Skip to toolbar

நாகை: ஜூன் 23 நாகை அரசு பொது மருத்துவமனைக்கு குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்
புதிதாக திறக்கப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்கான கியூமோதெரபி வார்டு, ICU வார்டு ஆகியவற்றையும் பார்வையிட்டார்
பிறகு ஒவ்வொரு வார்டுக்கும் சென்று நோயாளிகளை நலம் விசாரித்தவர், எல்லோருக்கும் குடிநீர் வசதிகள் கிடைக்கிறதா? எனக் கேட்டறிந்தார். அவர்கள் தடையின்றி குடிநீரும், தேவைகளுக்கான தண்ணீரும் கிடைப்பதாக கூறினர்
குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு
ஒவ்வொரு வார்டிலும் குடம் மற்றும் கேன்களில் 25 லிட்டர் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தனது MLA மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் குறித்தும் ஆய்வு செய்தார் அதில் தினமும் ஒரு மணி நேரத்திற்கு 250 லிட்டர் குடிநீர் கிடைப்பதாகவும், அது நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அது போல் கிட்னி டயாலிஸிஸ் செய்யும் நோயாளிகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடின்றி தண்ணீர் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை அவர்களிடம் உறுதிபட , MLA கூறினார்.
இம் மருத்துவமனையில் தினமும் உள் நோயாளிகள் 400 பேரும், வெளி நோயாளிகள் 2200 பேரும் கிசிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு நகராட்சி பொறியாளர் (ME) ரவிச்சந்திரன் அவர்கள்,இங்கு டேங்கர் லாரி மூலம் கூடுதல் குடிநீர் கொண்டு வரப்படுவதை தெரிவித்தார். இன்று காலையும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுத்ததை கூறியவர், தற்போது இன்னொரு டேங்கர் லாரியில் தண்ணீர் வந்திருப்பதை கூறியதும், MLA அவர்கள் அங்கு சென்று , தண்ணீர் நிரப்பப்படுவதை பார்வையிட்டார்குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு
பிறகு அங்கு செய்தியாளர்களை சந்தித்தவர், GH ல் 8 கிணறுகளும், 10 ஆழ்துளை குழாய்களும் இருப்பதால், அதன் வழியாக தினமும் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுவதாகவும், பற்றாக்குறைக்கு நகராட்சி டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும் கூறினார்.
மேலும் தற்போது இங்கு ஏழு மழை நீர் தொட்டிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், எதிர்கால தேவைக்காக புதிதாக 5 மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்படும் என்றும் கூறினார்.
அப்போது நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் முருகப்பன் மற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் உடனிருந்தனர்.
தகவல்,
#நாகைசட்டமன்றஉறுப்பினர்_அலுவலகம்
23.06.19

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *