய்யப்பட்டதாக கூறுகிறீர்கள்?

ஒரு சிறுவன் மட்டுமில்லை. நாங்கள்  கைது செய்யப்பட்ட 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை சந்தித்தோம்.அச்சிறுவன் தன்னை விட சிறு வயதில் உள்ள பலர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவித்தான் !.

சின்னஞ்சிறு சிறார்களை எல்லாம் எதற்கு  கைது செய்யவேண்டும்.?

மக்களை மிரட்டி வைக்க தான் . கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்.. சிறுவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில்… வீடுகளிலில் தங்கள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது .. என இப்படி பட்ட வேலைகளில் எங்கள் பிள்ளைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யார் மீதும் கற்களை எரிந்திடவும் இல்லை.இவ்வாறான கைது நடவடிக்கைகள் அங்குள்ள பெண்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்குகிறது.

ஒரு சில பெண்கள் காதை கடிக்கும் விதத்தில்.. இவ்வாறான திடீர் இரவு சோதனைகளின் போது தங்களை மானபங்கம்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களிலும் இதுதான் நிலை.

என் கேள்வி என்னவென்றால் .. இந்த இந்திய மீடியாக்கள் என்ன செய்கின்றன? ஏன் இங்கு வந்து இங்குள்ள நிலைகளை செய்தியாக வெளியிடுவது இல்லை?  எங்களால் இப்பகுதிகளை வந்தடைய முடிந்துள்ளதே !

இது மிகவும் கடுமையான செய்தி! இப்படிபட்ட குற்றச்சாட்டிற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

ஆம். எங்களிடம் குடும்ப உறுப்பினர்களின் வீடியோ பதிவை ஆவண படுத்தி வைத்துள்ளோம் அதில் முந்தய நாள் விடுவிக்கப்ட்ட சிறுவன் ஒருவனின் செய்தியும் காணொளி யாக உள்ளது ..
இங்கு கூறப்பட்ட, கூறப்படவிருக்கும் செய்திகள் கண்களை ஈரமாக்காமல் இருக்காது.எனினும் நாம் அறிந்தவரை இத்துணை முக்கிய செய்தியாக இருந்தும் இதை எந்த ஒரு பெரிய ஊடகமும் பெட்டி செய்தியாக கூட பிரசுரிக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாகும்
காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன் Thanks By 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *